ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம்! - கொந்தளிக்கும் மக்கள்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டசபையில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
![[Image: IMG-20181203-WA0024_18405.jpg]](https://image.vikatan.com/news/2018/12/03/images/IMG-20181203-WA0024_18405.jpg)
ஸ்டெர்லைட் ஆலையின் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, கடந்த சில நாள்களுக்கு முன்பு பசுமைத் தீர்ப்பாயத்தில், ``ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டது தவறு” என அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தருண் அகர்வால் குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட, சட்டசபையில் கொள்கை முடிவு எடுத்து சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.