26-09-2020, 12:15 PM
(This post was last modified: 26-09-2020, 12:17 PM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
48.
விளையாடுறியா ஹாசிணி? நானே இதுக்கு ஒத்துக்க மாட்டேன். சுந்தர் எப்படி ஒத்துக்குவாரு?
ஏன்?
சுந்தர் சொன்ன மாதிரி, அவன் நிழல் கூட உன் மேல விழுறதை, நாங்க யாருமே விரும்பலை!
நான் இந்த முடிவுக்கு ஒரு காரணம் இல்லை, பல காரணங்கள் இருக்கு. அத விட பெட்டரா, உங்ககிட்ட திட்டம் இருந்தா சொல்லுங்க, நான் கேட்டுக்குறேன்!
சரி, என்னென்ன காரணம்?
முதல்ல, என் லவ்வை, மாமா ஏத்துக்கவே மாட்டார். இது முழுக்க உணர்ச்சி வசப்பட்டோ இல்லை பரிதாபத்துலியோ எடுத்த முடிவாதான் பாப்பாரு. நாம எல்லாரும் வற்புறுத்துனா, வேற வழியில்லாம, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும், அதில கடமைதான் இருக்குமே ஒழிய, காதல் இருக்காது.
நான், மாமாவை லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அதுனால, அவரும் கடமைக்காக இல்லாம, முழுசா லவ் பண்ணனும்னு விரும்புறேன். என் லவ்வைச் சொல்ல, நான் எதுக்கும் தயார்ன்னு காட்ட இது கரெக்ட்டா இருக்கும்ன்னு நம்புறேன்…
ஏதோ சொல்ல வந்தவனை, இடைமறித்த ஹாசிணி, நான் முழுசா சொல்லிடுறேண்ணா. அப்புறமா சொல்லுங்க.
ரெண்டாவது, நம்ம எல்லார் வாழ்க்கைலியும் விளையாண்ட விவேக்கை, அவ்ளோ ஈசியா விட்டுட எனக்கு விருப்பமில்லை. நீங்க அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போறீங்கங்கிறதை, நீங்க முடிவு பண்ணிக்கோங்க. ஆனா, துரோகத்தோட வலி என்னான்னு, ஒரு பொண்ணா, அவனுக்கு காட்டனும்! எதெதையெல்லாம் செய்வேன்னு பெருசா பேசியிருக்கானோ, அதையெல்லாம் அவனை செய்ய வைக்கனும். பிசிக்கல் தண்டனையை நீங்க கொடுங்க. சைக்காலஜிக்கல் தண்டனையை, நானும், மாமாவும் கொடுக்குறோம்!
ஹாசிணி இதைச் சொல்லும் போது, அவள் முகத்தில் தெரிந்த கடினமும், தீவிரமும், அவளது உறுதியைச் சொல்லியது.
மூணாவது, ஒட்டு மொத்தமா, நமக்கு நடந்த இந்த அசிங்கம், வெளிய எல்லாருக்கும் தெரியறதை, நான் விரும்பலை. நாளைக்கு என் பையனுக்கோ, உங்க குழந்தைகளுக்கோ இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சு, இதுனால ஏன் மன உளைச்சல் வரனும்?
மதுசூதனன் தலையிடவில்லை என்றாலும், ஹாசிணி பேச்சு வாக்கில், என் பையன் என்று சுந்தரின் குழந்தையைச் சொன்னதை கவனித்தான். அது, அவள் எந்தளவு மனதளவில் சுந்தரோடு ஒன்றி விட்டாள் என்பதை அவனுக்குச் சொன்னது!
