07-08-2020, 11:50 PM
(07-08-2020, 03:59 PM)Dubai Seenu Wrote: அடுத்து வந்த நாட்களில் -Ipadi twist kudutha enga nenje vedichurumya
நிஷாவின்மேல் கதிருக்கும், கதிர் மேல் நிஷாவுக்கும், அன்பும் பாசமும் ஈர்ப்பும் வந்திருந்தது. அங்குள்ள விவசாயிகளுக்கு வழிகாட்டியாக அவன் செய்யும் விஷயங்களைப் பார்த்து நிஷா அவனை வியந்து பார்த்தாள்.
நாளெல்லாம் ஸ்கூல், ட்யூசன் என்று இருக்கும் அவளுக்கு, கதிரோடு பேசும் கொஞ்ச நேரங்கள், மனதுக்கு இதமாகவும் சந்தோஷமாகவும் இருந்தன. ஸ்கூலில் இருக்கும்போதுகூட, கதிரின் நினைவுகள் வந்தன. எப்போதுடா போய் அவனோடு பேசிக்கொண்டிருப்போம் என்று தோன்றும்.
ஆனால் அவன் தன் தங்கைக்கு கணவனாக வரப்போகிறவன்... அவன் அவளது சொத்து... என்று நினைக்கும்போது, அவளுக்குள் எழும் ஒரு சிலிர்ப்பான சுகமான உணர்வு.. அடங்கிப்போய்விடும்.
அன்று -
நிஷாவுக்கு விடுமுறை நாள். மதிய சாப்பாடுக்கு லட்சுமி அத்தை ஆட்டுக் கறிக்குழம்பு வைக்க, வீடே மணந்தது.
கதிருக்குப் பிடிக்கும்னு வச்சேன்.. என்றாள்.
அப்போ கதிர் வரட்டுமே... சேர்ந்து சாப்பிடலாம்.. என்றாள் நிஷா.
அவன் எங்கம்மா இப்போ வரது? மூணு மணி ஆகும்.
அப்போ நான் போய் கொடுத்துட்டு வர்றேன்
உனக்கெதுக்கும்மா சிரமம். இந்த வெயில்ல
எனக்கு ஒரு சிரமமும் இல்ல. வயல்வெளில நடக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அவள் வேக வேகமாக ஒரு செருப்பை மாட்டிக்கொண்டு நடக்க... லக்ஷ்மி, நிஷா கதிர் மேல் வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். நிஷாவையே ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
வயலில்.. வரப்பில்... நிஷா தூரத்தில் நடந்து வரும்போதே கதிர் பார்த்துவிட்டான். அங்கேயே நில்லு... நான் அங்க வர்றேன்... என்று கை காட்டினான்.
அவளோ இது புரியாமல், ஒருகையில் சாப்பாடு கூடையைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் தொடைகளுக்கு நடுவே கைவைத்து புடவையை லேசாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, அழகாக வந்துகொண்டிருந்தாள்.
டீச்சருக்கு உங்க மேல ரொம்ப பிரியமோ... என்று, ஊருக்குள், ஒரு சுட்டிப்பயல் கதிரிடம் கேட்டிருந்தான். அது அவனது நினைவுக்கு வந்தது.
வேடிக்கை பார்த்துக்கொண்டு, இயற்கையை ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்த நிஷா, எதிர்பாராவிதமாக அவள் கால் வைத்த இடத்தில் களிமண் சரிய... தடுமாறி வயலுக்குள் தண்ணீருக்குள் கால் வைத்துவிட்டாள். தண்ணீருக்குள்... சகதிக்குள் கால் நுழைய... செருப்பில் சகதி வழுக்க... இன்னும் தடுமாறி அடுத்த காலையும் வயலுக்குள் சகதிக்குள் நுழைத்துக்கொண்டு கீழே விழுந்துவிடுவதுபோல் தடுமாற, கதிர் ஓடிவந்தான்.
நிஷாவுக்கு கொலுசு வரைக்கும் சகதி அப்பிக்கொண்டது. புடவை நுனி, கலங்கிய தண்ணீரில் நனைந்துவிட்டது.
ஐயோ இது என்ன சோதனை..... என்று அழகாக உதட்டைச் சுழித்த நிஷா, கூடையை வரப்பில் வைத்துவிட்டு, காலைத் தூக்க முயல, செருப்பு சதி செய்தது. சகதியில் மாட்டிக்கொண்டு வெளியே வர மறுத்தது.
