screw driver ஸ்டோரீஸ்
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!"

ஆறு வயது தாமிரா பச்சரிசிப்பற்கள் பளபளக்க சிரித்தவாறே.. அக்காவின் முதுகை தொட்டுவிட்டு ஓட்டமெடுத்தாள்..!! தரையில் முளைத்திருந்த புல்வெளியில்.. தனது தளிர்ப்பாதங்களை பதித்து பதித்து.. ஸ்லோமோஷனில் தூரமாக ஓடிக்கொண்டே இருந்தாள்..!! மரத்தின் பக்கமாக திரும்பி நின்றிருந்த ஆதிராவோ.. தொலைதூரம் தங்கை செல்வதை அறியாமல்.. தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தாள்..!! 

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!"


தலைதிருப்பிய ஆதிரா இப்போது தங்கையை தேட ஆரம்பித்தாள்..!! கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்க.. காற்றில் பறக்கிற பனித்துகள்களுக்குள்.. கைவிரல்களை அசைத்து அசைத்து தேடினாள்..!! விரித்துவைத்த கைகளுடன்.. அங்குமிங்கும் நகர்ந்து தங்கையை தேடியவாறே.. அந்தப்பாடலை விடாமல் மழலைக்குரலில் பாடினாள்..!! 

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"


நீண்ட நேரமாக தாமிரா தட்டுப்படவில்லை.. அலைந்து அலைந்து ஆதிராவின் கைவிரல்கள் அயர்ச்சி கண்டதுதான் மிச்சம்..!! நேரம் ஆக ஆக.. அவளது நெஞ்சுக்குழிக்குள் பயம் கொப்பளிக்க ஆரம்பித்தது.. தங்கை என்ன ஆனாளோ என்கிற பயம்..!!
கண்களை கட்டியிருந்த துணியை.. படக்கென அவிழ்த்து கையிலெடுத்தாள் ஆதிரா..!! அத்துவான காட்டுக்குள்.. ஒத்தையாய் நின்று.. சத்தம்போட்டு கத்தினாள்..!!

"தாமிராஆஆஆஆ..!!!!!"

தங்கை சென்றிருக்க வாய்ப்பிருக்கிற திசையென.. உத்தேசமாய் ஒருதிசையை முடிவு செய்துகொண்டு.. அந்தத்திசையிலேயே தொண்டைகிழிய அலறிக்கொண்டு ஓடினாள்..!!

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"

ஆதிராவின் கையிலிருந்த சிவப்புத்துணி இப்போது காற்றில் படபடத்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தத்துணியின் அகலமும், நீளமும் பெரிதாகி.. குறிஞ்சியின் அங்கியாக பிரம்மாண்ட உருவெடுத்தது.. காற்றில் சுழன்றடித்து ஆதிராவை அப்படியே சுருட்டிக்கொள்ள முயன்றது..!!

"ஆஆஆஆ..!!"

பதறியடித்து அலறிய ஆதிரா.. உடலை முறுக்கி அந்தத்துணியை உதறினாள்.. தரையில் விழுந்து கடகடவென உருண்டாள்.. 'தஸ்புஸ்' என் மூச்சிரைத்தாள்..!! அதே நேரம்..

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!"


காட்டு மரங்களுக்கு இடையே தாமிராவின் குரல் சிரிப்புடன் எதிரொலித்தது..!! தரையில் இருந்து எழுந்தாள் ஆதிரா.. தலையைத் திருப்பி, அந்த அங்கியை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. தங்கையின் குரல் வந்த திசையிலே ஓடினாள்..!!

அடர்ந்த வனத்துக்குள் ஓடிக்களைத்த ஆதிராவுக்கு.. இப்போது அந்த சிங்கமுக சிலை காட்சியளித்தது.. அதன் பக்கவாட்டிலேயே இருண்டுபோன அந்த குகை..!! அந்த குகைக்குள் இருந்துதான் தாமிராவின் குழந்தைக்குரல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது..!!

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"


சிறுமி ஆதிரா இப்போது சற்றே நிதானித்தாள்.. அவளது மார்பு மட்டும் 'படக், படக்' என அடித்துக்கொண்டுதான் கிடந்தது..!! அதீத பயம் அப்பிய விழிகளுடனே.. அந்த குகையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!! 

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"

சன்னமான குரலில் தங்கையை அழைத்துக் கொண்டே நகர்ந்தாள்.. குகை வாசலில் வந்து கைகள் விரித்து நின்றாள்..!! குகைக்குள் ஒரே கும்மிருட்டு.. உள்ளிருக்கும் எதுவுமே கண்ணிரண்டுக்கும் புலப்படவில்லை..!! இருட்டுக்குள் இருந்து அந்தப்பாடல் மட்டும் கிசுகிசுப்பாக ஒலித்தது..!!

[Image: krr35.jpg]

"கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..!!!"
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 12-03-2019, 11:00 AM



Users browsing this thread: 8 Guest(s)