12-03-2019, 11:01 AM
"சரி விடு.. தூங்கலாம் வா..!! காலைல திருவிழா.. சீக்கிரம் வேற எந்திரிக்கனும்..!!"
"ம்ம்.. ஆமாம்..!!"
"வா.. நெஞ்சுல சாஞ்சுக்கோ.. தட்டிக் குடுக்குறேன்.. நிம்மதியா தூங்கு..!!"
"ம்ம்..!!"
சிபி படுக்கையில் சரிந்துகொள்ள.. ஆதிரா அவனது மார்பில் படர்ந்துகொண்டாள்..!! மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சிபி.. அவளது வெற்று முதுகை பிசைந்து, இதமாக தடவிக் கொடுத்தான்.. அவளுடைய நெற்றியில் ஈரமாக 'இச்' பதித்தான்..!!
"மனசைப் போட்டு கொழப்பிக்காத ஆதிரா..!! இன்னும் ரெண்டு நாள்.. எதைப்பத்தியும் யோசிக்காம, ஜஸ்ட் திருவிழாவை மட்டும் செலிப்ரெட் பண்ணு..!! ரெண்டு நாள் முடிஞ்சதும்.. இந்த ஊரை காலிபண்ற வழியை பார்ப்போம்..!! புரியுதா..??"
"பு..புரியுதுத்தான்..!!"
"ம்ம்.. இப்போ சமத்தா தூங்கு..!! செல்லம்ல.. குட்டிப்புள்ளல..??"
ஒரு குழந்தையை உறங்க வைப்பதுபோல, கணவன் தனது முதுகை சுகமாக தட்டிக்கொடுக்க.. மூளையை ஆக்கிரமித்திருந்த குழப்ப நினைவுகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு.. அவனது மார்பிலேயே நிம்மதியாக உறங்கிப் போனாள் ஆதிரா..!!
அவள் உறங்குகிறவரை தானும் இமைமூடி படுத்திருந்த சிபி.. அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதியானபிறகு.. மெல்ல மெல்ல விழிகளை திறந்தான்..!! மனைவியின் உறக்கம் கலைக்காமல் அவளை மெத்தைக்கு மாற்றிவிட்டு.. இவன் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.. அருகில் கிடந்த நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டான்..!! இரவுவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த மனைவியின் முகத்தையே.. சலனமில்லாமல், கூர்மையாக, ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!
அத்தியாயம் 18
அடுத்தநாள் காலை ஆரவாரமாக விடிந்தது.. அகழி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! கோயிலை சுற்றிலும் மாக்கோலமும், மாவிலை தோரணங்களும்.. கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் கோவிந்தராஜனின் கணீர் குரல்..!!
"சின்னஞ்சிறு பெண் போலே..
சிற்றாடை இடை உடுத்தி..
சிவகங்கை குளத்தருகே..
ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்..!!"
வெள்ளையும் காவியுமாய் புதுவர்ணப் பூச்சோடு கோயில் சுவர்கள் பளபளத்தன.. பக்கத்திற்கு ஒன்றாய் பச்சை வாழையுடன் கோயிலின் வாயில்..!! வாயிலில் இருந்து நீண்ட சாலையில் புதிது புதிதாய் நிறைய கடைகள் முளைத்திருந்தன.. பலூன் கடை, பாப்கார்ன் கடை, வளையல் கடை, வாழைப்பழ கடை.. எல்லா கடைகளின் முன்பாகவும் மக்கள் கூட்டம்..!! குழந்தைகளை ஏற்றிக்கொண்டு குடை ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருந்தது.. கன்னியரை சைட்அடிக்கிற காளையர் கூட்டம் ஒன்றும், ராட்டினத்துக்கு போட்டியாய் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தது..!!
ஆண்டு முழுதையும் ஒருவித அழுத்தத்திலேயே கழிக்கிற அகழி ஜனங்கள்.. இறுக்கம் தளர்ந்து சற்று சிரிக்க நினைக்கிற இரண்டு தினங்கள் இவை..!! வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு பங்குனிப் பொங்கல்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற உற்சவம்.. வேறூருக்கு பிழைக்க சென்றிருப்பவர்கள்கூட சொந்தஊருக்கு வந்தடைகிற சமயம்..!! போன வாரமே காப்பு கட்டியாயிற்று.. இந்த இரண்டு தினங்கள் இன்னும் விசேஷமானவை..!!
ஊர்மக்களில் கணிசமான விழுக்காட்டினர் புத்தாடை அணிந்து வலம்வந்தனர்.. எல்லோர் முகத்திலும் ஒரு இயல்பான மலர்ச்சியை காணமுடிந்தது..!! பெரியவர்களை காட்டிலும் சிறுசுகளிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.. கோயிலுக்கு முன்பு கொட்டிவைத்திருந்த மணலில், கும்மாளமாக குதித்து விளையாடின குழந்தைகள்..!!
அந்த குழந்தைகளிடம் இருந்த உற்சாகத்தின் ஓரளவு.. தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த ஆதிராவிடமும் காணப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்..!! நேற்றுமுழுதும் மனதை சூழ்ந்திருந்த குழப்பமேகம், இன்று சற்றே கலைந்து விலகியிருந்தது.. ஷவரில் கொட்டிய வெதுவெதுப்பான நீரை அண்ணாந்து வாங்கிக்கொண்ட அவளது முகத்திலும் ஒருவித தெளிவை உணரமுடிந்தது..!! ஊரில் திருவிழா என்ற உள்ளுணர்வுதான் அவளது அந்த உற்சாகத்தின் ஊற்றுக்கண்..!! சிறுவயது முதலான திருவிழா தொடர்பான நினைவுகள் எல்லாம்.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் முண்டியடித்து கிளம்பின..!!