09-03-2019, 05:03 PM
(This post was last modified: 09-03-2019, 05:03 PM by johnypowas.)
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘பூமராங்’. பொழுது போக்கு அம்சங்களை கடந்து சினிமாவில் சமீக காலமாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள், சமூக பிரச்னைகளை அடிப்படையாகக்கொண்டு திரைப்படங்கள் வரத்தொடங்கி இருக்கிறது. இது போன்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்திய நாட்டில் வலுபெற்று வரும் மிகப்பெரிய பிரச்னையாக கருதப்படும் ஒரு பகுதி விவசாயிகளின் பிரச்னைதான் ‘பூமராங்’.
தீ விபத்தில் சிக்கி தனது முகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் சிவா என்பவருக்கு விவசாய புரட்சி செய்து எதிரிகளால் கொள்ளப்படும் சக்தியின் (அதர்வா) முகத்தை முகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைக்கிறார்கள் மருத்துவர்கள். அறுவை சிகிச்சைக்கு பின் சக்தியை போலவே இருக்கும் சிவாவை ஒரு கூட்டம் கொல்ல முயற்சிக்கிறது. இதனை அறிந்து கொண்டவர், தனக்கு முகம் கொடுத்தவர் யார், எதர்காக அவரை போல இருக்கும் என்னை கொல்ல முயல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள புறப்படுகிறார். சக்தி யார் எந்த ஊரை சேர்ந்தவர், அவரை பின்தொடர்ந்த ஆபத்து என்ன சக்தியின் விவசாயப்புரட்சி என்ன ஆனது என்பதுதான் பூமராங் படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பாதியில் விளையாட்டு இளைஞனாக நடித்திருக்கும் அதர்வா இரண்டாம் பாதியில் புரட்சிகர இளைஞனாக படம் பார்க்கிறவர்களை ஈர்க்கிறார். இதுவரை அதர்வா ஏற்று நடிக்காத காதாபாத்திரம், சவாலான கதாபாத்திரம் என்பதை அறிந்து தன்னுடைய முழு திறமையையும் வெளிபடுத்தி நிறைவாக நடித்திருக்கிறார் அதர்வா. முதல் பாதியில் அதர்வாவின் காதலியாக வரும் மேகா ஆகாஷ், கதாநாயகிக்கு பேசும் அளவிற்கு கனமான காட்சிகளும் கதாபாத்திரமும் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கட்சிதமாக முடித்துக்கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் அதர்வாவின் நண்பனாக வரும் சதீஷ் எப்போதும் போல் தன்னுடைய நையாண்டி கமெண்ட்டுகளில் சிரிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் அதர்வாவிற்கு நண்பனாக வரும் ஆர்.ஜே.பாலாஜி எப்போதும் போல் தற்போதைய அரயலை தனது கமெண்ட்டுகளில் சிர்க்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று தன்னுடைய நடிப்பால் படத்தில் அதிக ஸ்கோர் எடுக்கிறார். மற்ற திரைக்கலைஞர்கள் அனைவரும் படத்தின் இன்னொரு தூணாக இருக்க ரதன் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு வலுசேர்க்கிறது.
நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் இந்தியாவில் நிலவும் விவசாயப் பிரச்னைக்கு எந்த அளவிற்கு தீர்வு கிடைக்கும் என்பதை இந்த படம் வலுவாக பேசியிருக்கிறது.
சமகால அரசியலில் மத்திய மாநில அரசு திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களை பாதித்திருக்கிறது என்பதை ஆதார் கார்டு முதல், விவசாய பிரச்னைகளை நையாண்டியாக பேசி கடக்கும் விதத்தில் வசனங்கள் இடம் பெறுகின்றன. உறுப்பு தானம், குருதி தாணம் போன்று தோல் தானத்தின் தேவையையும் இப்படம் பேசியிருக்கிறது. படத்தின் முதல் பாதியை சற்று மெதுவாக நகர்த்தினாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்படைகிறது. படத்தில் இடம் பெற்ற கிராப்பிக்ஸ் இன்னும் நன்றாக செய்திருக்கலாமோ என்று தோன்றிது. மொத்தத்தில் நீர் பிரச்னை, விவசாய பிரச்னை, இதன் மூலம் நடத்தப்படும் அரசியல், கார்ப்பரேட் நிறுவனங்களின் தந்திரம் என படம் பல கேள்விகளையும் முடிச்சுகளையும் கட்டவிழ்கிறது.
பெரும் முதலாளிகளுக்கான ஐடி நிறுவனங்களில் ஆட்டு மந்தைகளைப் போல் பெரும் இளைஞர் சமூகம் அடைப்பட்டு கிடப்பதை விட்டு இந்நாட்டு இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையயும் அடுத்த தலைமுறைக்கும் விவசாயத்தை கடத்த வேண்டும் என்பதுதான் படம் பேசி இருக்கும் முக்கிய அரசியல்.