Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பாலியல் வன்கொடுமை - அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்

பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களுக்கு வலைவிரித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்த வழக்கில் கைதான நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre

[Image: 201903111813265632_Pollachi-molestation-...SECVPF.gif]

சென்னை:

பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பழகி சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜ் என்பவர் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் என தகவல் வெளியானது.

இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இன்று குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 12-03-2019, 09:50 AM



Users browsing this thread: 99 Guest(s)