09-09-2020, 10:44 AM
(08-09-2020, 04:06 AM)POPE XVIII Wrote: இது என்னுடைய கதை தான், முதன் முதலில் xpயில் தான் எழுதினேன், பிறகு பல websiteகளில் என் கதையை பார்த்தேன், xp இழுத்து மூடுவார்கள் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்க வில்லை, அதனால் backup கூட எடுக்கவில்லை.Vazhthukkal thozhare!!
இது கிட்டத்தட்ட என்னுடைய semi autobiography தான், ஜசோவாக வரும் பெண் என்னுடைய class mate(உயிர் தோழி), அவளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், ஆனால் அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை, என்னைவிட்டு எங்கே போய்விட போகிறாள் என்று அமைதியாக இருந்துவிட்டேன், திடீரென்று நல்ல வரன் வந்ததும் படித்து கொண்டு இருக்கும் போதே திருமணம் ஏற்பாடு செய்து விட்டார்கள், ஒரு 1 வாரத்தில் கல்யாண தேதி வரை குறித்து விட்டார்கள்,
எனக்கு அவள் இனிமேல் இல்லை என்று தெரிந்த நொடி தான், அவளை நான் காதலிக்கிறேன் என்றே எனக்கு புரிந்தது, என்னால் ஏதும் செய்ய முடியவில்லை, அவளும் ரொம்ப சந்தோஷமாக தென்பட்டாள், செரி என்னுடைய காதல் ஒரு தலை காதல் தான் என்று மனதை தேற்றிக்கொண்டேன், நானும் எப்பொழுதும் போல நன்றாக ஜாலியாக இருப்பது போல் நடித்தேன், கோர்ஸ் முடிக்க 3 மாதங்கள் இருந்தது,
அவள் fiance பற்றி அவள் போடும் status எல்லாம் என்னை காயப்படுத்தியது, மிகவும் சிரமப்பட்டேன், அவள் பார்வையில் படாத வண்ணம் எங்கேயோ போய்விடவேண்டும் என்றெல்லாம் தோன்றியது,
என்னிடம் எல்லாமே இருந்தது, ஆனால் எதையோ இழந்த ஒரு வலி. செரி ஒரு தலை காதல் தானே என்று நானே பல முறை அறிவுரை கூறிக்கொண்டேன், சில மாதங்களில் என் மனதை ஓரளவு மாற்றிக்கொண்டேன், எனது கவனத்தை திசை திருப்ப பல முயற்சிகளை மேற்கொண்டேன்.
முடிந்த வரை அவளை avoid செய்தேன், கிட்டத்தட்ட நார்மல் ஆகிவிட்டேன், காலேஜ் இறுதி நாள் அன்று, என்னுடன் டீ சாப்பிடலாமா என்று கேட்க, நானும் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டேன், கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்தது, Phd viva மட்டுமே பாக்கி, அங்கே போனதும் ஒரு 30 நிமிடம் பேசிக்கொள்ளவே இல்லை, முகத்தை பார்க்கவே தர்ம சங்கடமான ஒரு சூழ்நிலை.
ஜூஸ் குடித்தோம், பப்ஸ் சாப்பிட்டோம், கடைசியில் நான் உன்னை காதலித்தேன் என்று சொன்னாள்,
ஆனால் உனக்கு விருப்பம் இல்லை என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை, நீயும் என்னை காதலித்தாயா என்று ஒரே மூச்சில் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தாள்,
இதை கேட்டதும் நெஞ்சே வெடித்து விட்டது, நான் லவ் பண்ணது உனக்கு புரிலையா என்றேன், அவள் முகம் மாறியது, நான் one side love னு நெனச்சேன் என்றாள், என்னால் பதிலே சொல்ல முடியவில்லை,
உடனே அழுதாள், ஏன் அழற அவரை பிடிச்ச நாள் தான கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட என்றேன், இல்லை என்றாள், அப்போ ஸ்டேட்டஸ் லாம் போட்டியே என்றேன், அவரு பார்க்க உன் ஜாடைல இருந்தாரு அதான் அவரை பிடுச்சுது என்றாள், இப்போ என்னாச்சு என்றேன், அவரு நீ இல்லையே என்றாள்,
மீண்டும் மனதில் வலி, இத்தனை நாள் அவளை வெறுக்க நான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்று போனது, 3 வருட பழக்கத்தில் ஒருமுறை கூட அவளை நான் தொட்டதில்லை, என் நெஞ்சு அழுதது,
என்ன செய்வது என்று புரியவில்லை, இப்போ ஏன் என்கிட்ட இதெல்லாம் சொல்ற என்றேன், இனிமே உன்னை பாப்பேன்னு தெரியல என்றாள், ஆம் நான் வேற ஊர், அவள் வேற ஊர்.
