Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#3
http://www.dailymotion.com/filmibeattamil
விஸ்வாசம் அஜித் கதாபாத்திரம் - சுவாரஸ்யமான தகவல்கள்- வீடியோ
சென்னை: விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது திரைப்படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி, இதுவரை உலா வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது 
[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811833.jpg]
விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. அதில் தந்தை கதாபாத்திரத்தின் பெயர் தூக்கு துரை என்றும், அவருக்கு ஜோடி காலா படப் புகழ் ஈஸ்வரி ராவ் என்றும் தகவல்கள் வெளியானது. இதேபோல், மகன் அஜித்தின் பெயர் சர்ப்பிரைஸ் என்றும், அவருக்கு ஜோடி தான் நயன்தாரா என்றும் கூறப்பட்டது.


Read more at: https://tamil.filmibeat.com/news/vishwas...57168.html
[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811818.jpg]
தூக்கு துரை: ஆனால், பட ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இந்தத் தகவல் தவறானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடம் இல்லையாம். தூக்கு துரை என்ற ஒரே கதாபாத்திரம் தானாம்.

[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811840.jpg]
நிரஞ்சனா: ஆனால் படத்தில் அவர் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளாராம். முரட்டுத்தனமான கிராமத்து இளைஞராக ஒரு பாதியிலும், மற்றொரு பாதியில் நகரத்து இளைஞர் போன்றும் அவர் தோன்ற இருக்கிறாராம். இதனால் படத்தில் ஒரே ஒரு நாயகி நயன் மட்டும் தானாம். படத்தில் அவரது பெயர் நிரஞ்சனா.
[Image: vishwasam-updates-ajith-doing-single-rol...811826.jpg]
ஆர்வம்: விஸ்வாசம் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்களையும் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஸ்வாசம் ரிலீசை அவர்கள் திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் ட்ரெ�... - by johnypowas - 04-12-2018, 09:57 AM



Users browsing this thread: 3 Guest(s)