Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
47.

 
அடுத்த இரு வாரங்களில், சுந்தர் மிகத் தெளிவாகியிருந்தாலும், ஹாசிணியின் குழப்பம் அதிகமாகியிருந்தது. ராம், மதுசூதனன், சுந்தர் சந்திப்புகளில், ஹாசிணியும் கலந்து கொள்வது இயல்பாகியிருந்தது. சமயங்களில் ராமின் பெண்ணும் கலந்து கொண்டாள்.
 
ராமிற்கும், மதுசூதனிற்க்கும் ஹாசிணி அன்புத் தங்கை என்றால், ராமின் பெண், சுந்தருக்கு செல்லத் தங்கையாகியிருந்தாள்.
 
ராம் இயல்பாகச் சொன்ன ஒரு விஷயமும், அதற்கு சுந்தரின் பதிலும் ஹாசிணியின் மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது…
 
சுந்தர், என்னோட சஜசன், நீ இந்த விவேக் விஷயத்தை முழுக்க மறந்துட்டு, வேற ஒரு கல்யாணம் பண்ணிக்க. எங்களை மாதிரி இல்ல உனக்கு! உனக்கு இன்னும் வயசும், வாழ்க்கையும் இருக்கு! 
 
ராம் சொல்றது கரெக்ட் சுந்தர்! உனக்காக இல்லைன்னாலும், உன் குழந்தைக்காகனாச்சும்ன்னு சினிமா டயலாக்லாம் பேச விரும்பலை. அது அந்தப் பொண்ணுக்கு செய்யுற துரோகம். முழுக்க, முழுக்க உனக்காகவே ஒரு கல்யாணம் பண்ணிக்க! உனக்காக வர்றவ, உன் குழந்தையை வேணாம்ன்னு சொல்லிடுவாளா என்ன?
 
பெருமூச்சு விட்ட சுந்தர், பாக்கனும், என்னதான் தெளிவானாலும், அடி மனசுல ஒரு சின்ன பயம் இருக்கு. மனசுக்கு நெருக்கமா இன்னொருத்தரை ஏத்துக்குறதுக்கு சின்னத் தயக்கம் இருக்கு. அவ்ளோ ஈசியா நம்பிக்கை வர மாட்டேங்குது!
 
மவுனமாய் கேட்டுக் கொண்டிருந்த ஹாசிணியின் கண்கள் ஈரமாகியது. அவள் மனம், சுந்தரின் நிலையைக் கண்டு தவித்தது. அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஒருவனுக்கு, இந்தத் துரோகம் கொடுக்கும் வடு எத்தகையது என்பதில் அவள் மிகவும் வருந்தினாள்.

[Image: 6395f054541f9650f8e790c8a5d9154a.jpg]

சும்மா லூசு மாதிரி உளறாத மாமா! இனி இப்டி பேசுன, எனக்கு கோபம் வந்துடும். லைஃல பாசிட்டிவா எப்டி இருக்கனும்ன்னு எனக்கு சொல்லிக் கொடுத்ததே நீதான். இப்ப யாரோ பண்ண தப்புக்கு, ஏன் இவ்ளோ நெகட்டிவா பேசுற? மனம் தாங்காமல் படபடத்தாள் ஹாசிணி!

 
அது யாரோ இல்ல ஹாசிணி! என் மனைவி! எனக்கு விவேக் மேல கூட பெரிய கோபமில்லை. ஹரிணி மேலத்தான் வருத்தமே!

 
என் அக்காவாவே இருந்தாலும் பராவாயில்லை, இனி ஹரிணி உங்களுக்கு யாரோத்தான் மாமா! நீங்க அவளை, மனசுல வெச்சு சுமக்கிறதுனாலத்தான், அவ பண்ணது வலிக்குது! அவ யாரோ, இனி உங்க வாழ்க்கைல அவளுக்கு இடமில்லை, எது உங்களோட லட்சியம், சந்தோஷம்ன்னு யோசிச்சு செய்ங்க. அப்ப, அந்த வலி பெருசா தெரியாது. அதை விட்டுட்டு…

 
தான் வருந்தினால், உடனே ரியாக்ட் செய்யும் ஹாசிணியின் அன்பில் சுந்தரும், அக்காவிற்காக இல்லாமல், நியாயத்தின் பால் பேசும் உண்மையில் ராமும், பெரிய மனோதத்துவ விஷயத்தை மிக சிம்ப்பிளாய் சொல்லி விட்டுச் செல்லும் அறிவில் மதுசூதனனும் புன்னகைத்தாலும், டாக்டரின் பார்வை கொஞ்சம் கூர்மையாகவே ஹாசிணியின் மேல் படிந்தது.

