06-08-2020, 05:25 PM
அந்த இரவு ராஜி ரூமில் படுத்துக் கொண்டிருந்தாள். அப்போது கார்த்திக் ரூம் கதவை தட்டினான். ராஜி வேண்டாவெறுப்பாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
வெளியே கார்த்திக் கையில் ஒரு டம்ளர் உடன் நின்று கொண்டிருந்தான். அவனைக் கண்ட ராஜி அவனிடம் பேசாமல் திரும்பி சென்று மெத்தையில் படுத்துக்கொண்டாள். டம்ளருடன் அவளிடம் சென்ற கார்த்திக்
" இப்போது பரவாயில்லையா ராஜி. " என்று கேட்டான்
" எனக்கு எப்படியோ இருந்துட்டு போவுது தயவு செஞ்சு கொஞ்சம் வெளியே போங்க. திரும்பத் திரும்ப வந்து இப்படித் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காதீங்க."
" ராஜி நான் உன்ன தொந்தரவு பண்ண வரல. இதுல கஷாயம் இருக்கு. இந்த கசாயத்தை குடி. கொஞ்சம் வலி குறையும். "
" எனக்கு ஒன்னும் தேவை இல்ல. ரெண்டு நாளைக்கு என்ன தொந்தரவு பண்ணாம இருங்க. "
" இங்கே இருக்கிற வரை உன்னை நான் எந்த வகையிலும் தொந்தரவு பண்ண மாட்டேன். அம்மா கிட்ட கேட்டு இப்ப தான் இதை ரெடி பண்ணினேன். இதை மட்டும் குடிச்சிட்டு சாப்பிட்டு தூங்கு. "
ராஜி அவன் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் எதிர்ப்புறமாக படுத்துக் கொண்டிருந்தாள்.
" சரி இங்கே வைத்து விட்டுப் போகிறேன் நீ அப்புறமா குடி. "
டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு ராஜியிடம் சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே சென்றான் கார்த்திக். அவன் வெளியே சென்றதும் டம்ளரில் இருந்த கசாயத்தை எடுத்து குளிக்க தொடங்கினாள் ராஜி. அவள் அதை குடித்துவிட்டு கட்டிலில் அமர்ந்து இருக்க அவளது போன் ரிங் ஆனது.
எடுத்துப் பார்க்க லக்ஷ்மி கால் செய்திருந்தாள். அட்டெண்ட் செய்து " ஹலோ சொல்லுங்க அத்தை. நல்லா இருக்கீங்களா " என்றாள்.
" என்னமா ராஜி எப்படி இருக்க. உடம்பு சரியில்லன்னு கார்த்திக் சொன்னான். இப்ப எப்படிமா இருக்கு. "
" ம் பரவாயில்லை அத்தை. இப்பதான் கசாயம் கொடுத்தாங்க குடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கேன்.
" என்ன பொண்ணுமா நீ. பொண்ணுங்களுக்கு இந்த வலி வருவது சகஜம்தான். நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். இந்த கசாயம் எப்படி செய்றதுன்னு கார்த்திக் கிட்ட சொல்லி இருக்கேன் அவன் கிட்ட கேட்டு மூணு நாளைக்கு தொடர்ந்து போட்டு குடி. "
“ சரிங்க அத்தை “
“ ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க. சந்தோசமா இருக்கீங்களா. சீக்கிரமே ஒரு நல்ல செய்தி சொல்லுமா. “
“ கண்டிப்பாக அத்தை. “
“ சரி மா. நீ ரெஸ்ட் எடு. நான் நாளைக்கு பேசுகிறேன். “
அத்தையிடம் பேசிவிட்டு ராஜி போனை வைத்தாள். அவளுக்கு இப்போது வலி முற்றிலும் குறைந்து விட்டது போல இருந்தது. ரூம் கதவை திறந்து வெளியே சென்று பார்க்க கார்த்திக் ஹாலில் உட்கார்ந்திருந்தான். அவனருகில் சென்று ஒரு நிமிஷம் என்றாள்.
