screw driver ஸ்டோரீஸ்
அத்தியாயம் 15

அகல்விழியின் வீட்டில் இருந்து திரும்பிய ஆதிரா ஒருவித அயர்ச்சியுடனே காணப்பட்டாள்.. கதிரை அனுப்பிவைத்துவிட்டு வீடு புகுந்தவளுக்கு கால்கள் தளர்ந்து போனாற்போல் ஒரு உணர்வு..!! வலது முழங்காலுக்கு கீழிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது சுருக்கென்று ஒரு வலி.. உதட்டை கடித்து முகத்தை அவஸ்தையாக சுளித்தவள், ஊஞ்சல் சங்கிலியை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்..!! தடுமாற்றத்துடன் உடலை நகர்த்தி.. ஜோடியாக தொங்கிய இரண்டு ஊஞ்சல்களில் ஒன்றில்.. வசதியாக அமர்ந்து கொண்டாள்..!!

அவ்வாறே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்..!! நெஞ்சில் ஏறியிருந்த படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கியது.. ஆனால் புத்தியை ஆக்கிரமித்திருந்த சிந்தனைகள் அப்படியேதான் இருந்தன..!! ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக்கொண்டு, என்னவோ ஒரு யோசனையில் இருந்த ஆதிரா.. அவளுடைய சுய கட்டுப்பாடு இல்லாத அனிச்சை செயலாக.. தனது கால்களின் கட்டைவிரல்களால் தரையை உந்தித் தள்ளினாள்.. ஊஞ்சல் இப்போது மெல்ல அசைய ஆரம்பித்தது..!!

"க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!" - ஊஞ்சலின் இரும்புச்சங்கிலி உத்தரத்து ஆதார வளையத்தோடு உராய்ந்து எழுப்புகின்ற ஓசை.

அந்த ஊஞ்சலின் நிலையில்தான் ஆதிராவின் உள்ளமும் அப்போது இருந்தது.. ஒரு நிலையில் நில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.. அகழி வந்ததிலிருந்து நடந்த சம்பவங்களை ஒரு ஒழுங்கின்றி அசைபோட்டுக் கொண்டிருந்தது..!!

தாமிராவின் மறைவுக்கு குறிஞ்சிதான் காரணம் என்பதில் ஆரம்பத்திலிருந்தே ஆதிராவுக்கு சந்தேகம்.. தாமிராவுடைய ஆராய்ச்சி பற்றி நேற்று நினைவு வந்ததும், அவளுக்கு அந்த சந்தேகம் மேலும் வலுத்தது.. இப்போது அகல்விழி தொலைந்த செய்தியை அறிந்தபிறகு, தாமிராவின் மறைவில் மிகப்பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்பினாள்..!!


உள்ளத்தில் குழப்பமான உணர்வுகளுடன் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. அகல்விழியின் அம்மா சற்று முன்பு அழுது புலம்பியது நினைவுக்கு வந்தது..!!

"என்னன்னு சொல்லுவேன் எதை நெனச்சு அழுவேன்..?? அதுவேணும் இதுவேணும்னு.. ஆசைப்பட்டதை வாய்விட்டு கேக்கக்கூட தெரியாத ஊமைப்புள்ளமா எம்புள்ள.. குடுத்ததை தின்னுக்குவா, எடுத்ததை உடுத்திக்குவா..!! குடிகாரப்பயலுக்கு மகளா பொறந்து ஒரு சொகமும் காண்கலயே.. போறஎடத்துல சொகப்படுவான்னு பொழுதுக்கும் கனாகண்டேன்.. இப்படி போனஎடம் தெரியாமப் போவான்னு ஒருநாளும் நெனைக்கலியே..!!"

".............................."

"கடனை உடனை வாங்கித்தான் காலேசுல படிக்க வச்சேன்.. காட்டை மேட்டை வித்துத்தான் கண்ணாலத்துக்கு தேதி பாத்தேன்..!! தங்கத்துக்கும் தங்கமா மாப்புள்ள.. தண்ணி சீரட்டு பழக்கமில்ல.. அத்தனை பொருத்தமும் அம்சமா சேர்ந்துச்சு.. அகலு விழிக்கும் அம்புட்டு புடிச்சுச்சு..!!"

".............................."

"காலேசுல படிச்ச புள்ளைகள கல்யாணத்துக்கு அழைக்க போறேன்னு.. பத்திரிக்கையை அள்ளிக்கிட்டு பாவிமக கெளம்பிப்போனா..!! போனவ போனவதான்.. பொழுது சாஞ்சும் வீடு வரல..!! கண்ணுங்கருத்துமா வளத்த கிளிய கள்ளாப்ராந்து தூக்கிட்டுப்போன கதையா.. ஆசைஆசையா வளத்த எம்புள்ளய அந்த குறிஞ்சிமுண்ட கொண்டுபோயிட்டாம்மா..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 06-03-2019, 08:35 PM



Users browsing this thread: 9 Guest(s)