screw driver ஸ்டோரீஸ்
மணிமாறன் இயல்பாக சொல்ல, ஆதிராவின் முகத்தில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம் தெரிந்தது..!! அதன்பிறகும் சிறிது நேரம் ஆதிரா அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.. தனக்கு தெரியாத ஏதாவது தகவல்களை, தாமிரா அவருடன் பகிர்ந்திருக்கிறாளா என்கிற ஆர்வத்துடன் அமைந்திருந்தது அவளது கேள்விகள்..!! ஆனால்.. அவருடைய பதில்கள் எதுவும் அவளுக்கு உபயோகமாக இல்லை.. தாமிரா பகிர்ந்துகொண்ட தகவல்கள் என, அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே.. ஆதிரா ஏற்கனவே அறிந்த விஷயங்களாகவே இருந்தன..!!

இருவரும் வெறுங்கையுடன் அங்கிருந்து கிளம்பினார்கள்.. இருவரிடமுமே ஒருவித சலிப்பும், ஏமாற்றமும்.. ஆதிராவிடம் சற்று அதிகப்படியாகவே காணமுடிந்தது..!! காரில் ஏறி அமர்ந்ததும் கதிர் கேட்டான்..!!

"நேரா வீட்டுக்குத்தானா..??"

"இல்ல கதிர்.. ஸ்டேஷன் போலாம்.. செம்பியன் அங்கிள பார்த்துட்டு போய்டலாம்..!!"

"ப்ரொஃபஸாராலேயே யூஸ்ஃபுல்லா எந்த இன்ஃபர்மேஷனும் தர முடியல.. செம்பியன் அங்கிள்ட்ட என்ன கெடைச்சிடப் போகுது..??"

"பாக்கலாம்.. பேசிப்பார்ப்போம்..!!"

சுவாரசியம் இல்லாமலே சாவி திருகி காரை ஸ்டார்ட் செய்தான் கதிர்..!! வந்த வழியிலேயே சிறிது நேரம் திரும்ப சென்று.. பிறகு அந்த சர்ச்சை தாண்டியதும்.. வேறு திசையில் கார் தடதடவென வேகமெடுத்து ஓட ஆரம்பித்தது..!! 

"ரெண்டு புள்ளைகளும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரைத்தான் போய் அடிக்கடி பாத்துட்டு வருங்க..!!"

நேற்று.. தனது புலம்பல்களுக்கு நடுவே அகல்விழியின் அம்மா உதிர்த்த வார்த்தைகள்தான்.. தற்போது இவர்களது இந்த பயணத்திற்கு காரணம்..!!

இருபுறமும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள், நீண்ட சாலையை நிழலால் நிறைத்திருந்தன.. வெளிச்சம் குறைவாக இருந்த போதிலும், வேகமாகவே காரை செலுத்தினான் கதிர்..!! நேர்திசையில் சென்றுகொண்டிருந்த சாலை.. சிறிது தூரத்தில் ரயில் தண்டவாளங்கள் குறிக்கிட்ட இடத்தில் சற்றே வளைந்து.. பிறகு அந்த தண்டவாளங்களுக்கு பக்கவாட்டில் நீளமாக ஓடியது..!! 

ஆதிரா தலையை திருப்பி கார் ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.. சரசரவென கடந்து எதிர்ப்பக்கம் செல்கிற மரங்களுக்கு இடையே, சரளைக் கற்களில் படுத்தவாறு கூடவே வருகிற தண்டவாளங்கள் காட்சியளித்தன..!! அந்த தண்டவாளங்களை பார்க்க பார்க்க.. குழந்தைப் பருவ நினைவொன்றில் மெல்ல மெல்ல மூழ்க ஆரம்பித்தாள் ஆதிரா..!!

“ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயில் வண்டி..
திருச்சிக்கு போற ரயில் வண்டி..!!
குபுகுபு குபுகுபு ரயில் வண்டி..
குன்னூருக்கு போற ரயில் வண்டி..!!”


அதோ அந்த தண்டவாளத்தில்.. ஆதிரா, தாமிரா, சிபி, கதிர் என நால்வரும்.. ஏழு, எட்டு வயது பிள்ளைகளாக இருந்தபோது.. ஒருவர் பின் ஒருவராக நின்று.. ஒருவர் சட்டையை அடுத்தவர் பற்றிக்கொண்டு.. பாடிக்கொண்டே திடுதிடுவென ஓடியவாறு.. ரயில்விட்டு விளையாடிய நினைவு..!!

"கடகட கடகட ரயில் வண்டி..
கடலூருக்கு போற ரயில் வண்டி..!!”


"ஏய் பிள்ளைகளா.. எறங்குங்க பிள்ளைகளா..!!" 

அவர்களுக்கு பின்னால் கத்திக்கொண்டே ஓடி வருவார் செம்பியன்.. சரளை கற்களை பொறுக்கி எடுத்து, இவர்கள் மீது எறிவது போல பாவ்லா காட்டி, குறிபார்த்து வேறெங்கோ எறிவார்..!! குழந்தைகளை பயமுறுத்துவதுதான் அவரது நோக்கம்.. காயப்படுத்துவது அல்ல..!!

"இப்போ எறங்க போறிகளா இல்லையா..?? ஏய்.. சொல்றேன்ல.. எறங்குங்க.. வேறபக்கம் போய் வெளையாடுங்க.. போங்க..!!"

"தடதட தடதட ரயில் வண்டி..
தஞ்சாவுருக்கு போற ரயில் வண்டி..!!"


குழந்தைகளின் பாடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.. அவர்களது ரயில் ஓட்டமும் நிற்காது..!! பக்கவாட்டில் திரும்பி செம்பியனுக்கு அழகு காட்டியவாறு.. தொடர்ந்து அந்த தண்டவாளங்களில் ஓடிக்கொண்டே இருப்பார்கள்..!!

"இந்தா.. ரயிலு வரப்போகுது இப்போ..!!" பயமுறுத்தி பார்ப்பார் செம்பியன்.

"வந்தா வரட்டும்..!!" ஓடிக்கொண்டே கத்துவாள் கடைசியாக செல்கிற குட்டித்தாமிரா.

"மோதப்போகுது..!!"

தாமிரா இப்போது நின்று திரும்பி பார்ப்பாள்.. கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து ஸ்டைலாக நின்றவாறு.. தன்னை நோக்கி ஓடிவருகிற செம்பியனிடம் கேலியாக சொல்வாள்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 09-03-2019, 09:56 AM



Users browsing this thread: 3 Guest(s)