screw driver ஸ்டோரீஸ்
".............................."

"பத்து மாசமாச்சு.. நல்லது நடக்க இருந்த வீட்டுல எழவு விழுந்து பத்து மாசமாச்சு.. ஊரை ஆட்டிப்படைக்கிற காட்டுப்பேயி, எங்க உசுரை புடுங்கிட்டு போய் பத்து மாசமாச்சு..!! அழுது அழுது கண்ணுலயும் தண்ணி வத்தி போச்சு.. நெனைக்க நெனைக்க நெஞ்சுக்கொலைதான் கெடந்து துடிக்குது..!!"

பெற்ற மகளை பறிகொடுத்த அந்த தாயின் கதறல் ஆதிராவின் காதுக்குள் ஒலிக்க.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் ஒருவித வலி பரவுவதை உணர முடிந்தது..!!

அகல்விழியை குறிஞ்சிதான் அபகரித்து சென்றுவிட்டாள் என்பதற்கு.. அந்த தாயால் உறுதியான ஆதாரம் எதையும் தரமுடியவில்லை..!! அகழி மக்களின் குறிஞ்சி பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில்.. அனுமானமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே ஆதிராவுக்கு அது தோன்றியது..!! அகல்விழி மாயமாய் மறைந்து போவதற்கு வேறேதும் காரணங்களை அவர்களால் யோசிக்க முடியாததாலேயே.. குறிஞ்சியை நோக்கி எளிதாக கைகாட்டுகிறார்கள் என்பது புரிந்தது..!!

[Image: krr29a.jpg]

அகல்விழியின் அம்மாவுக்காக ஆதிராவின் இதயத்தில் இரக்கம் கசிந்தாலும்.. அவர்களது நம்பிக்கையின் மீதுதான் இவளுக்கு ஏனோ நம்பிக்கையே பிறக்கவில்லை..!! குறிஞ்சியை பற்றிய ஆராய்ச்சியில் அகல்விழியும் பங்கெடுத்திருக்கிறாள் என்கிற குறுகுறுப்பான நினைப்புதான் அதற்கு காரணம்..!!

அகல்விழி பற்றிய சிந்தனையில் இருந்த ஆதிராவின் மனவோட்டம் திடீரென தடம்புரண்டது..!! அந்த ஆராய்ச்சியைப் பற்றி தனக்கு நினைவு வந்த செய்தியை சொல்லி.. நேற்றிரவு கணவனிடம் விவாதித்தது, இப்போது ஆதிராவின் மனதுக்குள் ஓடியது..!! அவளுடைய கேள்விக்கு, மிக இயல்பாக மறுமொழி கூறிக்கொண்டிருந்தான் சிபி..

"ஹ்ம்ம்.. ஆமாம்.. நல்லா ஞாபகம் இருக்கே.. குறிஞ்சி பத்தி ஏதோ ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தா.. எங்கிட்ட கூட அதை பப்ளிஷ் பண்றதுக்கு ஹெல்ப் கேட்டாளே.. நானும் கண்டிப்பா பண்றேன்னு சொல்லி வச்சிருந்தேன்..!! அதுவிஷயமா ஒருதடவை.. மைசூர்க்கு கூட தாமிரா வந்துட்டு போனா..!!" 

"ஓ..!!"

"நாவரசு ஸாரை உனக்கு ஞாபகம் இருக்கா.. என்னோட பாஸ்..!! நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ உன்னை பாக்க வந்தாரே..??"

"ம்ம்.. ஞாபகம் இருக்குத்தான்..!!"

"ஹ்ம்.. தாமிரா மைசூர் வந்து அவரைத்தான் மீட் பண்ணினா.. அவளோட ஆராய்ச்சியை மக்கள்ட்ட கொண்டுபோய் சேக்குறது பத்தி பேசினா.. அவரும் ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணினாரு..!!"

"அ..அப்படினா.. அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி ஏதாவது.. தாமிரா அவர்ட்ட குடுத்திருக்க சான்ஸ் இருக்குல..??"

"இல்ல ஆதிரா.. அவ அப்படி எதும் அவர்ட்ட குடுக்கல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. நானும் கூடவேதான் இருந்தேன்..!!" சிபி அவ்வாறு உறுதியாக சொல்லவும்,

"ப்ச்..!!" 

ஆதிராவிடம் சட்டென ஒரு சலிப்பு.. அவளுடைய முகத்தில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம்..!! வாடிப்போன மனைவியின் முகத்தை பார்க்க பார்க்க.. சிபியின் மனதுக்குள் ஒரு கவலையூற்று சுரக்க ஆரம்பித்தது..!! சற்றே நகர்ந்து அவளை நெருங்கியவன்.. அவளது கன்னங்கள் இரண்டையும் கைகளால் தாங்கிப்பிடித்து.. கனிவு பொங்கும் குரலில் சொன்னான்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 06-03-2019, 08:36 PM



Users browsing this thread: 12 Guest(s)