இருவரும் விடை பெற்றுக்கொண்டோம், அவளை அத்தோடு பிளாக் செய்தேன், வாழ்க்கையில் எதுவுமே பிடிக்கவில்லை, என்னுடைய வருத்தத்தை எப்படி போக்குவது என்றும் புரியவில்லை, 2008 இல் இருந்தே xp எனக்கு பரிச்சயம், செரி இதை கதையாக எழுதலாம் என்று எழுத ஆரம்பித்தேன்,
ஒரு adult forumஇல் தூய்மையான லவ் ஸ்டோரிக்கு இவ்வளவு response இருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை, ஜசோ வாக அவளை எழுதினேன், நான் ஜோ வாக, விமல் மாப்பிள்ளை, உண்மையிலேயே அவன் பெயர் அதுதான், அவள் அப்பா, அம்மா இருவரும் டீச்சர்ஸ், இங்கே டாக்டர்ஸ், ராமு டாக்டர் எங்க உண்மையான family டாக்டர்,
ஜோனாதன், John Wick படத்தில் Keanu Reevesன் பெயர்.
Johnsy - O Henryஇன் உடைய, The last leaf சிறு கதையின் ஹீரோயின் பெயர்.
ஜசோதா - அச்சமயம் அடிக்கடி நியூஸ்ல் கேள்விப்பட்ட பெயர்.
ஜான்சி கடைசியில் போகும் Minnesota, நான் படித்த , சில வருடங்கள் வாழ்ந்த இடம்.
அவர்கள் சாப்பிடும் கேன்டீன் எங்கள் காலேஜ் கேன்டீன்.
ஜான்சி , ஜோ விடம் பேசும் உரையாடல்கள், அப்படியே நானும் என் பழைய காதலியும் பேசும் தோரணை தான்.
நான் BE, MS முடித்து விட்டு பிறகு PHd பண்ணினேன், அவள் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ரெகுலர், அதனால் எனக்கும் அவளுக்கும் 3 வருடங்கள் வயசு வித்தியாசம்.
இன்னும் நிறைய referenceகள் மறந்து விட்டேன்,
என் வேதனையை போக்க நானாகவே உருவாக்கி கொண்ட கற்பனை கதாபாத்திரம் தான் ஜான்சி, நான் அவளை காதலித்தது போல என்னை காதலிக்க ஒரு பெண் வேண்டுமென்று, ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பெண் கிடைத்து விட்டாள், கதையை நிறுத்த கூட அதுதான் காரணம், அவளுடன் என் நேரத்தை செலவு செய்ததால் என்னால் எழுத முடியவில்லை, செரி ஜசோ, ஜோ, ஜான்சி ரசிகர்களுக்காக எழுதி முடிக்கலாம் என்று யோசிக்கயில், xossipஅயே இழுத்து மூடிவிட்டார்கள்.
கதையும் தொலைந்து விட்டது, என்னால் முடிக்கவும் இயலவில்லை. இப்பொழுது மீண்டும் என்னால் அக்கதையை அதே feelஉடன் எழுத முடியுமா என்று தெரியவில்லை, அப்போ கதை எழுதும் போது அழுது கொண்டே எழுதுவேன், என் சோகத்தை எல்லாம் வார்த்தைகளாக மாற்றினேன்,
இப்பொழுது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், என் பழைய காதலியை நான் முழுவதுமாக மறந்தே விட்டேன்.
2 வருஷங்கள் ஆன பின்பும் கூட இதை பற்றி நீங்கள் பேசும்பொழுது, மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆசை வருகிறது, ஆனால் இப்பொழுது இருக்கும் சந்தோஷமான மன நிலையில் ஒரு tragedy எழுதினால் நீங்கள் ரசிப்பீர்களா என்று தெரியவில்லை.
என்னதான் சந்தோஷமாக இருந்தாலும் பழைய காதல் / காதலியின் நினைவுகள் வரும்போது , அந்த பழைய நாட்களை re-live செய்யும் போது கொஞ்சம் மனம் வருந்த தான் செய்கிறது. சில சமயம் ச்ச்ச நம்மலா அப்படி இருந்தோம் என்று கூட தோன்றும்,
ஒரு தலை காதல் தான் என்று நான் நம்பி இருந்தால் எல்லாமே நன்றாக இருந்திருக்கும், அவளும் என்னை காதலித்தேன் என்று சொல்லி என்னை துன்பக் கடலில் தவிக்க விட்டிருந்தாள். இப்போது எல்லாம் சுகமே.
எல்லோருக்கும் நன்றி
POPE XVIII
Unnaippol unnai
Kadhalikka oru kadhali kidaitthatharkku
Aruthalukkaha ezhuthiya ungalukku anbaana aravanaipe kiddaitthulladhu
Adharkku mahizhtchiye
Mudindhal ungal ezhutthil ethanum siru kadhaiyavadhu ezhutha muyazhungal adhu ennai ponrorin arudhalukkaha