Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#3
Chennai Rains: சென்னையில் விட்டு விட்டு மழை: எட்டு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும். 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி , காரைக்கால் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும். 
[Image: Tamil-image.jpg]
பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. மலைப்பகுதி மாவட்டங்களில், பனி மூட்டம் காணப்பட்டது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


விடிய விடிய மழை:
 
இதன் படி சென்னையில் புறநகர் பகுதிகளில் இரவு முழுதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதே போல திருவள்ளூர் மாவட்டத்தின் வடகடலேராப்பகுதி, பொன்னேரி , எண்ணூர், திருவெற்றியூர்,பெரியபாளையம், கும்மிடிபூண்டி, சிவகங்கையின் காரைக்குடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 04-12-2018, 09:38 AM



Users browsing this thread: 62 Guest(s)