screw driver ஸ்டோரீஸ்
"தேவை இல்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத ஆதிரா.. ப்ளீஸ்..!! தாமிரா காணாமப் போனதுக்கும் அந்த ஆராய்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது..!!"

"இல்லத்தான்.. எனக்கு அப்படி தோணல.. ஏதோ சம்பந்தம் இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது..!! கண்டிப்பா நாளைக்கு வேக்ஸின் ஃபேக்டரிக்கு போகத்தான் போறேன்..!!"

"இங்க பாரு ஆதிரா.. எனக்கு முகிலனை பிடிக்காதுதான்.. அவர் ரொம்ப ரஃப் அண்ட் டஃப் ஆளுதான்..!! அந்த ஆராய்ச்சி என்னவோ அவருக்கு பிடிக்காம போயிருக்கலாம்.. அதுக்காக.. தாமிராவுக்கு அவரால ஆபத்து வந்திருக்கும்னு என்னால கொஞ்சம் கூட நெனைச்சு பாக்க முடியல..!!"

"ப்ளீஸ்த்தான்.. என்னை நம்புங்க..!! என் முன்னாடியே அவளை கொலை பண்ணிடுவேன்னு மெரட்னார்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! கோவம் வந்தா என்ன பண்றோம்னே தெரியாத அப்படி ஒரு மூர்க்ககுணம் முகிலனுக்கு.. நான் சந்தேகப்படுறதுல எந்த தப்பும் இருக்குறதா எனக்கு தோணல..!! நேர்லயே போய் கேட்டுட வேண்டியதுதான்.. என்ன சொல்றார்னு பாக்கலாம்..!!"

"ப்ச்.. இப்போ நீ போய் இதைப்பத்தி அவர்ட்ட பேசுறதால, தேவையில்லாத புதுப்பிரச்சினைதான் கெளம்பும் ஆதிரா..!!"

"என்ன பிரச்சினை வேணா வரட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!"

"ப்ச்.. சொல்றதையே புரிஞ்சுக்க மாட்டேன்ற நீ..!!"

"உங்களுக்குத்தான் நான் சொல்றது புரியல..!!"

விவாதத்தில் ஆரம்பித்து வாக்குவாதத்தில் சென்று முடிந்தது கணவன் மனைவியின் உரையாடல்..!! ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு.. உடல் ஸ்பரிசம் இல்லாமலே உறங்கிப்போனார்கள் இருவரும்..!!

முதல்நாள் இரவின் நினைவில் இருந்து மீண்டாள் ஆதிரா..!! 'சிபி சொல்வதை வைத்துப் பார்த்தால்.. தாமிரா அந்த ஆராய்ச்சியில் மிக உறுதியாகத்தான் இருந்திருக்கிறாள்.. அதற்கென மைசூர் வரை பயணித்து உதவி தேடியிருக்கிறாளே..?? அவளுடைய அந்த உறுதிதான் உயிருக்கு எமனாக முடிந்திருக்குமோ..??' என்கிற ரீதியில் இப்போது அவளது மூளை யோசித்துக் கொண்டிருந்தது..!!

ஆழ்ந்த சிந்தனையுடன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த ஆதிராவின் கவனத்தை.. அருகில் கேட்ட சிபியின் குரல் கலைத்தது..!!

"ஹேய்.. வந்துட்டியா.. வந்ததும் வராததுமா ஊஞ்சல்ல உக்காந்து ஆடிட்டு இருக்குற..?? போன வேலை என்னாச்சு..??"

ஆதிரா ஊஞ்சலின் வேகத்தை சற்றே குறைத்து, தலையை திருப்பி பார்த்தாள்.. கையில் இருந்த செல்ஃபோனை காதோடு வைத்து பிடித்தவாறு, சிபி இவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்..!! அவனுடைய கேள்விக்கு ஆதிரா பதில் சொல்ல வாயெடுக்கும் போதே..

"ஒன் மினிட்..!!"

என்று அவளை தடுத்தான்..!! காதுக்கு கொடுத்திருந்த செல்ஃபோனில் இப்போது காலர் ட்யூன் ஒலித்திருக்க வேண்டும்..!! இரண்டு மூன்று வினாடிகளில், மறுமுனையில் கால் பிக்கப் செய்யப்படவும்..

"ஹலோ..!!" என்றான். பிறகு,

"ஹலோஓஓஓ..!!" என்று பெரிதாக கத்தினான்.

"நான் பேசுறது கேக்குதா..??" என்று இரைந்தான்.

மேலும் நான்கைந்து முறை அந்த மாதிரி இரைந்துவிட்டு, அப்புறம் கடுப்புடன் காலை கட் செய்தான்.

"ச்சே.. என்ன எழவு நெட்வொர்க்கோ..?? ரூம்லயும் சிக்னல் இல்ல.. ஹால்லயும் சிக்னல் கெடைக்க மாட்டேன்னுது..!!" என்று சலித்துக்கொண்டான். பிறகு அந்த சலிப்புடனே மனைவியின் பக்கமாய் திரும்பி,

"ம்ம்.. சொல்லு.. என்னாச்சு..??" என்று கேட்டான்.

ஆதிரா ஒருசில வினாடிகள் நிதானித்துவிட்டே பேச ஆரம்பித்தாள்..!! முகிலனிடம் சென்று நேரிடையாகவே விஷயத்தை தெரிவித்தது.. உடனடியாய் அவனுக்கு கிளம்பிய கோபம்.. கதிரிடம் அவன் காட்டிய வெறுப்பும், முறைப்பும்.. பிறகு அந்த மாந்திரீகவாதியின் சொற்பொழிவு.. இறுதியாக முகிலனின் எகத்தாளப் பேச்சு.. எல்லாவற்றையும் கணவனிடம் பொறுமையாக ஒப்பித்தாள்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 06-03-2019, 08:36 PM



Users browsing this thread: 10 Guest(s)