 
ஹாசிணி சொல்றது கரெக்ட்தான் சுந்தர். நான் சொல்ல வந்தது, விவேக்கிற்க்காக நீ யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ண வேணாம் என்பதற்க்காகத்தான். சீக்கிரம் இன்னொரு கல்யாணத்தைப் பண்ணு என்று ராம் முடித்தான்.

 
சுந்தருக்கு இன்னொரு பெண்ணின் மேல் நம்பிக்கை வருவதில் சிக்கல் என்பதில் வருந்தினாலும், அவன் இன்னொருத்திக்குச் சொந்தமாவான் என்பதில் ஹாசிணியின் மனம் மீண்டும் குழம்ப ஆரம்பித்தது. இனி முன்பு போல் அவனுடன் உரிமையாய் பழக முடியாது என்ற உண்மை அவள் முகத்தில் அறைந்தது.

 
தான் பருவம் வந்ததிலிருந்து தன் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ரகசியங்கள் எல்லாவற்றையும் சுந்தரிடம் பகிர்ந்து கொண்டு, அவனுடைய சஜசனை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, இனி அது முடியாது என்பதும், தனக்கு கணவனாக வருபவேனே அதை புரிந்துக் கொள்வானா என்ற நிச்சயமின்மையும், இதற்காக சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதா என்ற எண்ணமும் சேர்த்து ஹாசிணியை வாட்டியது.

 என்னதான் மனதை ஒருமுகப்படுத்தினாலும், அடுத்த நான்கு நாட்களும், ஹாசிணியின் மனம், அதைச் சுற்றியே வந்தது. சில நாள் கழித்து, அவளைத் தனியாக வந்து பார்த்தது டாக்டர் மதுசூதனன் தான்!

[Image: 366d9c60bf8c4405b7b96661c9fa77b0.jpg]

சொல்லு ஹாசிணி! என்ன உன் குழப்பம்?

 
அ… அண்ணா?!

 
அன்னிக்கு சுந்தர்கிட்ட நீ பேசுனதுக்கும் முன்னாடியே இருந்து உன்னை கவனிச்சிட்டுதான் வர்றேன். என்ன உன் யோசனை?

 
எ… என்னைத் தப்பா நினைச்சுட மாட்டீங்களே?!

 
சுந்தர் சொன்னதுக்காக மட்டுமில்லை ஹாசிணி, இத்தனை நாளா உன் கூட பழகுன முறையிலயும் சொல்றேன், நீ தெரிஞ்சு எந்தத் தப்பும் யாருக்கும் பண்ண மாட்ட. விளையாட்டுக்கு தங்கச்சின்னு சொல்லலை. உண்மையாவே நினைச்சதாலத்தான், இப்ப தனியா வந்து பேசுறேன். என்னைப் பாக்க வர்ற பேஷண்ட்டையே, அவங்க ஷேர் பண்ற விஷயத்தை வெச்சு, ஜட்ஜ் பண்ண மாட்டேன். அப்டியிருக்கிறப்ப, உன்னை எப்டி பண்ணுவேன்? தைரியமாச் சொல்லு.
 

பெருமூச்சு விட்டவள், எ.. எனக்கு இது இன்னமும் குழப்பமாதாண்ணா இருக்கு. யார்கிட்ட இதைப் பத்தி பேசுறதுன்னு தெரியாம ரொம்ப யோசனை. வெளி ஆட்கள், யாராலயும் இதை சரியா புரிஞ்சிக்க முடியுமான்னு தயக்கம். அதான்…

 
ஏன், எல்லா விஷயத்துக்கும் சுந்தர்கிட்டதானே டிஸ்கஸ் பண்ணுவ? இதுல மட்டும் என்ன?

