13-09-2020, 05:40 PM
(08-01-2019, 11:52 AM)johnypowas Wrote: அப்படி என்ன செய்யும் இந்த டேட்டா வைப்பிங் மென்பொருள்கள்? இவை டேட்டாவை அழிப்பதுடன் நிற்காமல் அவற்றைப் பல்வேறு தேவையற்ற ஃபைல்கள் கொண்டு பலமுறை ஓவர்-ரைட் செய்யும். இதன்மூலம் பழைய பைல்கள் யாவும் தடயமற்று போகும். இது முடிந்தளவு உங்கள் போனில் இருக்கும் தகவல்கள் ரெகவர் செய்யப்படாமல் இருக்க உதவும். மொபைல் என்றல்லாமல் லேப்டாப், டேப்லட், ஹார்ட்டிஸ்க் என அனைத்து சாதனத்துக்கும் இந்த டேட்டா வைப்பிங் டூல்கள் கிடைக்கின்றன. உதாரணத்துக்குக் கூற வேண்டும் என்றால் 'BitRaser', 'Android Data Eraser', 'Safe Eraser' போன்ற பல மென்பொருள்கள் இதற்கென்றே கிடைக்கின்றன. இதில் சிக்கல் வந்தாலும், நீங்களே பலமுறை வெவ்வேறு ஃபைல்களை ஏற்றி மீண்டும் ஃபார்மட் செய்யுங்கள். இதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் உங்கள் பழைய டேட்டாக்கள் முற்றிலும் காணாமல் போகும்.super bro
ஆனால், இதுவும் மொத்தமாக டேட்டாவை அழித்துவிடாது என்கின்றனர் சில டெக் வல்லுநர்கள். முற்றிலுமாக சாதனத்தை அழித்தால் மட்டுமே முற்றிலுமாக டேட்டா அழியும். இல்லையேல் ஏதேனும் ஒரு வழியில் பழைய டேட்டாவை எடுத்துவிட முடியும் என்கின்றனர் அவர்கள். இருப்பினும் சொற்ப அளவிலான விடுபட்ட டேட்டாவே அப்படியும் கிடைக்கும். எனவே, டேட்டா வைப்பிங் மூலம் 99% இந்த டேட்டா ரெகவரி ஆபத்துகளிலிருந்து தப்பிக்க முடியும். இனி மொபைல்களை விற்கும் முன் இதைச் செய்ய மறந்துடாதீங்க!