விவேக்கைத் தண்டிக்கனும், ஆனா விஷயம் வெளியத் தெரியாம நடக்கனும்ன்னா, அவன், நம்ம கண் பார்வைல இருக்கனும். நகரவும் முடியாம, இதுக்குள்ள இருக்கவும் முடியாம தடுமாறனும்ன்னா, இதுதான் வழி. இல்லாட்டி, அவனை டார்கெட் பண்றது, கொஞ்சம் டவுட்டு வந்தாலும், அவன் எங்கியாவுது தப்பிச்சுப் போயிடுவான். நாம என்ன ப்ரஃபசனல் ரவுடியா, இதையே தொழிலா பண்ண? அவனுக்குதான் வேற வேலை வெட்டி எதுவும் இல்லைன்னா, நமக்குமா? அவனை கைக்குள்ள வெச்சிருந்து அடிக்கனும்ன்னா இதுதான் பெஸ்ட் வழி.
நாலாவது, மாமா அக்காவை டைவர்ஸ் பண்ணிட்டு, என்னை கல்யாணம் பண்ணிகிட்டாருன்னா, இத்தனை நாளா, எங்களுக்குள்ள இருந்த நட்பை எல்லாரும் கொச்சையா பாப்பாங்க. நான் அப்பவே நினைச்சேன்னு யாராச்சும் சொல்லலாம்.
மாமா மேல இப்ப இருக்கிற லவ் எவ்ளோ ஸ்பெஷலோ, அதை விட ஸ்பெஷல் எங்களுக்குள்ள இதுவரை இருந்த நட்பும், அன்பும். எக்காரணம் கொண்டும், அதுக்கு ஒரு அவப்பெயர் வர்றதை நான் விரும்பலை. அதுக்கு பதிலா, நான் என் லவ்வையே தியாகம் பண்ணிடுவேன்.
ஹாசிணி சொன்ன காரணங்களைக் கேட்டு, அதில் தெரிந்த அவளது ஆழமான சிந்தனையையும், தர்க்கத்தையும் கண்டு வியந்து கொண்டிருந்த மதுசூதனன், கடைசியாக சொன்ன விஷயத்தில் இன்னும் வியந்தான். காதலைக் கூட தியாகம் செய்யத் தயார் என்று சொன்ன போது, சுந்தர் ரொம்ப லக்கிதான், இப்படி ஒரு காதலைப் பெறுவதற்க்கு என்று நினைத்தான்.
விளையாட்டுத்தனமாக பேசுவது போலிருந்தாலும், அனைத்தையும் யோசித்தே பேசுகிறாள் என்பதால் கனிவாகவே கேட்டான்.
எல்லாம் ஓகே ஹாசிணி! உங்கக்காவை டைவர்ஸ் பண்ணிட்டு, உன்னைக் கல்யாணம் பண்ணாலே தப்பா பேசுறவங்க, நீயும் ஒரு கல்யாணம் பண்ண பின்னாடி, ரெண்டு டைவர்ஸ் நடந்து, ஒண்ணு சேந்தா, இன்னும் தப்பா பேச மாட்டாங்களா?
என் ப்ளான் படி நடந்தா பேச மாட்டாங்க. அதிக பட்சம், ரெண்டு பேருக்கும் சரியான வாழ்க்கை அமையலை, அதுனால ஒண்ணு சேந்துட்டாங்கன்னு பேசலாம். ஆனா, அந்தப் பேச்சும் வராத அளவுக்கு ப்ளான் பண்றது ஒண்ணும் பெரிய விஷயமில்லை.
அவளது துணிச்சலையும், நம்பிக்கையையும் கண்டவன், வியந்த படியே சொன்னான்.
எல்லாம் ஓகே, ஹாசிணி, ஆனா, நீ விவேக்கையே கல்யாணம் பண்ணி, அவன் கூடவே கொஞ்ச நாள் இருப்ப அப்டீன்னா, அ… அதுல என்னென்ன சிக்கல் இருக்குன்னு தெரியுமில்ல? உன் ப்ளான் கொஞ்சம் சொதப்புனாலும், உன் வாழ்க்கை சிக்கலாயுடும். அதான் யோசனையா இருக்கு.
