Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வர்த்தக யுத்தம்... இந்தியாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்..!

சீன அதிபரான ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவருக்குமிடையே இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டின் போது நேருக்குநேர் சந்திக்கவிருக்கிறார்கள்.  கடந்த எட்டு மாதங்களாக உலகையே அச்சுறுத்திவந்த அமெரிக்க-சீன வர்த்தகப் போர் இந்தச் சந்திப்பின்மூலம் முடிவுக்கு வரும் வகையில், புதிய வணிக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருப்பதாகச் செய்திகள் வெளியாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உள்பட பலரும் மகிழ்ச்சியடைந்தனர். 
[Image: p70a_1552095425.jpg]
இந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், இந்தியா விற்கு வழங்கிவந்த சிறப்புச் சலுகைகளைப் பறிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது, நமது ஏற்றுமதியாளர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.    

பறிபோகும் நாற்பதாண்டு சலுகை

கடந்த 1976-ம் ஆண்டில், இந்தியா உள்பட 129 வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் வர்த்தக முன்னுரிமைத் திட்டம் (Generalized System of Preferences) ஒன்று அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப் பட்டது. வளரும் நாடுகளின் போட்டித் திறன் அதிகரிக்க வேண்டும், அவற்றின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, வளரும் நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் ஆயிரக்கணக்கான பொருள் களுக்கு அமெரிக்காவில் சுங்கவரி விதிக்கப்படாது.  

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து 5.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40,000 கோடி) மதிப்பாலான சுமார் 2000 விதமான பொருள்கள் ஏற்றுமதியாகி வருகின்றன. இவற்றில் கரிம ரசாயனங்கள், வாகனங்கள், இரும்பிலான பொருள்கள், மின் இயந்திரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ட்ரம்பின் அதிரடி

அதிரடிகளுக்குப் பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது அடுத்த நடவடிக்கையாக, முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைத் திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் இந்திய அரசு நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டும் ட்ரம்ப் அரசு, குறிப்பாக அந்த நாட்டின் மருத்துவ இயந்திரங்கள் மற்றும் பால்பொருள் ஏற்றுமதியில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. 

இந்தியாவுடன் சேர்த்து துருக்கியின் சிறப்புச் சலுகைகளும் பறிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாதிப்பு இல்லை

இந்தச் சலுகை பறிப்பு நடவடிக்கை, அமெரிக்கா விற்கான இந்தியாவின் ஏற்றுமதியைப் பெரிய அளவில் பாதிக்காது என்று இந்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வாத்வான் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

[Image: p70b_1552095451.jpg]
முன்னுரிமை சலுகைத் திட்டத்தின்கீழ் ஏற்றுமதி செய்வதினால், இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய பலன் சுமார் 190 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,400 கோடி) மட்டுமே. எனவே, ஏற்றுமதியாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட மாட்டார்கள் என அனுப் வாத்வான் கூறியுள்ளார்.  சலுகைத் திட்டத்தை அமெரிக்கா ரத்து செய்ததை எதிர்த்து இந்தியா போராடும் என்றும் அறிவித்துள்ளார் அவர். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 10-03-2019, 09:58 AM



Users browsing this thread: 106 Guest(s)