நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#27
சும்மா அத்தையைப் பார்க்க வந்தேன்.”

தான் என்னவோ தவறு செய்துவிட்டது போல் தலைகுனிந்தவாறே பேசிய சாருமதியைக் கண்டதும் யுகேந்திரனுக்குக் கோபம் வந்தது.
“ஏன் சாருக்கா நீ வரும்போது மதிக்கா மட்டும் வருவது தப்பா?”
அந்த வார்த்தைகள் நாராசமாய் அவள் காதில் ஒலித்தது.

அவள் மனதிற்குள் நீயே வரும்போது அவள் வந்தால் என்ன என்ற அர்த்தத்தில்தான் அவன் கேட்டான் என்று அவளுக்குப் புரிந்தது.

அவள் எத்தனை கூறியும் அவன் அவளை அக்கா என்றே அழைக்கிறான். அதுவும் அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அப்படி அழைக்கிறான்.

“சரி. நான் கிளம்பறேன்.”

சாருமதி கிளம்பினாள்.

“இரு மதிக்கா. சாருக்கா இப்பதானே வந்திருக்கா. எப்படியும் அவகிட்ட வண்டி இல்லை. உன்னோடவே வந்திருவா. கொஞ்ச நேரம் இரு. அம்மா அவளுக்கு ஏதாவது கொடுக்கட்டும்.”

என்று அவளைத் தடுத்துவிட்டான்.

சாருலதா எதுவும் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தாள். அவன் சொல்வது எல்லாம் சரியென்பது போல் பெரியவர்களும் எதையும் மறுத்துச்சொல்லவில்லை.

எப்போதும் சாருலதா மகேந்திரனுடன் வரும்போது பெரும்பாலும் அங்கேயே தங்கிவிடுவாள். இல்லை என்றால் ஓட்டுநர் அவளைக்கொண்டு போய் அவளது வீட்டில் விடுவான். அதை எல்லாம் அந்த வீட்டுப் பெரியவர்களும் இதோ இந்த யுகேந்திரனும் அறிவான்தோனே?

அப்படி இருக்கையில் இன்று என்னவோ சாருமதியை விட்டால் அவளுக்கு வீட்டுக்குப்போக வழியில்லை என்பது போல் பேசுகிறானே?

அதைப் பார்த்துக்கொண்டு பெரியவர்களும் சும்மா இருக்கிறார்கள்.
“இந்தாம்மா சாரு.”

வனிதாமணி அவளுக்கு எதையோ குடிப்பதற்கு கொண்டு வந்துகொடுத்தார்.


‘இதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.’

மனதிற்குள் அவரைத் திட்டிக்கொண்டே கை நீட்டி வாங்கி என்னவென்றே உணராமல் பருகினாள்.

அதன் பிறகு சாருமதி விடைபெற்றுக்கிளம்ப வேறு வழியில்லாமல் கிளம்பினாள்.

எப்படியும் உரிமையோடு அந்த வீட்டிற்குள் நுழைந்த உடன் மற்றவர்களை கவனித்துக்கொள்ளலாம். அதுவும் அந்த யுகேந்திரனைக் கண்டிப்பாக கவனிச்சே ஆகனும்.

இப்போதைக்கு இந்த மதியைக் கவனிக்க வேண்டும். இந்த அம்மாவைச் சொல்லனும். அவங்க ஏன் அவளை அனுப்பி வச்சாங்க? அவ ஏதாவது பொய் சொல்லிட்டு வந்திருப்பா.

‘மகேன் அத்தானைப் பார்த்ததும் அவள் கண்களில் வந்த மின்னலே அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிய வைத்து விட்டது. அவளுக்கு என்ன தைரியம். என் மனது பற்றி தெரிந்தும் அவள் இப்படி அவனைப் பார்த்தது தவறு. ஒருவேளை அத்தானைப் பார்க்கத்தான் அவள் இன்று வந்ததோ? இனி இவளைச் சும்மா விடக்கூடாது. அம்மாகிட்ட சொல்லி உடனே மாப்பிள்ளை பார்க்கச் சொல்லனும். இவ வீட்டை விட்டுப்போனாத்தான் எனக்கு நிம்மதி.’

உள்ளுக்குள் கருவிக்கொண்டவள் தானே ஸ்கூட்டியை ஓட்ட பின்னே சாருமதி அமர்ந்துகொண்டாள்.

வங்க ஏன் இப்படி நடந்துக்கிட்டாங்க யுகா?”

சகோதரிகள் இருவரும் கிளம்பியதும் அவர்கள் இருவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டனர்.

அப்போதுதான் கிருஷ்ணவேணி கேட்டாள்.

“அவ எப்போதுமே இப்படித்தான் கிருஷ்.”

“பாவம் மதிக்கா. தன் தங்கைகே இப்படி பயப்படறாங்க.”

“அவ வீட்டில் அவ ராஜ்ஜியம்தான். அவ சொல்லுக்கு இருக்கிற முக்கியத்துவம் மதிக்காவுக்கு கிடையாது. அதுதான்.”

“உனக்கு ஏன் சாருக்காவைப் பிடிக்கலை?”

அவள் கேட்டதும் அவன் சிறிது நேரம் பேசாமல் இருந்தான்.

“உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ம்கூம்.” அவள் தலையாட்டினாள்.

“ஏன்?”

“ஏன்னு தெரியலை. முதன் முதல்ல அவங்களைப் பார்க்கும்போது அவங்க நடந்துக்கிட்ட விதம் பிடிக்கலை. அது மட்டும்தான் காரணமா? இல்லை. ஒருவேளை உனக்குப் பிடிக்காததினால் இருக்கலாம்.”

சொன்ன தோழியைப் பெருமையுடன் பார்த்தான்.

“ஆமா. அவங்க உன் அத்தைப் பெண்தானே? நீ ஏன் அவங்களை அக்கான்னு சொல்றே?”

“அக்கான்னு சொல்றதே அவளை வெறுப்பேத்ததான்.”



“அவங்க உன் அண்ணனிடம் பழகுற விதத்தைப் பார்த்தால் அவங்களோட விருப்பம் வேற போல் தெரியுதே?”
“அப்படி அவ ஆசைப்பட்டா போதுமா? என் அண்ணன் விருப்பப்படனுமே?”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 10-03-2019, 11:13 AM



Users browsing this thread: 21 Guest(s)