அதுதாண்ணா, அவனுக்கு கொடுக்கப் போற சைக்காலஜிக்கல் ட்ரீட்மெண்ட். அவன் கையாலியே, மாமாவுக்காக உழைக்க வைச்சு, துரோகத்தோட வலியைக் கொடுக்கனும், இன்னும் பச்சையா சொல்லனும்ன்னா, அடுத்தவங்க மனைவியை அசிங்கப்படுத்துனவனை, சொந்த மனைவிகிட்ட ஒரு மண்ணும் செய்ய முடியாம நிக்க வைக்கனும். அவன் திமிரா பேசுனதுக்கெல்லாம் காரணம், அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாத பலவீனம், அந்த பலவீனத்தை மறைக்க இப்டி பேசிட்டு திரிஞ்சான்னு அவனுக்கு மட்டுமில்லாம, அவன் பின்னாடி போன எங்கக்கா மாதிரி ஆளுங்களுக்கும் காமிக்கனும்!
அவன் திமிரை எல்லாம் அடிச்ச பின்னாடி, நீங்க அவனை அடிக்கிறப்ப, ஒரு வலி வரும் அவனுக்கு! ஏன், நாம தப்பு பண்ணோம்ன்னு கதற வைக்கிற அடியா அது இருக்கும். பெரிய இவனாட்டம் பேசி திரிஞ்சவனுக்கு, ஒரு பிரச்சினைன்னா, தனக்காக ஓடி வர ஒருத்தரும் இல்லைங்கிற உண்மை அவனுக்கும், பத்து பொண்ணுங்க கூட இருக்கிறவன் ஆம்பிளை இல்லை, ஒரு பொண்ணோட நம்பிக்கையை கடைசி வரைக்கும் காப்பாத்துறவந்தான் ஆம்பிளைன்னு எங்க அக்கா உட்பட எல்லாருக்கும் தெரியனும்.
இதெல்லாம் நடக்கனும்ன்னா, நான் அவனைக் கல்யாணம் பண்ணனும். இல்ல, நான் சொன்ன எல்லாத்தையும், வேற முறைல நிறைவேத்தக் கூடிய திட்டம் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க, நான் கேக்குறேன்.
உண்மையாலுமே மதுசூதனனுக்குமே, அவள் சொன்னதை விட பெட்டர் ப்ளான் எதுவும் தோன்றவில்லை. இருந்தாலும் ராமைச் சந்தித்து ஹாசிணியின் கருத்தைச் சொன்னதும், அடுத்த நாள், அவனும் ஹாசிணியை நேரில் சந்தித்தான்.
உடனே உங்ககிட்ட சொல்லிட்டாரா இவரு?
ஹாசிணி, நீ எ… என்னதான் விளக்கம் சொன்னாலும், உன்னைப் பணயம் வைக்கிறதை எங்களால ஏத்துக்க முடியல. வேற வழியே இல்லையா?
நீங்க ஏன் இவ்ளோ தயங்குறீங்கன்னு சத்தியமா எனக்குப் புரியலை.
ம்ம்… உன்னை தங்கச்சின்னு வெறும் வார்த்தைக்குச் சொல்லலை. உண்மையாலுமே நினைச்சதுனாலத்தான் சொல்றோம். தங்கச்சியை பணயம் வைக்கிறதை எப்படி விரும்புவோம்?!
நானும் உங்களை உண்மையான அண்ணனாத்தான் நினைக்கிறேன். நீங்க இருக்கீங்கங்கிற தைரியத்துலதான், இந்தத் திட்டமே போட்டேன். நீங்க இருக்கீங்க. கூடவே மாமா இருக்கப் போறாரு. இன்னும் என்ன பயம்?
முழுதாக ஒப்புதல் இல்லாவிட்டாலும், அரைகுறை சம்மதம் சொன்னவர்கள் கேட்டார்கள்.
சரி, அடுத்து என்ன பண்ணப் போற?
வேற என்ன, மாமாகிட்ட லவ் ப்ரபோஸ் பண்ண வேண்டியதுதான்!
நீயா?
