Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஒருவேளை ரபேல் ஆவணங்களை திருடன் மீண்டும் ஒப்படைத்திருக்கலாம்!’ - கலாய்த்த ப.சிதம்பரம்

[Image: P.Chidambaram_16074_11204_18598.jpg]
ரபேல் போர்விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ்கட்சி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி, `இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், `ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை வழங்கி வருகிறது. எனவே இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


[Image: Rafale_-_RIAT_2009_3751416421-696x464_10590_18328.jpg]
இந்த மனு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், `ரபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுவிட்டது’ என தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனங்கள்; விமர்சனங்கள் எழுந்தன. இந்த திருட்டு ஆவணங்களை ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்டது, அரசாங்க ரகசியங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்டன, என கூறிய அட்டர்னி ஜெனரல், `அப்படி எதுவும் நடக்கவில்லை!’ என்று திடீர் பல்டி அடித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், `ரஃபேல் ஆவணங்கள் திருடுபோகவில்லை. ரஃபேல் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்தது போட்டோ காப்பிகள் மட்டுமே. எதிர்கட்சிகள்  ஆவணங்களை திருடி போட்டோ எடுத்தவிட்டன என்று தான் கூறினேன். ஆவணங்கள் திருடுபோய்விட்டன என்பது பொய்” என்றார். அட்டர்னி ஜெனரல் விளக்கத்துக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.`புதன்கிழமை திருடப்பட்ட ஆவணங்கள் வெள்ளிக்கிழமை நகலெடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது. ஆவணங்களை திருடிச்சென்ற திருடன் மறுநாள் அதை நகலெடுத்து ஒப்படைத்திருக்க வேண்டும்” என்றார். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 10-03-2019, 09:56 AM



Users browsing this thread: 65 Guest(s)