நான்தான் வர்றேன்னு சொன்னேன்ல? என்று திட்டிக்கொண்டே வந்த கதிர் கையை நீட்ட, நிஷா அவன் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக மேலே எறிவந்தாள். அப்படியும் தடுமாறினாள். அவனைப் பிடித்துக்கொண்டாள்.
ஸாரி கதிர். அத்தை உங்களுக்கு இந்த குழம்பு பிடிக்கும்னு சொன்னாங்க
அதுக்காக இந்த வெயில்ல வந்தியா? என்ன நிஷா நீ...
நிஷா காலெல்லாம் சகதியாக நின்றாள். ப்ச்.... என்று தன்னையே நொந்துகொண்டாள். செருப்பை கழட்டிவிட்டும் நடக்க முடியாது. காய்ந்த களிமண் வரப்பு... ஒழுங்கில்லாமல் இருக்கிறது. காலில் குத்தும்.
இவளுக்கு நடக்கக்கூட தெரியாதா என்று கதிர் தன்னைப்பற்றி நினைப்பானோ என்று... அவள் செய்வதறியாமல் தவிக்க, கதிர் அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டான்.
ஏய்....
நீ ரொம்ப வெயிட்டா இருப்பியோன்னு நெனச்சேன். பரவால்ல. லேசாத்தான் இருக்கே
நிஷாவுக்கு நாணமாக இருந்தது. பொசுக்குன்னு பிடிச்சி தூக்கிட்டான்!. வெட்கத்தோடு அவன் கையில் கிடந்தாள். அவன் தோள்களை பிடித்துக்கொண்டாள்.
பார்த்து கதிர்... மெதுவா...
நான் உன்ன தூக்கிட்டு சகதிக்குள்ளேயே நடப்பேன். வரப்புல நடக்க மாட்டேனா
ம்க்கும். ரொம்பத்தான்...
அவளுக்கு, அவன் கையில் கிடப்பது சுகமாக இருந்தது. கதிரோடு இருக்கும், அவனோடு பேசும் நேரங்கள்தான் இன்றைய நாட்களில் அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது.
அவனது இடது கை, அவளது இடது அக்குளுக்குள் இருக்க, அவளை.. அது என்னவோ செய்தது. தவிப்பாக இருந்தது.
கதிர், அவளை பொன்னே பூவே என்று, பம்ப் செட் பக்கத்தில் இறக்கிவிட்டான். அவள், புடவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, தன் கால்களை தண்ணீரில் காட்டும் அழகை ரசித்தான்.
அவளது கொலுசும், கரண்டைக்கால் அழகும், அவனைப் பைத்தியமாக்கின. ப்பா... அழகோ அழகு
கதிர்... சகதி போகவே மாட்டேங்குது... அவள் சலிப்பாக சொல்லிக்கொண்டே காலை பாயும் தண்ணீரில் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டிருந்தாள். கதிர், அவளை தொட்டியின் விளிம்பில் உட்காரச் சொல்ல.... அவள், புடவையை முட்டிவரை உயர்த்திப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாள். கால்களைத் தொங்கப்போட்டாள்.
கதிர், சட்டென்று கீழே உட்கார்ந்து அவள் வலது காலை தூக்கிப் பிடித்து கழுவ ஆரம்பித்தான். நிஷா பதறினாள்.
கதிர்... என்ன பண்ற...!!!
தேய்ச்சு கழுவி விட்டாத்தான் போகும் நிஷா....
ந.. நானே கழுவிக்கறேன்....
பரவால்ல நிஷா
அவன் அவளது இரண்டு கால்களையும் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கழுவ, நிஷாவின் பெண்மை மலர அதுவே போதுமானதாயிருந்தது. மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க.... தலையை குனிந்துகொண்டு, அவனைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
தங்கைக்கு கணவனாய் வரப்போறவனை... இப்படி ரசிப்பது தப்பல்லவா... என்று பார்வையை மாற்றினாள்.
போதும் கதிர்.. என்று கால்களை இழுத்துக்கொண்டாள்.
அவளது, தயக்கம், அவளது படபடப்பு, அவளது தவிப்பு, அவளது பார்வை... கதிரை என்னவோ செய்தது. அவள் கால்களைத் தொட்டதால் மனது கிடந்தது குதித்தது.
