06-08-2020, 09:51 PM
இரவில் - அவள் கைக்கு மருந்து போட்டு விட்டிருந்தாள் லக்ஷ்மி. முற்றத்தில்.. நார் கட்டிலில் அமர்ந்துகொண்டு, சிலு சிலு காற்றை ரசித்துக்கொண்டு, மருதாணி வைத்த கையை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு இருந்தாள் நிஷா. அவளைக் கடந்துபோன கதிர், ஒரு ஸ்டெப் பின்னால் வந்தான். அவளைப் பார்த்தான்.
நானேதான் ஆசைப்பட்டு தண்ணி இறைச்சேன்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கலாம்ல? என்றான். முகத்தில் கடுப்பு தெரிந்தது.
சொல்லியிருந்தா நீங்க திட்டு வாங்கியிருக்க மாட்டீங்களே....
உன்ன...! என்று அவள் தலையில் தட்ட வந்தான். நிஷா தலையை சாய்த்துக்கொண்டு, ஒரு ஷோல்டரை மட்டும் தூக்கிக்கொண்டு, சிரித்தாள்.
மனம்விட்டுச் சிரித்தாள். பேரழகியாக இருந்தாள்.
அப்போது அவளுக்கு போன் வர, கதிர் ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தான். பத்மா அத்தை.. என்று சொல்லிக்கொண்டே போனை அட்டன் பண்ணி அவள் காதில் வைத்தான்.
வேணாம் கதிர்... நான் அடஜஸ்ட் பண்ணிக்கறேன்... - அவள் அவனிடமிருந்து போனை வாங்கி காதில் வைக்க...போன் நழுவி அவள் மடியில் விழுந்தது. கதிர், அவள் மடியில் கிடந்த போனை, எடுத்தான். இருவருக்குமே... ஒருவிதமாக.. சுகமாக இருந்தது. எடுத்ததும், போனை அவள் காதில் வைத்து பிடித்தான்.
சும்மா பேசுங்க
நிஷா, கொஞ்சம் தயக்கத்தோடு, பின் சகஜமாக அவன் முன்னால் தன் அம்மாவிடம் பேச ஆரம்பித்தாள்.
கதிர், அவள் பேசும் அழகையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் உதட்டசைவுகளை.... சிணுங்கல்களை, நக்கலை, அக்கறையை, பாசத்தை, விதம் விதமான முக பாவனைகளை.... கண்ணிமைக்காமல் ரசித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
நிஷா...நீதான் எவ்வளவு அழகு!... என்று நினைத்து மகிழ்ந்தான். இந்த நிஷாவைத்தான் நான் விரும்பினேன். இந்த அழகில்தான் நான் கிறங்கினேன். நீ எனக்காக உன் அம்மாவை எதிர்த்துப் பேசினாயே... அந்த அக்கறையில்தான் நான் உனக்கு அடிமையானேன். அன்று திருமண வீட்டில் என்னைக் கூட்டிக்கொண்டு போய் இவர்தான் கதிர் இவர்தான் கதிர் என்று அறிமுகப்படுத்திய இந்த நிஷாவைத்தான் நான் பார்க்க விரும்பினேன். என் பெயர் இவ்வளவு இனிமையானது என்பதே எனக்கு அன்றைக்குத்தானே தெரியும்.
நீ கெட்டுப்போய்விட்டாய் என்று யார் சொன்னது? நீ எப்பொழுதும் உயர்வான இடத்தில்தான் நிஷா.
அந்த இரவு முழுக்க... அவள் முக பாவனைகள் திரும்பத் திரும்ப கற்பனையில் வர, அதை இழக்க மனமில்லாமல்... தூங்காமல் கிடந்தான். நடு இரவுக்குப் பிறகுதான், அவன் அவனையுமறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான்.