24-08-2020, 03:47 AM
மறுநாள் -
நிஷா, மார்பில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அடக்கமாக இறங்கி வர, அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்த இவன், அம்மா... நிஷாவுக்கு சுத்திப் போடும்மா... என்றான்.
இனிமேல் அடிக்கடி நிஷாவுக்கு சுத்திப்போடவேண்டும் என்று அவன் ஆர்டர் போட்டிருந்தான். ஷேவ் பண்ணியிருந்தான். அவள், புத்தகங்களை அவனிடம் கொடுத்துவிட்டு, அத்தையின்முன் நின்றாள். கதிர், உச்சி முதல் உள்ளங்கால்வரை... அவளை ரசித்துப்பார்த்துக்கொண்டு நின்றான். அவளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும், தாங்கு தாங்கு என்று தாங்கவேண்டும் என்பது எல்லாம் எத்தனை வருட ஆசைகள்! எல்லாம் நிறைவேறப்போகிறது.
உன்ன கொண்டுபோய் விடுறதுக்கு கார் வாங்கப்போறானாம். இதுக்கு முன்னாடி கார் வாங்கச்சொன்னதுக்கு போய் டிராக்டரை வாங்கிட்டு வந்து நின்னான்
லஷ்மி பொய்யான கோபத்தோடு சொல்ல, நிஷா அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டே அத்தையிடம் சொன்னாள்.
நான் கார்ல போய்ட்டு வந்தேன்னா ஸ்டூடண்ட்ஸ், ஊர்க்காரங்க.. எல்லாரையும் விட்டு விலகி.. தனிச்சு நிக்குறமாதிரி தெரியும். அதனால்தான் அப்பாகிட்ட கார் வேணாம்னு சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாள் போகட்டுமே அத்தை... என்றாள்.
நான் சொன்னா அவன் எங்க கேட்பான். நீயே சொல்லிடும்மா
அவள் லேசாக சிரித்துக்கொண்டே வந்து பைக்கில் உட்கார்ந்தாள். எப்போதும் தோளில் கைவைத்துப் பிடிக்கும் அவள், அவன் வயிற்றில் கைவைத்து இடுப்போடு அணைத்துப் பிடித்துக்கொண்டாள். சிறிதும் தொப்பையில்லாத... அவனது ஒட்டிய வயிறை அவளால் உணர முடிந்தது. ஷேவ் பண்ணியிருந்ததால் அவனது மீசை ஷார்ப்பாக எடுப்பாக தெரிந்தது.
அழகா இருக்கீங்க! என்றாள்.
அந்த பைக், இதுவரை போகாத ஸ்பீடைத் தொட்டது.
கதிர், தன் மனைவியை ட்ராப் பண்ணுவதாகத்தான் உணர்ந்தான்.
ஸ்கூலில் இறங்கும்போது, இருவர் கண்களும் காதலோடு தழுவி மீண்டன. நான் கேட்டது என்னாச்சு? என்றான். அவள் அவன் கையில் தனது அளவு ப்ளவுஸை திணித்தாள்.
உங்களுக்கு பொறுமையே இல்ல....! என்று பொய்யான கோபத்தோடு சொல்லிவிட்டு, அழகு தேவதையாக ஸ்கூலுக்குள் நடந்துபோனாள்.
கதிர் அவளது அளவு ப்ளவுஸோடு.. வண்டியை மதுரைக்கு விட்டான். டீன் ஏஜ் வயதில்... பட்டுப்பாவாடை சட்டை.யிலும்... சில நாட்களில் பாவாடை தாவணியிலும்... அவனை ஏங்கவைத்து தூங்கவிடாமல் செய்த நிஷாவின் அளவு ப்ளவுஸோடு.... அவன் பறந்துகொண்டிருந்தான்.
-
ஈவினிங் -
அவள் தன் ரூமுக்குள் நுழைந்தபோது, புடவைகள், சுடிதார்கள், நைட்டிகள் சகிதம்... பாவாடை சட்டைகளும், தாவணிகளும் அவளது பெட்டில் இருந்தன.
நிஷா அவற்றைப் பார்த்து முகம் மலர்ந்தாள். மனதுக்குள் ஒருவிதமான மகிழ்ச்சி. கதிர் முதன் முதலில் தனக்கு துணி எடுத்துக் கொடுத்திருக்கிறான். என் நினைப்பாகவே இருக்கிறான்.
முகம் கழுவிவிட்டு, தலையிழுத்து பொட்டு வைத்து லேசாக அலங்கரித்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். லேசான புன்முறுவலோடு ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தாள். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது. சந்தோஷத்தோடு, ட்யூஷன் எடுக்க கீழே இறங்கி வந்தாள்.
கதிர் எப்போதுடா வருவான் அவனோடு பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருந்தது. மனம்விட்டு அவனோடு நிறைய பேசவேண்டும்போல் இருந்தது.
லக்ஷ்மி கொடுத்த காபி... இன்று சுவையாயிருந்தது. நீ சென்னைல இந்த காபிதான் குடிப்பியாமே... வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கான்... என்று லக்ஷ்மி சொல்ல... மனதுக்கு இதமாக.. சுகமாக இருந்தது. ட்யூசன் எடுத்துக்கொண்டிருக்கும்போதே... அவன் வீட்டுக்குள் நுழைய, அவனைக் கண்டும் காணாததுபோல் பாடம் நடத்திக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் கண்கள் தானாகவே அவனைத் தேட.. அவன், வீட்டுக்குள் தூணில் சாய்ந்து நின்றுகொண்டு இவளையே ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.