“ என்ன ராஜி சொல்லு. “
என் வாழ்க்கையில உங்ககிட்ட எந்த உதவியும் எதிர்பார்த்து இருக்கக்கூடாது என நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் கடவுள் என்ன உங்க கிட்ட உதவி கேட்கிற இடத்தில நிக்க வச்சுட்டாரு. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி ஆனா இதை காரணம் வச்சு என் கிட்ட நெருங்க ட்ரை பண்ணாதீங்க. நீங்க சொன்ன அந்த ஒரு ஒரு வார்த்தையில உங்க மேல இருந்த மதிப்பு காதல் அன்பு பாசம் எல்லாமே செத்துப்போச்சு. "
" ராஜி நான் அன்னைக்கு ஒரு கோபத்தில் தான் அப்படி உன்கிட்ட சொல்லிட்டேன். அதுக்கப்புறம் அத நெனச்சு ரொம்ப பீல் பண்றேன். ப்ளீஸ் ராஜி. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு. கண்டிப்பா இந்த முறை நான் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். நம்பு. "
" போதும் கார்த்திக். உங்களை நம்பி நம்பி நான் ஏமாந்தது எல்லாம் போதும். நீங்க சொன்ன மாதிரி நீங்க யாரோ நான் யாரோ அப்படின்னு இனிமே இருந்து விடுகிறேன். நான் இனிமே உங்களை எந்த வகையிலும் தொந்தரவு பண்ண மாட்டேன். எனக்கு ரெண்டு நாளைக்கு லீவு வேணும். ஆபீஸ்ல மெயில் பண்றேன் பாத்துக்கோங்க இப்ப எனக்கு ரெஸ்ட் எடுக்கணும் குட் நைட். “
அடுத்து வந்த இரண்டு நாட்கள் ராஜி வீட்டிலையே இருக்க கார்த்திக் ஆபிஸிற்கு சென்றான். அரவிந்தும் கார்த்திக்கிடம் பேசாமல் தான் உண்டு வேலை உண்டு என்பது போல இருந்து கொண்டான். கார்த்திக்கும் சந்துருவும் மட்டும் பேசி கொண்டனர்.
ராஜிக்கு உடல் நிலை சற்று சரி ஆக அன்று காலை குளித்து விட்டு வேலைக்கு செல்ல தயார் ஆனாள். காலை உணவு தயார் செய்து கொண்டிருக்க கார்த்திக் தூங்கி எழுந்து ஹாலிற்கு வர அங்கு கிச்சனில் சமையல் வாசம் வந்து கொண்டிருந்தது.
ஆஹா ரொம்ப நாள் கழிச்சி வீட்டு சாப்பாடு கார்த்தி இன்னைக்கு ஒரு புடி பிடிச்சிடனும். ம்ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹா. நல்ல வாசம் வருதே. ராஜி இவ்ளோ நல்லா சமைப்பியா. இதோ வரன் சொல்லி கொண்டு பாத்ரூம் சென்று பிரெஷப் ஆகி விட்டு வெளியே வந்தான்.
கிச்சன் சென்று பார்க்க ராஜி புத்தம் புது மலராக குளித்து முடித்து தலையில் துண்டை கட்டி கொண்டு, முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளுடன் சமையல் செய்து கொண்டிருந்தாள். கிச்சன் வாசலில் நின்று கொண்டு அவள் சமைக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்.
வாசலில் நிழல் அசைவதை கவனித்த ராஜி அதை சட்டை செய்யாமல் காபி கலந்து கப்பில் ஊற்றினாள்.
( “ என்னதான் பொண்ணுங்களுக்கு கோபம் இருந்தாலும் புருஷனுக்கு செய்ய வேண்டிய கடமைன்னு வந்துட்டா சரியா செஞ்சிடுறாங்க. இப்போ காபி கொடுத்துட்டா கோபம் கொஞ்சம் குறைஞ்சிட்டுன்னு அர்த்தம். கார்த்தி வரா வரா. “ )
“ கொடு ராஜி. “ சொல்லி கொண்டே கையை நீட்ட ராஜி அவனை மதியாமல் காபி கப்புடன் சென்று ரூமுக்குள் புகுந்தாள்.
அப்போ இவ்ளோ நேரம் பண்ணிட்டு இருந்ததெல்லாம் எனக்கு இல்லையா. ச்ச. கார்த்திக் கழுத்தில் கிடந்த துண்டுடன் அடுப்பை பார்க்க பாத்திரம் காலி ஆக இருந்தது. அடுப்பை பற்ற வைத்து தனக்கு காபி கலந்து எடுத்து கொண்டு ஹாலிற்கு வந்தான்.
