09-03-2019, 09:35 AM
பரியேறும் பெருமாளை அடுத்து, கதிரின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம். இதுவரை கதையின் நாயகனாக நடித்து வந்த கதிரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்து செல்கிறது சத்ரு. மிகவும் கமர்சியலாகவும் இல்லாமல், அதே நேரம் சுவாரஸ்யமாகவும் படம் இருப்பதால், இந்த படம் நிச்சயம் கமர்சியல் ஏரியா பக்கம் கதிரை அழைத்து செல்லும்
காக்கி யூனிபார்ம், முறுக்கெறிய உடல், ரேபான் க்ளாஸ் என போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டுகிறார். திருடர்களில் இருந்து உயரதிகாரிகள் வரை அசால்டாக கையாள்வது, எதிரி யார் என தெரியாமல் திண்டாடுவது என லைக்ஸ் அள்ளுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.
படத்தின் மையமே வில்லன் கதாபாத்திரம் தான். யாருடா இந்த பையன் என கேட்கும் அளவிற்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார் லகுபரன். கொடூரமான செயல்களை குற்ற உணர்ச்சியே இல்லாமல் அசால்டாக செய்து மிரட்டுகிறார். ஆனால் சில காட்சிகளில் ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். லகுபரனுடன் வில்லன் டீமில் வரும் கியான், சத்து உள்ளிட்ட பசங்களும் சிறப்பாக வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். காட்டியிருக்கிறார்கள்.
சிருஷ்டி டங்கே பேருக்கு தான் ஹீரோயின். வழக்கமாக ஹீரோவுடன் டூயட் பாடவாவது ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் இல்லாததால், அந்த வாய்ப்பும் சிருஷ்டிக்கு இல்லை. கொஞ்ச நேரமே வந்தாலும், தனது கண்ணக்குழி அழகில் ரசிகர்களை மயக்குகிறார்.
சுஜா வருணிக்கு இந்த படத்தில் வில்லி ரோல். வழக்கம் போல் நன்றாகவே செய்திருக்கிறார். இவர்களை தவிர படத்தில் நீலிமா, பொன்வண்ணன், மாரிமுத்து, ரிஷி, பவன் என நிறைய பேர் நடித்துள்ளனர். அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.