கனியும் ஒரு காதல்..(completed)
#43
கனியும் ஒரு காதல்.. 6

மறு நாள் காலை ... 9 மணிக்கு ஆரம்பித்தாயிரற்று.. 12.00 மணி வரை சரியான வேலை...மதியம் சாப்பாடு முடிந்து மறுபடியும் நிமிரக்கூட முடியாமல் பெண்டு நிமித்தி விட்டது இருவருக்கும் வேலை.. ஒருவரை ஒருவர் சரியா பார்த்துக்க கூட முடியாமல்...இவள் இருந்தால் அவன் இல்லை அவன் இருந்தால் இவள் இல்லை.. மதியம் 4.00 மணிக்கு எம் டி.. தன் உரைய தொடங்கி.. இப்ப ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் அவர்கள் சார்பா ஏதாவது ஒரு சின்ன நிகழ்ச்சி கொடுக்கனும் எதுவா இருந்தாலும் சரி... சொல்லி மேடய விட்டு இறங்கி விட்டார்..

களை கட்டியது மேடை.. ஒருவர் பாடினார், ஒருவர் ஆடினார்.. ,இன்னும் சிலர் தங்கள் மேனஜர் எப்படி என்பதில் மோனோ ஆக்ட் கொடுத்து அசத்தினார்.., இப்ப வந்து முடிந்தது பிரியாவின் பங்கு.. மத்தவங்க எல்லாம் ஒரு 5 அல்லது 6 பேர் இருக்க யாரவது ஒருவர் முடிச்சுட்டு போய்ட்டாங்க.. இங்க இருப்பதே 2 பேரு தான் மாதவனும் பிரியாவும் .அவளும் அப்போது அங்கு இல்லை.. எனவே மாதவன் மேடை ஏறினான்...

போடியத்தில் நின்று மைக் பிடித்தவன்.. மெல்ல குரலை சரி செய்து கொண்டு..."இது எங்க அம்மா என் சின்ன வயசில பாடி என்ன தூங்க வைச்சாங்க இப்பவும் எப்பவும் இந்த பாடல் என் காதுல கேட்டுகிட்டே இருக்கும் "



கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஆமா மாதூ எனக்கு கூட தூக்கம் வருதுப்பா... மாமு இப்பவே கண்ண கட்டுதுடா இதுல நீ வேறயா கமண்ட் பறக்க சிரிப்பு அலை மோதியது... மெல்ல கனைத்து மைக்க பிடித்தவன் தன் கண்களை மூடியபடி


பாட ஆரம்பித்தான்...மாதவன் ....

ஆயர் பாடி மாளிகையில் ......
தாய் மடியில் கன்றினைப் போல்.....
மாயக் கண்ணன் தூங்குகிறான்... தாலேலோ...
மாயக் கண்ணன் தூங்குகிறான்... தாலேலோ.......
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு..........


ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அப்படியே அமைதியானது கூட்டம்.. அவன் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது அப்படியே மயக்கியது. மாதவன் தன் கண்மூடி மெய் மறந்து பாடியது அனவரையும் அப்படியே.. கமெண்ட் கொடுத்தவர்கள் வாயடைத்துப் போய்.. சிரித்தவர்கள் கூட கண் மூடி ரசிக்க.. ஒரு அமுத மழை பொழிந்த மாதிரி.. பாடி முடித்தவன் மெல்ல கண் திறந்து பார்த்தான் ...எம் டி மெல்ல நடந்து அவன் அருகில் வந்தார்.. அவன் தோளை தட்டிக் கொடுத்தார்...


" நல்லா பாடினப்பா.. ம்ம் நல்ல குரல் வளம் உனக்கு கேட்டிகிட்டே இருக்கலாம் போல இருக்கு ... ம்ம்ம்.. இரு ... நான் இப்படி இங்கயே உட்காந்து இருக்கேன் உனக்கு பிடிச்ச இன்னொறு பாட்டு பாடுப்பா... எதுன்னாலும் சரி உன் குரல் அப்படி இருக்கு சொக்க வைக்கும் குரல் உன் குரல் பாடுறியாப்பா... " கெஞ்சலாய் கேட்ட போது மறுக்க முடியவில்லை மாதவனால்...கொஞ்சம் யோசித்தவன்


"இது எனக்குபிடிச்ச பாட்டு சார்.. சொல்லி மெல்ல கணீரென ஆரம்பித்தான்....

'அன்னையப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறந்தவர் மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை.... '


என்று ஆரம்பித்து சற்றும் தொய்வில்லாமல் பாட.. குண்டூசி போட்டால் சப்தம் கேட்கும் அளவு அமைதி... அப்போது தான் பிரியா உள்ளே நுழைகிறாள் அவன் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தவள் என்னடா நீ பாடவும் செய்வாயா....அவன் குரலில் கட்டுண்டு கிடக்கும் தன் சகாக்களைப் பார்த்தாள்.. அவனை பார்த்தாள்.. கண்கள் மூடி உச்சமாய் பாடி கொண்டிருக்கும் அவனைப் பார்த்தாள்.. அவன் கண்களைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.. அவன் கண்களில் மெல்ல நீர் கசிய...ஆனாலும் பாடலை நிறுத்தாமல்.. அதிர்ந்தாள் பிரியா.. என்ன இது என் காதலன் கண்களில் நீர் ஏண்டா தங்கம் என்ன ஆச்சு உனக்கு மனசு பதறியது,,,
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 12-03-2019, 10:55 AM



Users browsing this thread: 4 Guest(s)