சில நிமிடங்கள் சென்று விட ராஜி அழகாக சுடிதார் அணிந்து கொண்டு தலையை லூஸ் ஹேர் விட்டு அவனை கடந்து செல்ல ஒரு வித நறுமணம் வீச கார்த்திக் காபி கோப்பையுடன் ஸ்தம்பித்து இருந்தான்.
ராஜி தான் கொண்டு வந்த காபி கோப்பையை கழுவி வைத்து விட்டு டைனிங் டேபிள் சென்று அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.
“ தனியா திங்கிறாலே. ஒரு வார்த்தை ஆச்சும் கூப்பிடுறாளா பாரு. எங்க கூப்பிடுவா. காபியே கொடுக்கலை. இதுல சாப்பாடு வேறையா. “ அவள் சாப்பிடுவதை பார்த்து கொண்டிருக்க ராஜிக்கு புரை ஏறியது.
அவள் கார்த்திக்கை திரும்பி முறைத்து பார்க்க அவன் வேறு பக்கமாக திரும்பி கொண்டான். ராஜி சாப்பிட்டு முடித்து விட்டு பிளேட்டை கழுவி கொண்டு ரூமிற்குள் செல்ல கார்த்திக் அங்கிருந்து நகர்ந்தான். பின் அவனும் தான் பங்கிற்கு ரூமிற்குள் சென்று உடை மாற்றி விட்டு கிளம்ப இருவரும் ஒரே நேரத்தில் ரூமை விட்டு வெளியே வந்தனர்.
கார்த்திக் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை ராஜிடிடம் கொடுத்தான். “ ராஜி ஒரு நிமிஷம். இது பிளாட்டோட இன்னொரு கீ. இது உன்கிட்டயே இருக்கட்டும். “ சொல்லிவிட்டு அவளிடம் கொடுத்தான். “
அதை வாங்கிய ராஜி தனது பேக்கிற்குள் வைத்து கொண்டு அவனை திரும்பி பார்க்காமல் சென்றாள்.
“ ராஜி. “
அவள் மீண்டும் நிற்க “ ராஜி நீ தனியா போக வேண்டாம். நான் வேணும்னா உன்ன ட்ராப் பண்றேன். “
“ எனக்கு எப்படி போகணும்னு தெரியும். உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. “
“ இல்ல ராஜி. உனக்கு கேப் கூட இங்க கிடையாது. அதான் நான் ட்ராப் பண்ணறேன்னு சொன்னேன். “
“ நான் வரேன். “ அவள் பதில் ஏதும் கூறாமல் கதவை அடைத்து கொண்டு வெளியேறினாள்.
திமிர் பிடிச்சவ. ரொம்ப தான் திமிரு. அவன் திரும்பி டைனிங் டேபிளை பார்க்க அங்கு எல்லாம் காலி ஆகி இருந்தது. கிச்சன் சென்று பாத்திரங்களை உருட்ட அங்கும் ஏதும் இல்லை.
ஓஹோ மேடம் உங்களுக்கு மட்டும் சமைப்பீங்க. எனக்கு சமைக்க மாட்டீங்க. ம்ம்ம்ம் சரி எவ்ளோ தூரம் இப்படி இருப்பன்னு நானும் பார்க்குறேன். நினைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
பஸ் பிடித்து ஆபிஸ் வந்து சேர்ந்த ராஜி தனது டேபிளில் பேக்கை வைத்து விட்டு தண்ணீர் எடுத்து குடிக்க அப்போது அவள் டேபிளில் டைரி மில்க் சாக்லேட் ஒன்றம் அதில் இருந்த பேப்பரில் சாரி. நம் இனிய வாழ்வின் துவக்கத்திற்க்காக காத்திருக்கிறேன். என்று எழுதிய பேப்பரும் இருந்தது.
அதை எடுத்து விட்டு கார்த்திக் கேபினை பார்க்க அங்கு கார்த்திக் கண்ணாடி வழியாக அவளை பார்த்து ஹாய் என்பது [போல கை அசைத்தான்.
ராஜி பேப்பரை கசக்கி தனது குப்பை தொட்டியில் போட்டு விட்டு அவனை பார்த்து முறைத்து கொண்டே சாக்லேட்டை எடுத்து குப்பை தொட்டியில் வீசினாள்.
