06-08-2020, 09:47 PM
ஏய்....
நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது.
அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.
அடுத்தடுத்த நாட்களில், நிஷாவை.. சோகமில்லாமல் சகஜமாக பேச, சிரிக்கவைக்க, அக்கறை காட்டினான். அவளோடு நெருங்கிப் பேசினான்.
நிஷாவோ, தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தாள். கதிர், தன் தங்கைக்குக் கணவனாக வரப்போகிறவன் என்பதால் கண்ணியமாக உடை உடுத்திக்கொண்டு நடந்தாள்.
அன்று - அவள் ஸ்கூலிலிருந்து வந்து ரூமுக்குள் நுழையும்போது அவள் ரூமுக்குள் ஒரு மூங்கில் ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கூடவே சாய்ந்துகொள்ள புஸு புஸு என்று பில்லோஸ் வைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. கீழே போகும்போது, பட்டும் படாமலும் அவனிடம் தேங்க்ஸ் சொன்னாள்.
இப்படித்தான் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு தேங்க்ஸ் சொல்லுவாங்களா?
நிஷா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளால் போலியாகக்கூட சிரிக்க முடியவில்லை.
இந்த ஊர்ல எல்லார்க்கும் உன்ன பிடிச்சிருக்கு. உனக்குத்தான் உன்ன பிடிக்கல நிஷா. ஏன்?
நிஷா, பதில் பேச இயலாமல் தலை குனிந்து நின்றாள்.
உன்கிட்ட இருக்குற நல்ல குவாலிட்டிஸ் பார்த்து நான் வியந்துக்கிட்டே இருக்குறேன் நிஷா. I am impressed. I am really impressed.
நிஷாவின் மனதுக்குள், லேசாய் குளிர் காற்று வீசியது. சிறகுகள் அசைந்தன. அவனிடம் மனம் திறந்து பேசவேண்டும்போல் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள். கதிர், நான் ஹேப்பியா இருக்கணும்னுதான் நினைக்குறேன். ஆனா நான் எவ்ளோ ட்ரை பண்ணாலும்....
அவள் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றாள்.
ஜெயகாந்தனுடைய அக்கினிப் பிரவேசம் படிச்சிருக்கியா..?
ம்...படிச்சிருக்கேன் - நிஷாவின் உதடுகள் கொஞ்சமாய் பிரிந்து, பின் ஒட்டிக்கொண்டன. அதுவும் அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.
அப்புறம் ஏன் இன்னும் நீ கெட்டுப்போனதையே நினைச்சி வருத்தப்படுற?
ந.. நான்.. அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணு இல்லையே கதிர். இது தெரிஞ்சே பண்ண தப்பாச்சே.
மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது நிஷா. ஆனா எனக்கு.. நீ அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணுதான்.
செஞ்ச தப்பை நினைச்சி வருந்தி, அதுலேர்ந்து மீள நினைக்கிற அழகிய தமிழ் பொண்ணுதான்.
கதிர்...
You have the golden heart to make others happy . So you have all the rights to be happy. Nisha. இதுக்கும் மேல உன் இஷ்டம்.
அவன், சொல்லிவிட்டுப் போய்விட்டான். நிஷா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் மனதிலுள்ள பாரம் எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமாய்.. வெயில் பட்ட பனியாய் கரைந்துகொண்டிருந்தது. மனதுக்கு, இதமாகவும், லேசாகவும் இருந்தது. அந்த வீடு, அந்த ஊர், எல்லாமே மிகவும் பிடித்தது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், கிடைத்த இந்த compliment, அவள் மனதை மயிலிறகால் வருடிச்சென்றது.
அன்றிலிருந்து, நிஷா கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் சகஜமாக சிரித்துப் பேச ஆரம்பித்தாள். தன்னையறியாமல் அவனை admire பண்ணிக்கொண்டிருந்தாள்.