11-03-2019, 05:35 PM
- நடிகர்கள்:
சரண், கிஷோர், ஸ்ரீராம், பிரித்திவ், ஆயிரா, பாண்டி
- இயக்குனர்:
முருகேஷ்
- தயாரிப்பாளர்:
ஆர். செல்வகுமார்
- பாடல்கள்:
ஷபிர்
வடசென்னை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்திருந்த சரண் இந்த படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோலி சோடா படத்தில் நடித்திருந்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி ஆகியோர் சரணின் நண்பர்களாக வருகிறார்கள். ப்ரித்விவ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
சூழ்நிலை சரணையும், பாண்டியையும் கொலை குற்றவாளிகளாக மாற்றிவிடுகிறது. சிறைக்கு செல்லும் சரண், பாண்டி இருவருக்கும் கிஷோர் மற்றும், ஸ்ரீராமின் அறிமுகம் கிடைக்கிறது. இளம் குற்றவாளிகளுக்கென்றே அமைக்கப்பட்ட சிறையில் நடக்கும் சண்டைபோட்டியில் பாண்டி இறந்து விடுகிறான். தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே கூட இருந்த நண்பனை கொன்ற ப்ரிதிவ்வை பழிவாங்க துடிக்கும் சரண்.
ஆசை ஆசையாய் காதலித்த காதலியிடம் காதலை சொல்ல முடியாமலே சிறைக்கு வந்திருக்கும் கிஷோர், எப்படியாவது காதலியிடம்காதலை சொல்லிவிட வேண்டும் என்கிற தவிப்போடு சிறையில் இருக்கிறான், தன் அக்காவை கொலை செய்தவனை பழிவாங்க வரும் ஸ்ரீராம் என இவர்களின் கனவுகளும், கோபமும், நிறைவேறிதா, இவர்கள் என்னமாதிரியான பிரச்னையில் சிக்குகிறார்கள் எவ்வாறு அதிலிருந்து தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக்தை.
சிறைச்சாலையில் வாழும் சிறைகைதிகள் பற்றிய படங்கள் நிறைய வந்திருந்தாலும், சிறைச்சசாலையில் 18 வயதில் இருந்து 25 வயதுடைய இளம் குற்றவாளிக்களுக்கென்று தனிச் சிறைச்சாலை ஒன்று இருப்பதை யாரும் அறிந்திருக்க முடியாது. அப்படி ஒரு சிறைச்சாலையில் நடக்கும் அரசியலை அப்பட்டமாக திரையில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் முருகேஷ்.
அங்குள்ள எல்லா கைதிகளுக்கு பின்னாலும் ஒரு பெரிய கதையும், கனவும் இருக்கத்தான் செய்கிறது. அதில் தென்படும் நியாயம் அநியாயம்தான் அவர்களை குற்றவாளிகளாக சிறை வைத்திருக்கிறது என்பதை படம் பார்க்கும் போது நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்த சமூகத்தில் இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பகுதி என்பதை ஆழமாக சொல்கிறது திரைப்படம். காதல் முக்கியம், அதைவிட என் நட்பு முக்கியம் என அன்பின் வெளிபாட்டில் வரும் வசனங்கள் நெகிழ வைக்கிறது.
படத்தோடு நம்மை பயணிக்க வைக்க கூடுதல் பலம் கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஷபிர். இந்த படத்தில் இடம் பெறும் பாடல்கள் குறைவு என்றாலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதிகம்.