நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#23
நானும்" அப்படியாப்பா"என கூறீ அவர் கூறும் ஒவ்வொரு சாமியையும் என் பிஞ்சு விரல்களை கூப்பி கும்பிட்ட நாட்கள் என் கண்முன் விரிந்தது.நான் இல்லன்னாலும் இந்த சாமியெல்லாம் உன்னை பாத்துக்கும்மா என்பார்.எங்கே போனது அந்த சாமியெல்லாம்.கண்களில் நீர் முட்டிகொண்டு வந்தது.கோவிலுக்கு சென்றால் தேவலாம் என தோன்றியது.

அம்மாவிடம் கூறிவிட்டு புறப்பட்டேன்.நான் சென்றபோது கூட்டமே இல்லை.உள்ளே நுழைந்ததும் பிள்ளையார் எதிர்பட்டார் அவருடன் கண்மூடி கொஞ்சம் ரகசியம் பேசினேன்.

கண்ணை திறந்தபோது அவன் நின்றிருந்தான்.எனக்கு தூக்கிவாரி போட்டது .
"அடப்பாவி !இவன் எங்கே இங்கே " வினோத்தும் கூடவே இருந்தான்.நான் கைகூப்பிகொண்டே கண்களை மூடியபடி அப்படியே அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

அவர்கள் என் பின்னாலே வந்தனர்.நான் அவர்களை கண்டுகொள்ளாதவாறு நடந்துகொண்டேன் அவன் என்னிடம் பேச வேண்டும் என வருகிறான்.நான் அதற்கு இடம் கொடுக்க கூடாது என எண்ணினேன்.திடீரென இருவரும் திரும்பி நடக்க முற்பட்டனர்.அவனை "டீஸ்"பண்ணவேண்டும் என்ற என் எண்ணம் பாழாகிவிடுமோ என நினைத்தேன்.

பின் ஒரு யோசனை வந்தவளாய் சட்டென திரும்பி வினோத்தை மட்டும் பார்த்து "நீ வினோத்தானே 11D2 "என கேட்டேன்.


அவனும் "ஆமாம் மிஸ் நாங்க உங்க கூட பேசத்தான் இவ்வளோ நேரம் உங்க பின்னாடியே வந்தோம்.நீங்கதான் எங்கள பாக்கவே இல்ல"
"ஸாரிப்பா எனக்கு சரியா ஞாபகம் இல்ல அதான்"என்றேன்.நான் அவனை பார்க்காத மாதிரியே பேசினேன். .அவன் வினோத்திடம் "டேய்! நான் கிளம்பறேன்டா நீ பேசிட்டு வா "என கூறி செல்ல முற்பட்டான். 

அதற்குள் நான்"வினோத் இவன் யாரு உன் பிரண்டா என கேட்டேன்.மனதிற்குள் 
"மகனே சாவுடா இனிமே நீ என் பக்கமே திரும்ப பாக்க மாட்டே"என நினைத்து கொண்டேன்.

அவன் உடனே "நான் யாருன்னு உங்களுக்கு நிஜம்மா தெரியல"என கேட்டான்.

"ஞாபகம் இல்ல அதான் கேட்டேன்.நீயும் 11D2 ஆ"

"நீங்க பொய் சொல்றீங்க என்னை உங்களுக்கு நல்லா தெரியும் ஆனா நீங்க நடிக்கிறீங்க"என்றான்.
.
நான் மனதிற்குள் அடப்பாவி கண்டுபிடித்துவிட்டானே எண்ணினேன் ஆனால் அதை வெளிகாட்டாமல் "இல்ல உண்மையா எனக்கு ஞாபகம் இல்ல"எனகூற அவன் கோபமாய் "நான் யாருன்னு உங்களுக்கு தெரியலயா நான்தான் நேற்று உங்க கூட பஸ்ல வந்தேன் உங்கள உரசி கிட்டே வந்தேன் நீங்களும் என்னை முறைத்து பார்த்திங்க.என்ன அழகா நடிக்கிறீங்க"என கூறி பின் வினோத்திடம் "டேய்!நான் கிளம்பறேன் நீ வரியா இல்லையா" என கூறி பதிலை கூட எதிர்பார்காமல் விறு விறுவென சென்றான்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 06-03-2019, 11:39 AM



Users browsing this thread: 6 Guest(s)