பின்ன, மாமாவே வந்து ப்ரபோஸ் பண்ணப் போறாராக்கும்?
நாங்க வேணா சுந்தர்கிட்ட பேசிப் பாக்கட்டுமா?
வேணாம்! முதல்ல நான் லவ்வைச் சொல்றேன். நான் சொன்ன உடனே, என்னைத் திட்டிட்டு, நேரா உங்ககிட்டதான் வந்து புலம்புவாரு. நீங்க புதுசா கேக்குற மாதிரி கேட்டுட்டு, அவ சொன்னதுல என்ன தப்புன்னு எனக்காக பேசுங்க ஓகேயா? என்று கண் சிமிட்டி சிரித்த படியே சொன்னவளை, புன்னகையுடன் இருவரும் கை உயர்த்திக் காட்டினர்.
அவர்களிடம் விளையாட்டாய் சொன்னாலும், ஹாசிணி சுந்தரிடம் மிக சீரியசாய்தான் தன் லவ்வைச் சொன்னாள்.
அடுத்து உங்க ப்ளான் என்ன மாமா? ராம் அண்ணா சொன்ன மாதிரி, கல்யாணத்தைப் பத்தி யோசிச்சீங்களா?
பெருமூச்சு விட்டவன், யோசிக்கனும் ஹாசிணி! கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. முழுசா நம்பிக்கை வர மாட்டேங்குது.
உங்களுக்கு முழு நம்பிக்கை கொடுக்கக் கூடிய பொண்ணா இருந்தா, நீங்க ஓகே சொல்லுவீங்களா மாமா?
எனக்கு முழு நம்பிக்கை கொடுக்கக் கூடிய பொண்ணா? யாரந்…. என்று கேட்க ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தினான். சின்னக் கோபம், சந்தேகம் எல்லாம் கலந்து கூர்மையாக ஹாசிணியை பார்த்துச் சொன்னான்.
என்ன பரிதா…
பரிதாபப்பட்டு முடிவெடுத்தியா, லூசுத்தனமா பேசாதன்னுல்லாம் அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விட்டுடாதீங்க மாமா! அதே மாதிரி, தயவு செஞ்சு, இந்த எண்ணத்தோடதான் ஆரம்பத்துல இருந்து பழகுனியான்னும் கேட்டுடாதீங்க, ப்ளீஸ்!
அவள் வார்த்தைகளில் தெரிந்த உணர்வில், சற்று நிதானித்தவன், சிறிது நேரம் கழித்து கேட்டான்.
எதுனால இந்த முடிவு?
தலை குனிந்திருந்தவள், தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை அப்படியே சொன்னாள். துரோகம் தெரிந்த சமயத்தில் வருந்திய மனது, அவன் சுதாரித்து நிமிர்ந்த போது எப்படி பிரமித்தது, தன் அக்காவின் கணவனாக இனி இருக்கப் போவதில்லை என்று தெரிந்த பின் அவள் மனதில் ஏற்பட்ட மாற்றம், இன்னொருத்தியைக் கல்யாணம் செய்யச் சொல்லி ராம் கேட்ட போது எழுந்த பொசசிவ்னெஸ் கலந்த தவிப்பு என்று அனைத்தையும் சொன்னவள்,
இந்தக் கல்யாணம் உங்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும்கிறதுக்காக, இந்த முடிவெடுக்கல மாமா. உங்களை லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு விரும்புறேன். அவ்ளோதான்.
ஹாசிணியின் தீர்க்கமான பேச்சினைக் கேட்டவனின் கோபம் குறைந்தாலும், அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இருக்கிற குழப்பத்துல, இது வேறயா?
நீங்க இன்னமும் என்னை, ஹரிணியோட தங்கச்சியா பாக்குறீங்க. அதான் குழப்பம்! ஆனா, என்னால உங்ககிட்ட நடிக்க முடியாது மாமா! இத்தனை நாளா, இந்த எண்ணம் இல்லை. ஆனா, இப்ப மனசுல தோணுன பின்னாடி, உங்ககிட்ட மறைக்க விரும்பலை. உங்ககிட்ட சொல்லனும்ன்னு தோணுச்சு. சொல்லிட்டேன். நீங்க யோசிச்சு முடிவைச் சொல்லுங்க.