 
இதுக்கு மாமா என்ன பதில் சொல்லுவார்னு எனக்கு நல்லா தெரியும்ண்ணா! தவிர இந்த விஷயமே மாமாவை முக்கியமா வெச்சுதான்…

 
அப்டி என்ன விஷயம் ஹாசிணி?
 

நா… நான், மாமாவை லவ் பண்றேனோன்னு தோணுதுண்ணா! என்று சொல்லி விட்டு சற்றே தலை குனிந்து இருந்தவளைப் பார்த்த ராம் பிரமித்து நின்றான். கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் தைரியமாக சுற்றும் போது, இவள் அன்பைச் சொல்லுவதற்கு தயங்குகிறாள் என்று…

 
எ… என்னண்ணா எ… எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க?

 
என்ன சொல்றதுண்ணு தெரியலை ஹாசிணி! ஓகே, நான் என் கருத்தைச் சொல்றதுக்கு முன்னாடி, என் கேள்விக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு. மே பி, அது உனக்கே தெளிவைக் கொடுக்கலாம். என்ன சொல்ற?

 
ம்ம்ம்.. ஓகே.
 

நீ பரிதாபப்பட்டு இந்த முடிவை எடுத்தியா?

ம்கும்… நான் ரொம்ப யோசிச்சதுக்கு காரணமே, இப்படி ஒரு கேள்வி வருமேன்னுதாண்ணா. பரிதாபத்துக்காக வாழ்க்கை நடத்த முடியாதுங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்! பரிதாபப்படுற நிலைல மாமா இருக்காருன்னு நீங்க நினைக்கிறீங்களா?

[Image: 3dbfddd267ae0a912f4dda184d496e99.jpg]

நான் என்ன நினைக்கிறேங்கிறது பிரச்சினை இல்லை ஹாசிணி! இந்தச் சமூகம் என்ன நினைக்கும்கிறதுதான் விஷயம்!

 
எந்தத் தப்பும் செய்யாம, மாமாவை வேற யாரும் பரிதாபமா பாக்கக் கூடாதுன்னு நினைக்குறேண்ணா. அதுனாலத்தான் ரொம்ப யோசனையா இருக்கு. சொல்லப் போனா, அக்கா இறந்தாலோ, அக்காவுக்கு குழந்தை இல்லைன்னாலோ, தங்கச்சியைக் கல்யாணம் பண்றது இங்க வாடிக்கைதான். அக்கா பண்ண விஷயம் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, மாமாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, எங்க வீட்லியே என்னை கேப்பாங்கங்கிறதுல எனக்குச் சந்தேகமே இல்லை.
 

ஆனா, நான் விரும்புறது அதை இல்லை! மாமாவை, அவரோட கேரக்டருக்காகவே லவ் பண்ணனும்கிறதுதான். இது அக்கா குழந்தையை வளர்க்கிறதுக்காகவோ, மாமா நிலைமை இப்படி ஆகிடுச்சேன்னு இல்லாம, அவரோட கேரக்டருக்காக நடக்கிறதா இருக்கனும்னு விரும்புறேன்.

 
எப்பருந்து அவரை லவ் பண்ற ஹாசிணி?

 
இதென்ன சினிமாவாண்ணா? ஒரு சீன்ல ஹீரோயினை, ஹீரோ காப்பாத்துவாரு, அதுலருந்து லவ் வந்துடுச்சுன்னு சொல்ல. எனக்கு மாமாவை எப்பவுமே பிடிக்கும். ஒரு வெல்விஷரா, ஃபிரண்டா, மோடிவேட்டரா, வழிகாட்டி மாதிரி பல ரோல்ல நெருக்கமா இருந்திருக்காரு. எங்க அக்காவுக்கு கூடத் தெரியாத, என் வயசுக்கேக்குரிய தடுமாற்றங்களைக் கூட அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அவ்ளோ க்ளோஸ்! ஆனா, அவரு மேல இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை! ஏன்னா, எனக்கு அவர் அறிமுகமானதே என் அக்காவோட கணவர்ங்கிற முறைலதான்.

