நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#28
ஏன் உன் அண்ணனுக்கு அதில் விருப்பமில்லையா?”

“அது தெரியாமல்தானே குழம்பிக் கிடக்கிறேன். அவனுக்குப் பிடிச்சதுன்னா வேறு வழியில்லாம ஏத்துக்க வேண்டியதுதான். ஆனால் அவளைக் கல்யாணம் பண்ணினா அவனோட வாழ்க்கை சந்தோசமா இருக்குமான்னு சந்தேகம்தான்.”
“அவங்க உண்மையிலேயே உன் அண்ணனை விரும்பினா என்ன பண்றது?
அப்படி இருந்தா உண்மையிலேயே சந்தோசம்தான். ஆனால் அதற்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு.”

“மதிக்கா உன் அண்ணியா வந்தா உனக்குப் பிடிக்குமா?”

அவள் கேட்டதும் அவன் சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.

“என்ன பதில் சொல்லாமல் இருக்கிறே?”

“மதிக்கா ஆசைப்பட்டாலும் அந்த சாரு அதை நடக்க விடமாட்டா. போராடி ஆசைப்பட்டதை பெறும் குணமும் மதிக்காவுக்கு கிடையாது. அவ தன் பெத்தவங்களை மீறி எதுவுமே செய்யமாட்டா. அவ பெத்தவங்களும் சாருவோட பேச்சைத்தான் கேட்பாங்க.”

வருத்தமுடன் சொன்னான்.

“உண்மையான காதலுக்கு போராடி வெல்ற சக்தி உண்டு.”

“அது தெரியும். ஆனால் அதை மதிக்கா செய்வாளாங்கிறதுதான் என் சந்தேகம்.”

அவள் அமைதியாகிவிட்டாள்.

இருவரும் சிறிது நேரம் காற்றாட நடந்தனர்.

மகேந்திரன் தனது அறையில் இருந்து ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்க்க அவர்கள் தெரிந்தார்கள்.
சிறிது நேரம் இலக்கில்லாமல் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் ஜன்னலை விட்டு விலகினான்
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 10-03-2019, 11:16 AM



Users browsing this thread: 2 Guest(s)