12-03-2019, 09:58 AM
பெண்களுக்கான சினிமா ஆனால் எல்லா பெண்களுக்கும் அல்ல - 90ml விமர்சனம் - '90ml' Movie Review
சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க வருகிறார் ரிட்டா (ஓவியா). அங்கு ஏற்கெனவே குடியிருக்கும் தாமரை (பொம்மு லட்சுமி), சுகன்யா (மோனிஷா ராம்), காஜல் (மசூம் ஷங்கர்) , பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்களைச் சந்தித்துப் பழகுகிறார். தாமரையின் (பொம்மு லட்சுமி) பிறந்த நாள் அன்று ஓவியா மது விருந்து கொடுக்க, அதுவரை பழக்கமே இல்லாத மற்ற பெண்களும் தயங்கியபடி மது அருந்துகின்றனர். பின் ஒவ்வொருவராக பாலியல் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திருமணம் குறித்தும் தங்கள் கருத்துகளையும் தங்களது வாழக்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றனர். சுகன்யா தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதாகவும் தான் காதலிக்கும் நபருக்கு அடுத்த நாள் திருமணம் நடக்க இருப்பதாகவும் புலம்புகிறார். அவரைத் தேற்றும் விதமாக சுகன்யாவைக் காதலனுடன் சேர்க்க நான்கு பெண்களும் திட்டமிடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரின் பிரச்னையையும் நண்பர்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
ஓவியா இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அசத்தியிருக்கிறார். நண்பர்களாக வரும் மற்ற பெண்களும் கதைக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். படத்தை தன்னுடைய இசையாலே நகர்த்திச்செல்கிறார் சிம்பு.
சமூகத்தில் எழும் எவ்வித விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு தோன்றியதை மிக சாமர்த்தியமாக கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அனிதா உதீப். தமிழ் சினிமாவிற்கு இந்த படம் நிச்சயமாக புதிதுதான்.
எந்த தவறுக்கும் இன்னெரு தவறு ஒரு போதும் சரியாகாது என்பது அடிப்படை நீதி. ஆண்கள் குடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள் அதனால் நானும் குடிக்கிறேன் தம் அடிக்கிறேன் என்பதெல்லாம் எப்படி சமத்துவத்தில் பொருந்தும். அதே போல் பெண்களை புனிதத்திற்குள் அடைத்து அடிமைப்படுத்துவதை வழக்கமாகக்கொண்டு திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. குடிப்பது, கஞ்சா அடிப்பது இவை எல்லாம் தனிமனித ஒழுக்கத்தை சார்ந்த விஷயம் இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆண்கள் கூட்டாக அமர்ந்து தன்னுடைய முன்னால் காதலியை வசைபாடுவதும், ஏமாற்றுகாரிகள் பெண்கள் என்று நண்பர்களுக்கு உபதேசம் செய்வதும்தான் இதுநாள் வரை தமிழ் சினிமா கட்டிகாத்து வந்த கலாச்சாரம் என்பதில் நமக்கு மாற்று கருத்து இருக்காது. அதற்காக பெண்களும், குடியும் கூத்தாக இருப்பதுதான் சமத்துவம், பெண்களுக்காக சுதந்திரம் என்று சொல்வது அபத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனிமனித ஒழுக்கம்தான் ஒரு சமூகத்தின் உண்மையான நாகரீக வளர்ச்சி. அதற்கு எதிர்முனையில் நிர்ப்பது அல்ல. இந்த சமூகத்தில் ஆண்கள் இப்படி இருக்க இதே சமூகத்தில் அதே போல், இதுதான் சுதந்திரம் என்று வாழ விரும்பும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதையே இப்படம் காட்டுகிறது. இந்த படத்தை சிலர் பெண்ணியத்தோடு கூட ஒப்பிட்டு கூறுகிறார்கள். வன்முறைக்கு வன்முறை ஒரு போது தீர்வாகாது என்று சொல்வது போல் தனி மனித ஒழுக்க சீர்கேட்டிற்கு இன்னொரு தனிமனித ஒழுக்க சீர்கேடு தீர்வாகாது. எனினும் இப்படத்தை இந்த சமூகத்தின் பெரும்பாண்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சமூகம் நிலை இல்லை என்பதே எதார்த்தம்.
இப்படத்தில் 377 சட்டம் பற்றியும், தற்பாலீர்ப்பு குறித்தும் பேசியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு முறையும் குடிக்கும் போதும் ஒரு புது பிரச்னையை ஏற்படுத்தாமல் ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளுக்கு இந்த பெண்கள் தீர்வு காண்கிறார்கள் என்பது படத்தின் இன்னெரு சிறப்பு. படம் முழுவதும் தண்ணியும், தம்முமாக நகர்கிறது. ஒரு சில காட்சியில் வந்து போகும் சிம்பு ரசிக்க வைத்து கைதட்டல்களை பெறுகிறார். பெண் இயக்குநர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார், படம் முழுவதும் நான்கு பெண்களை சுற்றியே கதைக்களம் நகர்ககிறது. எனினும் எந்த இடத்திலும் ஆண்களை குறைசொல்லும் காட்சிகளோ வசனங்கோ இடம் பெறவில்லை என்பது படத்தின் இன்னொரு சிறப்பு.
மொத்தத்தில் தன் வாழ்க்கையைத் தன் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு; அம்மனிதர்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடக்கம் என்பதுதான் 90 எம்.எல். முன்வைக்கும் அழுத்தமான பார்வை. அதை மாற்று சிந்தனையில் நேர்மையான முறையில் முன்வைத்திருக்கலாம் இயக்குநர்.
- பிரிவுவகை:
காமெடி டிராமா
- நடிகர்கள்:
ஓவியா, பொம்மு லட்சுமி, மோனிஷா ராம், மசூம் ஷங்கர், பொம்மு லட்சுமி
- இயக்குனர்:
அனிதா உதீப்
- தயாரிப்பாளர்:
உதீப்
- பாடல்கள்:
சிம்பு