 
ஆனா, இன்னிக்கு அக்காவோட உறவு தொடராதுங்கிற நிலையிலயும், என் மேல காட்டுற அக்கறைலியோ, அன்புலியோ எந்த டிஃபரன்சும் இல்லைங்கிறப்பதான் என் மனசு தடுமாற ஆரம்பிச்சுது. இத்தனைக்குப் பின்னாடியும், அடுத்து என்னன்னு தைரியமா நிக்குற அவரோட கம்பீரம் என்னை பாதிக்குது. ஆம்பிளைன்னா இப்டித்தான் இருக்கனும்ன்னு தோணுது!

 
எனக்கு வரப் போற கணவர், எங்க மாமா மாதிரியே கேரக்டர் கொண்டவரா இருக்கனும்ன்னு யோசிச்ச எனக்கு, ஏன் மாதிரியே? அவரே இருந்தா என்னன்னு ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கே, அதை ஏன் விடனும்ன்னு தோணுது!

 
எல்லாத்தையும் விட, எங்கக்காவோட நம்பிக்கை துரோகத்துக்கு பின்னாடி, வேறெந்த பொண்ணு மேலயும் நம்பிக்கை வர்லைன்னு சொன்னவரு, இன்னும் என்னை மட்டும் கண்மூடித்தனமா நம்புறாரே, அந்த நம்பிக்கையை ஏன் அவரோட வாழ்க்கை முழுக்க கொடுக்கக் கூடாதுன்னு யோசிக்க வைக்குது

 
நல்லாத் தெளிவா குழப்புற ஹாசிணி. இதுல எங்கியுமே லவ் வரலையே?

 
சினிமா, புக்ல வர்ற மாதிரி தோணுனாத்தான் லவ்வா என்ன? தன் கணவர்கிட்ட, ஒரு பொண்ணு எதிர்பாக்குற எல்லா கேரக்டரும் தேவைக்கும் அதிகமாவே அவர்கிட்ட இருக்கு. அதுனால அவர்கூட என் வாழ்க்கையை வாழனும்ன்னு ஆசைப்படுறது லவ் இல்லையா?

 
இவ்ளோ நாளா அக்கா கணவரா இருந்தப்ப, இது வெறும் அன்பு. இனி என் அக்கா கணவரா இருக்க முடியாது. வேற யாரோ ஒருத்தியோட கணவரா மாறுனா, அந்த அன்பு எனக்கு கிடைக்காதுங்கிற உண்மை, முன்ன மாதிரி நெருக்கமா இருக்க முடியாதேன்னு ஏக்கம், எல்லாம் தாண்டி, இந்த முறை, இன்னொருத்தருக்கு சொந்தமா அவரை யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு பொசசிவ்னெஸ் இதெல்லாம், ஒரு நார்மல் ஃபிரண்டுகிட்ட தோணாதுன்னா. வெளிப்படையாச் சொல்லனும்ன்னா, அவரை எனக்கே எனக்கா சொந்தமாக்கிக்கனும்ன்னு, கொஞ்சம் சுயநலமா யோசிக்கிறேன்!

 
இ… இன்னொருத்தி வந்து, அவரை சொந்தமாக்கிட்டுப் போறதுக்கு முன்னாடி, எனக்கு சொந்தமாக்கிக்கனும்ன்னு ஆசையா இருக்கு. இ.. இதுக்குப் பேரு லவ் இல்லையா?

 
சற்றே தலைகுனிந்து அனைத்தையும் சொன்னவளை கொஞ்சம் பிரமிப்புடனேயே பார்த்துக்கொண்டிருந்தான் மதுசூதனன். தன் காதலை கொஞ்சம் மட்டம் தட்டிச் சொன்னது போல் சொன்னாலும், அவள் சொன்ன விளக்கமும், அதிலிருந்த ஆழ்ந்த பொருளும், அதில் தெரிந்த அவள் தெளிவையும், அன்பையும் கண்டவன், இது நடந்தால் சுந்தர் லக்கி என்றே நினைத்தான். முன்பை விட மிகக் கனிவாகவும், அன்பாகவும் ஹாசிணியை பார்க்க ஆரம்பித்தான்.