நீ என்னச் சொன்னாலும், என்னால, இதை ஏத்துக்க முடியும்ன்னு தோணலை ஹாசிணி! என்று சுந்தர் சொன்னாலும், அவனையறியாமல், அவன் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி இருந்தாள் ஹாசிணி!
அழகானவள், திறமையானவள், தன்னை முழுக்கப் புரிந்து கொள்பவள், தன் விருப்பங்களை அறிந்தவள், இலட்சியங்களுக்கு தோள் கொடுப்பவள் இப்படி பெருமைகளுக்குச் சொந்தக்காரி, தேடி வந்து காதலைச் சொன்னது, அவனையறியாமலேயே, அவனுக்கு ஒரு உற்சாகத்தைத் தந்தது. தன் மேல் அன்பு காட்ட, தனக்காக யாரும் இல்லையோ என்று தவித்தவனுக்கு, முழுக் காதலையும் காட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பாசிட்டிவ் மனநிலை.
இன்னொருவனுடனான கள்ளத் தொடர்பை மறைத்திருக்கிறாளே என்று வலித்த மனதுக்கு, உன்னுடனான காதலை என்னால் மறைக்க முடியாது என்று வெளிப்படையாகச் சொன்னது, மருந்தாய் இருந்தது.
ஹாசிணி எப்படி சுந்தரை, அக்கா கணவராக இல்லாமல் ஒரு ஆண்மகனாகப் பார்க்க ஆரம்பித்தாளோ, அதேபோல், அவளை மனைவியின் தங்கையாக இல்லாமல், ஒரு பேரழகியாக பார்க்க வைப்பதற்க்கு ஆரம்பப் புள்ளியாக அது அமைந்தது.
காதலைச் சொல்லி விட்டு அவள் மிக இயல்பாய் இருந்தாலும், இவன்தான் தடுமாறிக் கொண்டிருந்தான். மனம் தாங்காமல் ராம் மற்றும் மதுவிடம் சொன்ன போது, அவர்கள் புதிதாய் கேட்டு விட்டு,
ச்சே… இந்த எண்ணம் நமக்கு கூட வரலியே? ஹாசிணி மாதிரி ஒரு பொண்ணு உனக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பா என்று சொல்லியதில் இன்னும் குழம்பினான். ஆனால், இப்போதெல்லாம், இதுவரை அவன் கவனித்திராத ஹாசிணியின் அழகை கவனிக்க ஆரம்பித்திருந்தான். வெளிப்படையாகச் சொல்வதென்றால், அவளை சைட்டடிக்க ஆரம்பித்திருந்தான். இருந்தாலும் அவன் மனம் அதை ஏற்க மறுத்தது. மிக முக்கியமாய், மற்றவர்கள் எப்படி பேசுவார்கள் என்ற கவலை எழுந்தது.
சில நாட்கள் கழித்து அவள் விவேக்கை கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் சொன்னதாய், ஹரிணி சொன்ன போது கடும் அதிர்ச்சி அடைந்தான்.
உனக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சுல்ல என்று அவளைக் கோபமாகத் திட்டியவன், மதுசூதனனை சந்தித்த போது மனதளவில் சோர்ந்திருந்தான்.
நீண்ட நேரம் புலம்பியவனையே பார்த்துக் கொண்டிருந்த மதுசூதனன் மெதுவாய்ச் சொன்னார்.
நீங்க இல்லைன்னு சொன்னாலும், ஹாசிணியை லவ் பண்ன ஆரம்பிச்சுட்டீங்க சுந்தர்! ஏதோ தயக்கத்துல இல்லைன்னு சொல்லிட்டிருக்கீங்க! நீங்களே உங்க மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க!