ஈரக் காலில் மண் படக்கூடாது என்பதால் அவளைத் தூக்கிக்கொண்டு, மரத்தடி நிழலில் கொண்டு போய் இறக்கி விட்டான்.
இப்போல்லாம் பொசுக் பொசுக்குன்னு தூக்கி வச்சிக்கிடுறான்!
நீ சாப்ட்டியா?
ம்ஹூம்...
சரி உனக்கும் கொண்டுவந்திருக்கியா?
ஆமா கொண்டு வந்திருக்கேன்
கதிர் சிரித்துக்கொண்டே முகத்தைத் துடைத்தான். அவள் பொறுப்பாக பாக்ஸ்களை பிரித்து வைத்தாள். கதிர் அவளையே ரசித்துப் பார்த்தான்.
என்ன பாக்குறீங்க. சாப்பிடுங்க
நீயும் சாப்பிடு.. என்று சொல்லிவிட்டு அவன் வேகம் வேகமாக சாப்பிட்டான்.
இவ்ளோ பசியை வச்சிக்கிட்டு ஏன் லேட்டா மூணு மணி, நாலு மணின்னு சாப்பிடுறீங்க?
அவனிடம் பதில் இல்லை. வேலையில் இறங்கிவிட்டால் நேரம் போவதே தெரிவதில்லை.
இனிமே ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடணும் சரியா?
சரி நிஷா
அவள் கண்டிப்போடு சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. இப்படி வயல்வெளியில் உட்கார்ந்து சாப்பிடுவது, அவளுக்கு இதமாக இருந்தது.
மட்டன் எலும்பை அவள் பட்டும் படாமலும் சூப்பிவிட்டு வைக்க... கதிர் பதறினான்.
நல்லா உறிஞ்சிட்டு போடு நிஷா. இதுக்கு முன்னாடி நான் கொண்டு வந்து கொடுத்த கறியை எல்லாம் சமைச்சீங்களா இல்ல தூரப்போட்டீங்களா
நான் நல்லா உறிஞ்சித்தான் போட்டிருக்கேன்
எங்க உறிஞ்ச... சாறெல்லாம் அப்படியே இருக்கு. இங்க பாரு... என்று தான் போட்டிருந்த எலும்புகளைக் காட்டினான். அவை பல நாட்கள் வெயிலில் காயவைத்திருந்தது போல் வறண்டுபோய் இருந்தன. அவளுக்கு மயக்கமே வந்தது.
அடப்பாவி...! ராஜ்கிரண் குரூப்பா நீங்கள்லாம்?.. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். கண்களை விரித்தாள்.
கதிர் அவள் சூப்பிவிட்டுப் போட்ட எலும்பை எடுத்தான். உறிஞ்சினான். சுவைத்தான்.
இப்படி உறிஞ்சனும்...! என்றான்.
நிஷாவுக்கு கிறக்கமாக இருந்தது. நான் வாய் வச்சி போட்டதை பொசுக்குன்னு எடுத்து அவன் வாய்ல வச்சிட்டான். ஐயோ எனக்கு ஏன் ஒரு மாதிரியா ஆகுது!.
அவள் அடுத்த எலும்பை சூப்பிவிட்டு தயக்கத்தோடு வைக்க, அவன் அதையும் எடுத்து உறிஞ்சினான். ஆஹோ ஓஹோ என்றான். செம டேஸ்ட் நிஷா என்றான். அவளுக்கு உடம்பெல்லாம்... சூடாக ரத்தம் பாய்ந்தது சுகமாக இருந்தது
அடுத்த எலும்பு, அவள் கையிலிருந்து, நேராக அவன் கைக்குப் போனது. நிஷா தலையை குனிந்துகொண்டாள்.
நீங்க தீபாவை கட்டிக்கப் போறவர். அது ஞாபகம் இருக்கட்டும்! என்றாள்.
நான் இன்னும் கமிட் பண்ணலையே. அதுனால அது கன்பார்ம் கிடையாது... என்றான். அவளைத் தூக்கிக்கொண்டு போய் தண்ணீர் தொட்டியில் உட்கார வைத்தான்.
கைய நீயே கழுவிக்கறியா நான் கழுவி விடட்டுமா
நானே கழுவிக்கறேன்
அவள் கையை தண்ணீரில் காட்டப்போக, அவன் பிடித்துக்கொண்டான். அவள் விரல்களிலிருந்த பருக்கைகளைப் பார்த்தான்.