[Image: de3005a60dbea99a2182dd52d72db6c8.jpg]

அவ்ளோ தெளிவா இருக்கன்னா, இன்னும் என்ன யோசிக்கிற ஹாசிணி?

 
முதல்ல நான் யோசிக்கிறது சரிதானான்னு டவுட்டுண்ணா. ஆனா உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன பின்னாடி எனக்கே நல்லா தெளிவு வந்துடுச்சு. இப்ப என் யோசனையெல்லாம், மாமாவை எப்டி கன்வின்ஸ் பண்ணனும், சமூகத்துக்கு, இதை எந்த மாதிரி சொல்லனும்ன்னுதான் என்று தலை நிமிர்ந்தவளைக் கண்டு புன்னகை வந்தது மதுசூதனனுக்கு.

 
என்னண்ணா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க?

 
நீ எடுத்த முடிவு சரியா, தப்பாங்கிறதுல்லாம் தேவையில்லாத விஷயம் ஹாசிணி! ஆனா, என்னை ஆச்சரியப்படுத்துனது, நீ யோசிக்கிற விதம்தான். சுந்தர் மாதிரி ஒரு மெச்சூர்டு திங்க்கருக்கு, நீ ரொம்பப் பொருத்தமா இருப்ப. ஏஜ் டிஃபரன்ஸோ, அண்டர்ஸ்டாடிங்கோ, அவன் குழந்தையை எப்படி பாத்துப்பன்னு எந்த விஷயத்துலியும் ப்ராப்ளம் இல்ல. சொல்லப் போனா, சில விஷயங்கள்ல, நீ அவன் மனைவியா வர்றதுதான் ரொம்பப் பொருத்தமும் கூட. என் டவுட்டு ரெண்டே ரெண்டுதான்!
 

எ.. என்னண்ணா?

 
ஒருத்தரை ஃபிரண்டா, வழிகாட்டியா, நல்லவர்ங்கிறதுனால மனசுக்கு நெருக்கமானவரா பாக்குறது வேற, அவரை லவ்வரா பாக்குறதுங்கிறது வேற! மெச்சூர்டா திங்க் பண்றதும், நடந்துக்குறதும் நல்லதுதான், ஆனா வாழ்க்கைல எல்லா நேரமும் அப்டியே இருந்தா போரடிச்சிடும். அதுல அழகு சேக்குறதுக்கு இண்டிமசி (Intimacy) ரொம்ப முக்கியம். என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல, நல்லா தெரிஞ்ச ஃபிரண்டைக் கல்யாணம் பண்ணவங்கக் கூட, இந்த டிஃபரன்சை புரிஞ்சிக்காம டைவர்ஸ்ஸு பண்ணலாமான்னு வந்துருக்காங்க.

 
சுந்தரை இதுவரைக்கும் மரியாதையா பாத்த நீ, கணவனா பாக்கனும்ன்னா, அந்த வித்தியாசத்தை உண்மையாலுமே உணர முடியுதா? இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருந்தாலும், இனிமே இருக்கக் கூடிய நெருக்கம் வேற. அந்த உணர்வை புரிஞ்சுதான் சொல்றியா? காதல் வேற, காமம் வேறன்னு  பேசுறதெல்லாம் சினிமா டயலாக்குக்குதான் சரி வரும், எல்லாப் பொண்ணுங்களுக்கும் தன் கணவன்கிட்ட பாதுகாப்பு உணர்வு வர்ற அதே அளவுக்கு, காம உணர்வும் வந்தாதான், அது முழுமையா இருக்க முடியும். இதெல்லாம் யோசிச்சுதான் சொல்றியா?

 
இவ்வளவு நேரம் தலை குனிந்திருந்தவள், நிமிர்ந்து டாக்டரின் கண்களையே பார்த்தவாறே சொன்னாள்!

