16-09-2020, 07:33 PM
(This post was last modified: 16-09-2020, 07:40 PM by sanjaysara. Edited 2 times in total. Edited 2 times in total.)
அந்த வெடிச்சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்த இருவரும் அவசர அவசரமாக விலகினர். லேசாக களைந்திருந்த ஆடைகளை சரி செய்து கொண்ட மீனா வெளியே ஓடி தாங்கள் சிறை வைக்கப் பட்ட இடத்தை நோக்கி ஓடினாள். சஞ்சயும் அவளை பின் தொடர்ந்து ஓடினான். அவர்கள் அந்த இடத்தை அடையும் போது கிட்டத் தட்ட எல்லாம் முடிவுக்கு வந்திருந்தது. இரத்த வெள்ளத்தில் இருந்த பல தீவிரவாதிகளை தாண்டியவாறு அவர்கள் மூச்சிரைக்க ஓடினர். அங்கே சேதுபதி தனது வீரசாகஸங்களை முடித்துக் கொண்டு தனது சகபாடிகளுடன் நின்று கொண்டிருந்தான். தனது கணவன் சேதுபதியைக் கண்ட மீனாவின் ஓட்டத்தில் வேகம் அதிகரித்தது. சஞ்சய் தனக்கு பின்னால் வருவதை உணர்ந்தாள் மீனா. யாரும் எதிர்பாராமல் திடீரென பெருங் குரலெடுத்து கத்தினாள்.
"என்னங்க என்னை காப்பாத்துங்க"
குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய சஞ்சய் தன்னை நோக்கி ஓடி வரும் தனது அன்பிற்கினிய அழகிய மனைவியையும் அவளைத் துரத்தி வரும் தீவிரவாத இளைஞனையும் கண்டு துணுக்குற்றான். சட்டென துப்பாக்கியை உயர்த்தியவன், மீனாவின் திடீர் சப்தத்தின் அர்த்தம் புரியாமல் ஸ்தம்பித்து நின்ற சஞ்சயின் நெற்றிப் பொட்டை தனது தோட்டாவால் துளைத்தான்.
"ஹாஆஆ அம்மா ஆஆஆஆ "
என அலறலுடன் நிலத்தில் சாய்ந்தான் சஞ்சய். அவனது கண்கள் சற்றுத் தூரத்தில் இருந்த மீனாவின் மீது நிலைத்தது.
"சாரி சஞ்சய், என் குடும்ப வாழ்வை காக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. நாளை உன்னால் ஏதும் பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் இதைத் தவிர எனக்கு வேறு தீர்வில்லை"
முற்றும்.
என மனதிற்குள் சஞ்சயிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டாள் மீனா.