நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#26
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 06 - ராசு

[Image: nivv.jpg]

அவள் அங்கே செல்வதில் அவளது பெற்றோருக்கும் தங்கைக்கும் அவ்வளவாக விருப்பமில்லை. அதை அவர்கள் வெளிப்படையாகவும் அவளிடம் சொல்லிவிட்டனர்.


அதனால் எப்போதாவது தான் அங்கே செல்வாள்.

அதுவும் தங்கையின் விருப்பம் பற்றி தெரிந்த பிறகு அவளுக்குமே மாமா வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை.

அவளுக்கு சின்ன வயதில் இருந்தே மாமா மகன் மகேந்திரன் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு.

அவன் தனக்கு கிடைக்க மாட்டான் என்று தெரிந்த பிறகு அவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வருகிறாள்.

ஆனால் மாமா குடும்பத்திற்கு தங்கை சரியானவளா என்று நினைக்கும்போது மனம் நிம்மதியை இழக்கிறது.

திருமணத்திற்கு முன்பே அவர்கள் திட்டமிடுவதைப் பற்றி நினைக்கையில் அருவெறுப்பாய் இருக்கிறது.

மாமா குடும்பத்தில் இருப்பவர்கள் எத்தனை பிரியமானவர்கள். என்னதான் மகேந்திரன் மனம் திறந்து தன் பிரியத்தைக் காட்டவில்லை என்றாலும் அவனது செயலில் இருந்தே அவனது பிரியத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

அதுவும் யுகேந்திரன். எத்தனை சூட்டிகையானவன்.

இப்போது அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் பெண்ணின் தலை இரண்டு மூன்று நாட்களாக தன் வீட்டில் உருட்டப்படுவது அவள் காதில் விழத்தான் செய்தது.

அவர்கள் பேச்சிலிருந்தே அவள் நல்லவளாகத்தான் இருப்பாள் என்று அவள் மனதிற்குத் தோன்றியது. இந்த நினைவு வந்ததுமே அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் கிளம்பிவிட்டாள்.

அவள் செல்லும் நேரத்தில் மகேந்திரனும் மாமாவும் இருக்க மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும்.



அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே வீடு நெருங்கிவிட்டது.


காவலாளி அவளைக் கண்டதும் ஒரு புன்சிரிப்புடன் கதவைத் திறந்துவிட்டார்.



அவள் உள்ளே நுழைந்தாள்.



“அடடே. வா மதி. என்ன இத்தனை நாளா ஆளையேக் காணோம்.”



வனிதாமணி அவளை வரவேற்றார்.



“அத்தை. நல்லாருக்கீங்களா அத்தை. யுகேந்திரன் எங்கே?”



“வீட்டில்தான் இருக்கிறான்மா. இதோ கூப்பிடறேன்.”



“யுகா.”



அவர் அழைக்கும்போதே மாடிப்படியில் இறங்கி வந்துகொண்டிருந்த யுகேந்திரன் அவளைக் கண்டுவிட்டான்.



“மதிக்கா. வா வா வா. உனக்கு இப்பதான் இந்த யுகாவோட நினைப்பு வந்துச்சா?”



செல்லக்கோபத்துடன் கேட்டவாறே வந்த அவனை பாசத்துடன் பார்த்தாள். கூடவே வந்த கிருஷ்ணவேணியை ஆவலுடன் பார்த்தாள். அவளும் அதே ஆவலுடன் அவளையேப் பார்த்துக்கொண்டு வந்தாள்.



“வாங்க மதிக்கா.”



புன்னகையுடன் வரவேற்றாள். சாருமதி அவளை ஆதூரத்துடன் அணைத்துக்கொண்டாள்.



“கிருஷ்ணா. உனக்கு இங்கே பிடிச்சிருக்கா?”



கிருஷ்ணவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது.



அக்கா என்று அழைத்ததற்கு சாருலதா எப்படி நடந்துகொண்டாள். இப்போது அவளது சகோதரி என்ன மாதிரி பிரியத்துடன் நடந்துகொள்கிறாள்.



“ரொம்ப பிடிச்சிருக்குக்கா.”



அன்றைய பொழுது மிகவும் கலகலப்புடன் சென்றது.



சாருமதி அதிகமாக பேசவில்லை என்றாலும் அவர்களின் பேச்சை ஒரு மென் சிரிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தாள்.



பொழுது போனதே தெரியவில்லை.



மாலையாகிவிட்டது.



சாருமதிக்கு மகேந்திரனைப் பார்த்துவிட்டுச் சென்றுவிடலாம் என்ற எண்ணமிருக்கவே அங்கேயே இருந்துவிட்டாள்.



அவளது கெட்ட நேரம் அன்று மகேந்திரனுடன் சாருலதாவும் வந்துவிட்டாள். அங்கே தனது சகோதரியைப் பார்த்ததும் அவள் முகம் அஷ்டகோணலாகியது.



மகேந்திரன் அவளைப் பார்த்து வரவேற்பாய் சிரிப்பை சிந்திவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.



அந்த சிரிப்பே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது.







“நீயா? இங்கே எங்கே வந்தே?”


கோபம் கொப்பளிக்க கேட்டாள் சாருலதா.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 10-03-2019, 11:10 AM



Users browsing this thread: 15 Guest(s)