[Image: 71cbead2bb42fcfd3bfad2bd0f771451.jpg]

இதெல்லாம் நல்லா யோசிச்சுதாண்ணா சொல்றேன். சொல்லப் போனா, இந்த மாதிரி ஆங்கிள்லதான் அதிகம் யோசிச்சேன். அதுக்கப்புறம்தான், இது லவ்வுன்னு முடிவுக்கு வந்தேன்.

 
இன்னும் பிரமித்தான் மதுசூதனன்! தான் காமத்தை யோசித்தேன் என்று சொல்லுவதற்கு, கொஞ்சமும் வெட்கமோ, கூச்சமோ படவில்லை. தன் மனதுக்கு பிடித்தவனுடனான நெருக்கத்தில் கிறங்கி, வெட்கப்படும் உணர்வு எவ்வளவு அழகோ, அதை விட அழகு, அந்த உணர்வை ஒருவரிடம் மட்டுமே காட்ட முடியும், அது என் சுந்தரிடம் மட்டும் காட்ட முடியும் என்று தெளிவாக, தைரியமாக டாக்டரிடம் சொல்லும் போது காட்டும் நிமிர்வு. ஹாசிணியின் அன்பைக் கண்டு அவளைக் கனிவாக பார்த்த டாக்டருக்கும், அவளது நேர்மையைக் கண்டு, அவள் மீதான மரியாதை கூடியது.

 
ப்பா… என்னா பொண்ணுடா? சுந்தர் சொன்னது மிகச் சரிதான். அந்தளவு ஹாசிணியை சரியாக கணித்திருக்குக்கும், அவளை புரிந்திருக்கும் சுந்தருடன் ஹாசிணி இணைவது, இருவருக்குமே மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும். சுந்தருக்கும், இந்தச் சூழ்நிலையில், அவனை விரும்பும், அவனை இன்னும் உயர்த்தும், முழுமையாக புரிந்து கொள்ளும் மனைவி என்றால், கூடுதல் இன்பம்தானே என்று தோன்றியது?!

 
உங்க ரெண்டாவது டவுட்டு என்னண்ணா?

 
ம்ம்… இவ்ளோ தெளிவா நீ யோசிச்சாலும், சுந்தர் இப்ப இருக்குற நிலைல, இதைப் புரிஞ்சுக்குவாரா, அவரும் உன்னை லவ் பண்ணுவாரா? நான் உன்னை அப்டி பாக்கலைன்னோ, பரிதாபப் படுறியான்னுதான் கேப்பாரு. அவரை எப்டி கன்வின்ஸ் பண்ணுவன்னுதான்!

 
ஹா ஹா ஹா… மாமாவை நான் லவ்தான் பண்றேன்னு தெளிவான பின்னாடி, ஒரு வாரமா நான் யோசிச்சது, இதைப் பத்திதான். என்ன சொன்னாலும், மாமா இதுக்கு ஓகே சொல்ல மாட்டாருன்னு எனக்கு நல்லாத் தெரியும்! அவரு ஓகே சொல்ல மாட்டாருங்கிறப்பதான், அவர் மேல இன்னும் லவ் ஜாஸ்தியா வருது. இந்த வாழ்க்கைல ஒரு சின்ன சுவாரசியம் வருது! ரொம்ப முக்கியமா, அவரை எனக்கு சொந்தமாக்கிக்கனும்ன்னு ஆசை அதிகம் வருது!

 
அப்புறம் என்ன பண்ணப் போற?

 
ம்ம்… ரெண்டு விஷயம் பண்ணப் போறேன். 

ஒண்ணு, அவரைக் கண்ணாபிண்ணான்னு லவ் பண்ணப் போறேன், அதை அவர்கிட்டயே சொல்லிட்டு பண்ணப் போறேன்.

[Image: maxresdefault.jpg]

கேட்டுக் கொண்டிருந்த மதுவுக்கும் புன்னகை வந்தது. சிரிப்புடன், அடுத்து என்னப் பண்ணப் போற என்று கேட்டவன் அதிர்ந்தான்.

ரெண்டு, விவேக்கை கல்யாணம் பண்ணிக்க ஓகேன்னு சொல்லப் போறேன்!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 16-09-2020, 10:47 PM



Users browsing this thread: 59 Guest(s)