10-03-2019, 09:59 AM
அமெரிக்காவின் முக்கியத்துவம்
பொதுவாக, இறக்குமதி சார்ந்த ஒரு நாடாக இந்தியா இருந்தபோதும், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய இறக்குமதியாளராகத் திகழும் அமெரிக்காவிற்கு, வருடந்தோறும் சுமார் 48 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3,36,000 கோடி) மதிப்பிலான பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப் படுவதால், இந்தியாவிற்கு 22 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நியச் செலாவணி அமெரிக்க வர்த்தகத்தின் மூலம் கிடைக்கிறது.
தற்போது ‘முன்னுரிமை சலுகை ‘நீக்கப்படுவதின் மூலம் மொத்த ஏற்றுமதியில் 10 சதவிகிதத்திற்குமேல் குறைந்துபோவதுடன், அந்நியச் செலாவணி வரவும் பெருமளவு குறைந்துபோக வாய்ப்புள்ளது. மேலும், இந்தச் சலுகை நீக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்படப்போவது, சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தாம். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகத்தினால் ஏற்கெனவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களின் தற்போதைய கடினமான சூழ்நிலையில், ‘ஏற்றுமதிப் போட்டித்திறன் பாதிப்பு’ இன்னும் அதிக எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கக்கூடும்.
குப்புறத் தள்ளிவிட்டு குழியும் பறிக்கும் ட்ரம்ப்
சிறப்பு முன்னுரிமைத் திட்டத்தை நீக்கப்போவதாக அறிவித்ததுடன் மட்டும் ட்ரம்ப் அரசு ஓய்ந்துவிடவில்லை. ஏழை, பணக்கார நாடுகள் என்ற வாதங்கள் எல்லாம் தற்போதைய காலகட்டத்திற்குப் பொருந்தாதவை என்று வாதிடும் ட்ரம்ப் அரசு, ‘சிறப்பு மற்றும் மாறுபட்ட நடைமுறைத் திட்டத்தின் (Special & Differential Treatment)’ கீழ் இந்தியச் சந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organization) முறையிட்டு வருகிறது.
இந்தியர்களின் வருடாந்திர வருவாய் 1000 டாலர்களுக்கும் மேல் உயர்ந்துவிட்டதால், ஏற்றுமதி சலுகைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ள நிலையில், ட்ரம்ப் அரசின் முயற்சிகள் வெற்றி பெற்றால், இந்திய சிறு ஏற்றுமதியாளர்களின் பாடு படுதிண்டாட்டமாகிப் போய்விடும்.
வணிகத் தந்திரங்களில் கைதேர்ந்த ட்ரம்ப்
ட்ரம்ப், மற்ற நாடுகளுடனான வணிக உறவின் மீதான தனது நிலையை அடிக்கடி அதிரடியாக மாற்றிக்கொள்வது, வெளிப் பார்வைக்குக் கேலிப்பொருளாகத் தெரிந்தாலும், அவற்றின் பின்னே பல்வேறு திரைமறைவு காய்நகர்த்தல்கள் உள்ளன.
உதாரணமாக, உலகத்தின் தொழிற்சாலையாக கருதப்படும் சீனாவில் உற்பத்தியாகும் பொருள்கள், அமெரிக்காவில் அதிகளவில் இறக்குமதி செய்யப் படுவது, அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் முக்கியக் காரணமாகக் கருதிய ட்ரம்ப், சீன இறக்குமதியின்மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். 200 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,40,000 கோடி) மதிப்பிலான சீன இறக்குமதி பொருள்களின்மீது 10% அதிகப்படியான சுங்க வரியை விதிக்கப் போவதாகவும் அறிவித்தார்.
இதனைக் கடுமையாக எதிர்த்த சீனா, அமெரிக்கப் பொருள்களின்மீது அதிகக் கட்டுப்பாடுகளை சுமத்தி தன்னுடைய பழியினைத் தீர்த்துக்கொண்டது. என்றாலும், தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்துள்ள சீனாவின் ‘வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம்’ என்ற அந்தஸ்த்தை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது கவலைதரும் விஷயமே!
மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையின்போது, அமெரிக்காவிடமிருந்து மிக அதிக அளவில் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொள்ளும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால், இந்தியா மீதான கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் போல தோன்றினாலும், இந்திய இணையதள சில்லறை வர்த்தகத் துறை மீதான சமீபத்திய கட்டுப்பாடுகள், இந்தத் துறையில் பெரிய அளவில் கால்பதிக்க விரும்பும் அமேசான், வால்மார்ட் போன்ற அமெரிக்க ஜாம்பவான் களுக்கு எதிராக அமைந்துள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.
தற்போதுள்ள நிலையில், முக்கியமான இரு ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவையாக மாறிவிட்டன. நம் நாட்டில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு ஆன்லைன்மீது பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது மத்திய அரசாங்கம். இந்த விஷயத்தில் இந்திய அரசினை வழிக்குக் கொண்டு வரவே, இந்த அதிரடி அறிவிப்பை ட்ரம்ப் எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அமெரிக்கா - இந்தியா இடையிலான இந்த வர்த்தக யுத்தத்தில் சிறு குறு ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோமாக!
குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!

இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்குச் சாதகமான தீர்ப்பு வரும்பட்சத்தில் இந்தியா, தனது விவசாயப் பொருள்களுக்கான மானியத்தை மேலும் குறைக்க வேண்டிய வாய்ப்பு உருவாகலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.