09-03-2019, 09:55 AM
பால் கலக்காத க்ரீன் டீ-தான் எங்க வீட்ல எப்போவும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க..!! ஹாஹா..!!"
என்று சிரிப்புடனே கோப்பைகளை இவர்களிடம் நீட்டினார்..!! மூவரும் தேநீர் உறிஞ்ச ஆரம்பித்ததுமே..
"ம்ம்.. சொல்லுங்க.. என்ன விஷயமா என்னை பாக்க வந்திருக்கீங்க..??" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
ஆதிராவே பேசினாள்.. தாங்கள் வந்திருக்கிற விஷயம் பற்றி அவருக்கு விளக்கி கூற ஆரம்பித்தாள்..!!
"......... அந்த ஆராய்ச்சிக்கு நீங்கதான் கைடா இருந்திருக்கீங்க.. கரெக்டா..??"
"ஆமாம்.. ஆரம்பத்துல வேற டாபிக் சொன்னாங்க.. அப்புறம் தாமிரா திடீர்னு வந்து குறிஞ்சியை பத்தி ரிசர்ச் பண்ணப் போறதா சொன்னா..!!"
"ம்ம்..!!"
"குறிஞ்சியை பத்தி ரிசர்ச்னதும்.. எனக்கும் மொதல்ல கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு..!!"
"ஏன்..??"
"ஏன்னா.. எப்படி சொல்றது.. ம்ம்ம்.."
சொன்ன மணிமாறன் சில வினாடிகள் அப்படியே அமைதியாகிப் போனார்.. கையிலிருந்த தேநீர் கோப்பையையே கூர்மையாக வெறித்தார்..!! ஆதிராவும், கதிரும் அவருடைய முகத்தையே புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார்..!!
"ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்..!! ஏழு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல வந்து நான் செட்டில் ஆறப்போ.. குறிஞ்சியை பத்தி ஊர் ஜனங்க சொன்ன கதைலாம் மொதமுறையா கேள்விப்பட்டேன்..!! ரொம்ப பயமுறுத்தினாங்க.. 'தனியா எங்கயும் போகாதிங்க, குறிஞ்சி தூக்கிட்டு போய்டுவா, பஸ்பம் ஆக்கிருவா, ஆவியா மாத்திருவா' அப்படி இப்படின்னு..!!"
"......................."
"ஹாஹா.. அதெல்லாம் கேக்குறப்போ அப்போ எனக்கு சிரிப்புதான் வந்துச்சு.. பைத்தியக்கார ஜனங்கன்னு தோணுச்சு..!! ஆனா.. என் வொய்ஃப்க்கே அது நடந்தப்பதான்.. அவங்க சொன்னதோட சீரியஸ்னஸ் புரிஞ்சது..!!" மணிமாறன் தளர்ந்த குரலில் சொல்ல,
"......................." ஆதிராவும் கதிரும் வாயடைத்துப் போய் அவரை பார்த்தனர்.
"என் வொய்ஃப் ரொம்ப தைரியசாலிமா.. நல்ல துணிச்சலான பொம்பளை..!! குறிஞ்சி கதையை அவ குண்டுமணி அளவுக்கு கூட நம்பல.. எங்க போனாலும் தனியாத்தான் போவா.. தனியாத்தான் வருவா..!! அவளோட தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆனா.. அந்த தைரியமே அவளுக்கு ஆபத்தா முடியும்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல..!!"
"......................."
"களமேழி போறேன்னு சொல்லிட்டு கெளம்புனவ.. காத்துல கரைஞ்ச மாதிரி மாயமா மறைஞ்சு போய்ட்டா.. கார் மட்டும் தனியா காட்டுக்குள்ள நின்னுட்டு இருந்துச்சு..!!"
"......................."
"ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! நான் உசுரையே வச்சிருந்த என் வொய்ஃப், இப்படி என்னை பைத்தியக்காரன் மாதிரி பொலம்ப விட்டுட்டு போய் அஞ்சு வருஷம் ஆச்சு..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!"
"......................."
"ஹ்ம்ம்ம்ம்..!! குறிஞ்சின்ற ஒரு விஷயம் மேல எனக்கு பயம் வந்ததே அதுக்கப்புறம்தான்மா..!! அதான்.. உன் தங்கச்சி வந்து குறிஞ்சியை பத்தி ரிசர்ச்னதும்.. ஆரம்பத்துல எனக்கு பயமா இருந்துச்சு..!!"
"ம்ம்ம்..!!"
"அப்புறம் அவ எக்ஸ்ப்லைன் பண்ணதும் எனக்கும் இன்ட்ரஸ்ட் வந்தது.. இவ்வளவு ஹைப் க்ரியேட் பண்ணிருக்குற அந்த குறிஞ்சியோட உண்மையான கதையை தெரிஞ்சுக்கணும்னு.. எனக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் வந்துடுச்சு..!! நல்லா பண்ணுங்கம்மான்னு ரெண்டு பேரையும் என்கரேஜ் பண்ணினேன்..!!"
"ம்ம்.. எங்களுக்கு அந்த ரிசர்ச் ஆர்டிக்கிளோட காப்பி வேணும் ஸார்.. கெடைக்குமா..?? உங்கட்ட இருக்கா..??"
"இல்லம்மா.. அந்த மாதிரி எங்கிட்ட எந்த காப்பியும் இல்ல.. ரிசர்ச் முடிஞ்சுதான் அதை சப்மிட் பண்றதா இருந்தது.. அதுக்கு முன்னாடிதான் என்னன்னவோ ஆகிப்போச்சே..!! ரெண்டு பேரும் மன்த்லி ரிப்போர்ட் சப்மிட் பண்ணுவாங்க.. ரிசர்ச்சோட ப்ராக்ரஸ் பத்தி.. அவ்வளவுதான்..!! அதுலாம் எங்க காலேஜ் சம்பந்தப்பட்ட ஃபார்மாலிட்டி.. உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன்..!!"