screw driver ஸ்டோரீஸ்
"மோதினா என்ன..?? ஓ.. எங்கமேல மோதினா உங்க ஓட்டை ரயிலு ஒடைஞ்சு போய்டும்னு பயமா..??" தாமிராவின் கேலி செம்பியனை செம டென்ஷனாக மாற்றும்.

"அடிக்க்க்... குட்டிக்கழுதை..!!! என்ன பண்றேன் பாரு இப்போ..!!"

ஆவேசமாக கத்துகிற செம்பியன், மீண்டும் குனிந்து சரளை கற்களை பொறுக்கிக் கொள்வார்.. ஓடுகிறவர்களை தொடர்ந்து விரட்டிக்கொண்டே செல்வார்.. குழந்தைகள் செல்கிற திசையை விட்டுவிட்டு, குறிபார்த்து வேறு திசையெல்லாம் கல் எறிவார்..!!

பழைய நினைவில் இருந்து மீண்ட ஆதிராவுக்கு, அவளையும் அறியாமல் உதட்டில் ஒரு புன்னகை அரும்பியது.. எவ்வளவு இனிமையான குழந்தைப் பருவம் என்று தோன்றியது.. மீண்டும் அந்தக் காலங்கள் திரும்ப வராதா என ஏக்கமாக இருந்தது..!!

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் அகழி ரயில் நிறுத்தத்தில் இருந்தனர்.. அலுவலகம் சென்று செம்பியனை சந்தித்தனர்..!! சிறிய அலுவலகம்தான்.. ஒரு நாளைக்கே நாலு ரயில்கள்தான் இந்த நிறுத்தத்தில் நிற்கும்.. எனவே.. ஐந்தே ஐந்து அலுவலர்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய அலுவலகம்தான்..!!

ஆரம்ப நல விசாரிப்புகளுக்கு பிறகு.. ஆதிரா வந்த விஷயம் பற்றி கேட்டார் செம்பியன்..!! அவளும்.. தாமிரா மேற்கொண்ட ஆராய்ச்சி பற்றியும், அது தொடர்பாக அவள் இவரை அடிக்கடி வந்து சந்தித்தது பற்றியும் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கேள்வியை கேட்டாள்..!!

"தாமிரா என்ன விஷயமா உங்களை வந்து பாத்தான்னு தெரிஞ்சுக்கலாமா அங்கிள்..??"

"ஒன்னுல்லம்மா.. சில தகவல்கள்லாம் கேட்டு தெரிஞ்சுப்பா.. அவ்வளவுதான்..!!!"

"எந்த மாதிரி தகவல்கள்..??"

ஆதிரா அவ்வாறு கேட்டதும், செம்பியன் சட்டென அமைதியானார்.. மனதில் இருக்கிற விஷயங்களை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்த, நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று தோன்றியது..!! சில வினாடிகள் இடைவெளிவிட்டு, அதன்பிறகே பேசினார்..!!

"ஹ்ம்ம்.. உனக்கே தெரியும்ல.. எனக்கு ஆவி நம்பிக்கைலாம் ரொம்ப ஜாஸ்தி.. ஆவிகள் இந்த உலகத்துல நிச்சயமா இருக்குன்னு நம்புறவன் நான்..!! ஆவிகளை பத்தி நெறைய விஷயங்கள் படிச்சிருக்கேன்.. தெரிஞ்சு வச்சிருக்கேன்.. சின்ன சின்ன ஆராயச்சிலாம் பண்ணிப் பாத்திருக்குறேன்..!!"

"ம்ம்.. அதுலாம் தெரியும் அங்கிள்..!!"

[Image: krr32.jpg]

"ஆவிகளை பத்தி பொதுவான ஆராய்ச்சி மட்டும் இல்லாம.. நம்ம ஊரே பயந்து நடுங்குற குறிஞ்சியை பத்தியும், நெறைய விஷயங்கள் நான் சேகரிச்சு வச்சிருக்கேன்..!! இப்போன்னு இல்ல.. சின்ன வயசுல இருந்தே எனக்கு அந்த இன்ட்ரஸ்ட் உண்டு.. எனக்கு ஏனோ குறிஞ்சியை பத்தி தெரிஞ்சுக்குறதுல ஒரு ஈடுபாடு.. முப்பது முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சது இதுலாம்..!!!"

"ம்ம்..!!"

"குறிஞ்சி தூக்கிட்டுப் போயிட்டான்னு சொல்லப்படுறவங்களோட வீட்டுக்குலாம் போவேன்.. அவங்க குடும்பத்தாரோட பேசுவேன்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சு வச்சுப்பேன்.. எல்லாத்தையும் டைரில எழுதி வச்சுப்பேன்..!! இதுவரை.. இந்த அகழில காணாம போனவங்களோட மொத்த லிஸ்டும்.. கிட்டத்தட்ட மொத்தமா எங்கிட்ட இருக்கு..!!

"ஓ..!!" 
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-03-2019, 09:59 AM



Users browsing this thread: 10 Guest(s)