அரிசி விளைவிக்க நாங்க எவ்வளவு கஷ்டப்படுறோம். நீ என்னடான்னா வேஸ்ட் பண்ற
சொல்லிக்கொண்டே அவள் விரல்களை.. ஒவ்வொன்றாக வாய்க்குள் நுழைத்துக்கொண்டு சூப்ப, நிஷா நிஷாவாக இல்லை. பெண்மை மலர்ந்துகொண்டு.. அவளுக்கு பலவிதமான சுகமாக இருந்தது.
விடுங்க... என்றாள் கசங்கிய முகத்தோடு. இப்போது அவளது ஆள் காட்டி விரலும் நடு விரலும் அவன் வாய்க்குள் இருந்தது. அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
இதையெல்லாம் தீபாவுக்கு பண்ணிவிடுங்க... - அவள் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
நான் என் நிஷாவுக்குத்தான் இதையெல்லாம் பண்ணுவேன். வேற யாருக்கும் பண்ணமாட்டேன்.
அவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு கையை கழுவினாள். எண்ணங்கள் பலவாறாக ஓடின. ஐயோ என்ன நடக்குது இங்கே. வீட்டுல என்ன நினைப்பாங்க..
அவன் அவளைத் தூக்கிக்கொண்டான். அவள் மறுப்பு சொல்லாமல் அவன் கையில் கிடந்தாள். அவளுக்கு இது தேவையாயிருந்தது. உண்மையான அன்பு... அரவணைப்புக்காக அவள் ஏங்கிப்போய் இருந்தாள். கண்களில் கண்ணீர் முட்டியது. அவன் கழுத்தில் முகம் புதைத்து அழவேண்டும்போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டாள்.
இனிமே இப்படி வெயில்ல வராதே. நீ கறுத்துப் போயிடுவ! என்றான்.
கதிர்... என்னால புரிஞ்சிக்கவே முடியல. ஆக்சுவலி... தீபா......
அவன் நச்சென்று அவள் உதட்டில் ஒரு முத்தமிட்டான். நிஷாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. கண்கள் குளமாயின.
கதிர் அவளை கீழே இறக்கிவிட்டான். அவள் தலைகுனிந்து நின்றாள். பின் மெல்ல வாய் திறந்து, தழுதழுக்கும் குரலில் சொன்னாள்.
தீபா.. உன்ன லவ்....
கதிர் அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து இழுத்து அவளது உதடுகளில் அழுத்தமாய் இன்னொரு முத்தமிட்டான். நிஷா படபடப்போடு உதடுகளை விடுவித்துக்கொண்டு இமைகளை தாழ்த்திக்கொண்டாள். மூச்சு வாங்கினாள். அவன் அவள் முகத்தை நிமிர்த்தினான்.
நான் உன்னத்தாண்டி கல்யாணம் பண்ணிக்கப் போறேன்
நிஷா கண்ணீரோடு அவன் நெஞ்சில் புதைந்துகொண்டாள். அழுதாள். அடுத்த நிமிடமே அவனிடமிருந்து விலகினாள்.
ஐ லவ் யூ நிஷா
அவள் பதில் பேசாமல் வேகம் வேகமாக நடந்தாள்.
நிஷா.. நில்லு.. ஏய்...
அவன் அவள் பின்னாலேயே வந்தான். அவள் வளையல் கை பிடித்து நிறுத்தினான்.
நிஷா...
வேணாம் கதிர். உனக்கு நான் ஒர்த் கிடையாது. நீ தீபாவையே கட்டிக்கோ
எனக்கு உன்னைத்தாண்டி பிடிச்சிருக்கு... - அவன் கத்தினான்.
நான் கெட்டுப்போனவ. நான் ஒரு அசிங்கம்
அவள், முழங்காலை மடக்கி உட்கார்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் அழுது தீர்க்கட்டும் என்று அவன் தடுக்காமல் நின்றான். அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
கொஞ்ச நேரம் அழுதுவிட்டு, மூக்கை உறிஞ்சிக்கொண்டு நிஷா தள்ளாடி எழுந்து நின்றாள். விம்மிக்கொண்டு நின்றாள்.
But நீ என் பொண்டாட்டி. இந்த நிமிஷத்திலிருந்து நீ என் பொண்டாட்டி.
உறுதியாகச் சொல்லிவிட்டு, அவன் திரும்பி நடந்தான். வயலுக்குள் இறங்கி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
நிஷா அவனைக் காதலோடும் அழுகையோடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டே.... அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.