12-03-2019, 11:00 AM
குட்டி ஆதிரா இப்போது அந்தக்குகைக்குள் நுழைந்தாள்.. ஒவ்வொரு அடியாக நகர்ந்து இருளுக்குள் முன்னேறினாள்..!! அவளது நெஞ்சுக்குழி பயத்தில் பதறியடித்துக் கொண்டிருந்தாலும்.. தங்கையை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்று அவளுக்குள் ஒரு தீவிரம்..!!
"நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??" - திடீரென காதுக்குள் ஒலித்த தாமிராவின் குரல்.
இருட்டுக்குள் கைகளை அலையவிட்டவாறே.. அடிமேல் அடிஎடுத்து வைத்து மெல்ல மெல்ல உள்நடந்தாள்.. அவ்வப்போது ரகசிய குரலில் தங்கையை அழைத்தாள்..!!
"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"
குகைக்குள் இப்போது திடீரென ஒரு வெளிச்சக்கீற்று.. சுற்றிலும் அடர்இருள் ஆக்ரமித்திருக்க ஓரிடத்தில் மட்டும் சரக்கென ஒரு வெளிச்சம்.. அவ்விடத்தில் யாரோ ஒரு பெண்ணின் முகம்.. யாரென்று இங்கிருந்து தெளிவாக தெரியவில்லை..!! ஆதிரா அந்தப்பெண்ணை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!!
"தாமிராஆஆ..!!"
ஆதிரா அருகில் நெருங்க நெருங்க.. அந்தப்பெண்ணின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவானது..!! தாமிராதான் அது..!!! குட்டிப்பெண்ணாய் அக்காவின் முதுகுதொட்டு காட்டுக்குள் ஓடியவள்.. இப்போது கன்னிப்பெண்ணாய் இவள் கண்களுக்கு காட்சியளித்தாள்..!! தங்கையைப் பார்த்த மகிழ்ச்சியில்.. 'தாமிரா' என்று கத்திக்கொண்டே.. எட்டுவயது ஆதிரா உற்சாகமாக அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ எந்தவித சலனமும் இல்லாமல் மிரட்சியாக இவளையே பார்த்தாள்.. இமைகளை அகலமாக திறந்து வைத்திருந்தவள்..
"அக்காஆஆ..!!" என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்..!!
ஆதிரா எதுவும் புரியாமல் தங்கையையே பார்த்துக் கொண்டிருக்க.. இப்போது தாமிராவின் முதுகுப்புறம் இருந்து அந்த உருவம் வெளிப்பட்டது..!! அடையாளம் காணமுடியாத மாதிரி.. தெளிவில்லாத மசமசப்பான உருவம்..!! அந்த உருவத்தை பார்த்ததும் ஆதிராவின் இருதயத்தில் பக்கென்று ஒரு பயம்.. கத்தவேண்டும் போலிருந்தது.. கத்தவும் செய்தாள்.. சத்தம்தான் வெளியே வரவில்லை..!!
தாமிரா மட்டும் தொடர்ந்து பரிதாபமாக அக்காவை அழைத்துக் கொண்டே இருந்தாள்..!!
"அக்காஆஆ..!! அக்காஆஆ..!!"
ஆதிரா இப்போது ஒருகையை உயர்த்தி.. நடுங்குகிற விரல்களை விரித்து.. மெல்ல மெல்ல அசைத்து.. தங்கையை அணைத்திருந்த அந்த உருவத்தை தொட முயன்றாள்..!! அவளுடைய விரல்களுக்குள் எதுவும் சிக்கவில்லை..!!
"அக்காஆஆ..!!"
ஆதிரா இப்போது இமைகளை விரித்து விரித்து.. விழிகளை கசக்கி கசக்கி.. மிகவும் கஷ்டப்பட்டு அந்த உருவத்தின் முகம்காண முயன்றாள்..!! எவ்வளவு முயன்றும் அந்தமுகத்தை இவளால் தெளிவாக பார்க்க முடியவில்லை.. இறுதிவரை மசமசப்பாகவே இருந்தது..!!
அந்த உருவத்தின் முகத்தை பார்த்துவிடுகிற முயற்சியில்.. தலையை இப்படியும் அப்படியுமாய் அவஸ்தையாக அசைத்த ஆதிரா.. விருட்டென படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்..!!
கனவு கலைந்து போயிருந்தது.. அவளது இதயம் மட்டும் இன்னும் பதறியடித்துக் கொண்டிருந்தது.. கண்களில் இன்னும் அந்த பயம் நிரம்பி வழிந்தது.. மார்புப்பந்துகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறியிறங்கின.. 'புஸ்ஸ்..புஸ்ஸ்' என மூச்சிரைப்பு..!! கண்டது கனவுதான் என்று உணர்ந்தபிறகு.. அந்த மூச்சிரைப்பு மெல்ல மெல்ல நிம்மதிப் பெருமூச்சானது..!! அன்று பார்த்த அந்த சிங்கமலை குகை.. அந்த 'கண்ணாமூச்சி ரே ரே' என்ற வார்த்தைகள்.. குறிஞ்சி பற்றிய குழப்பமான தகவல்கள்.. அவள் அணிந்து வருவதாக சொல்லப்படுகிற அங்கி.. இவையெல்லாம் கலந்துகட்டித்தான் அந்த கனவை உருவாக்கியிருக்கின்றன என்று ஆதிராவுக்கு தோன்றியது..!!
தண்ணீர் ஜாடியை எட்டி எடுத்தாள்.. 'கடக் கடக்'கென தொண்டைக்குள் நீரை சரித்துக் கொண்டாள்..!! மீண்டும் தொப்பென படுக்கையில் விழுந்தாள்.. அருகில் கிடந்த கணவனின் மீது காலை தூக்கிப் போட்டு, அவனது மார்போடு அண்டிக்கொண்டாள்.. ஒரு குழந்தையைப்போல அவனை நெருக்கியடித்து படுத்துக் கொண்டாள்..!! இவளது அதீத இறுக்கமான அணைப்பு.. சிபியின் உறக்கத்தை சற்றே கலைத்தது..!! இமைகளை மெல்ல பிரித்தவன்..
"எ..என்னாச்சு ஆதிரா..??" என்று கேட்டான்.
"ஒ..ஒன்னுல்லத்தான்.. ஒரு கெட்ட கனவு..!!" ஆதிரா தடுமாற்றமாக சொன்னாள்.
"என்ன கனவு..??"
தனக்கு வந்த கனவை, ஆதிரா கணவனுக்கு சுருக்கமாக சொன்னாள்..!! குறிஞ்சி, தாமிரா பற்றிய கனவு என்று தெரிந்ததும்.. சிபி மனதுக்குள் சற்று எரிச்சலானான்..!! ஆனால்.. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. மனைவியை ஆறுதல் படுத்தவே முயன்றான்..!!
"ஏன் ஆதிரா இப்படி பண்ற..?? கண்டதையும் நெனச்சுக்கிட்டு..?? இப்பப்பாரு.. நிம்மதியா தூங்கக்கூட கஷ்டப்படுற..??"
"நான் என்னத்தான் பண்ணுவேன்..?? எனக்கு அதே நெனைப்பா இருக்கு..!!" ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், சிபி இப்போது அவளை பாவமாக பார்த்தான்.