இதை பார்த்து கொண்டிருந்த கார்த்திக் இண்டர்காமில் ராஜிக்கு கால் செய்தான். கார்த்திக் அழைப்பதை பார்த்த ராஜி அட்டென்ட் செய்ய உடனடியாக தனது கேபிணிற்கு வருமாறு அழைத்தான்.
“ மே ஐ கம் இன் சார். “
“ வா ராஜி. உள்ள வா. “
“ ஏன் சாக்லேட் எடுத்து குப்பை தொட்டில போட்ட, “
“ அது என்னோட பெர்சனல் விஷயம் சார். இப்போ நீங்க எதுக்கு கூப்பிட்டீங்க சார். “ முகத்தை வேறு எங்கோ வைத்து கொண்டு பேசினாள்.
“ மேடம்க்கு இன்னும் கோபம் தீரலையா. “
“ சார். நான் ஏன் சார் உங்க மேல கோவப்படனும். “
“ ராஜி சார் எல்லாம் வேண்டாம். கார்த்திக்னு கூப்பிடு. “
“ நீங்க தான சார் அப்படி கூப்பிட சொல்லிருக்கீங்க. ஆபிஸ் வந்த நீங்க எனக்கு பாஸ்னு. “
“ ஓகே ராஜி. ரெண்டு நாள் லீவ் எடுத்திருக்கீங்க. ஏன் இன்பார்ம் பண்ணல. “
“ அதன் உங்க கிட்ட சொன்னேனே. வீட்ல வச்சி. “
“ என்கிட்ட எங்க சொன்னீங்க. நீங்க உங்க ஹஸ்பன்ட் கிட்ட சொன்னேங்கன்னு சொல்லுங்க. “
“ நான் உங்ககிட்ட தான் சொன்னேன். “ அவள் அழுத்தமாக கூறினாள்.
அவள் பதில் கூற முடியாமல் முழிப்பதை ரசித்த கார்த்திக் “ சரி ஓகே. ஒரு மெயில் மட்டும் டைப் பண்ணி அனுப்புங்க. “
“ சரிங்க சார். வேற சார். “
“ ஒன்னும் இல்ல. நீங்க போகலாம். “
அவள் சென்று விட அவள் போவதை வாயில் கையை வைத்து கொண்டு சிரித்த முகமாக பார்த்து கொண்டிருந்தான்.
சில மணி நேரம் கழித்து அரவிந்த் கார்த்திக் கேபிணிற்கு வர “ கார்த்திக் இன்னைக்கு கிளைன்ட் மீட்டிங் இருக்கு. எல்லாம் ரெடி பண்ணியாச்சு. “
“ எல்லாம் செக் பண்ணிட்டியா “
“ ம்ம்ம் பண்ணிட்டேன் கார்த்திக். “
“ திரும்பவும் ஒரு தடவை கரெக்சன் பார்த்துக்கோ. மிஸ்டேக் வர கூடாது. “
“ ஓகே கார்த்திக். “
“ அப்பரம் உன் தங்கச்சி இன்னைக்கு வேலைக்கு வந்திட்டா போல. “
“ ஏன் கார்த்திக் உன் பொண்டாட்டின்னு சொல்ல வேண்டியது தான. “
“ சரிப்பா என் பொண்டாட்டி வேலைக்கு வந்துட்டா. உங்கிட்ட எதாச்சும் சொன்னாளா. “
“ நான் இன்னும் ராஜிகிட்ட பேசல. சரி உனக்கு என்ன அவ மேல இவ்ளோ அக்கறை. “
“ நான் தானடா அக்கறை படனும். டேய் நியாப்படி பார்த்தா அன்னைக்கு நீ செஞ்சதுக்கு நான் தாண்டா உன்மேல கோவபடனும். ஆனா நீ மூஞ்ச தூக்கிட்டு போற. “
“ அப்போ நீ செஞ்சிட்டு இருக்குறது சரின்னு சொல்றியா. “
“ நான் செஞ்சிட்டு இருக்கிறது தப்பு தாண்டா. அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற. “
“ ச்சீ உன்னால தான் இப்படி எல்லாம் பேச முடியும். உங்கிட்ட பேசுறதே வேஸ்ட். நான் வரேன். “ சொல்லிவிட்டு கதவை திறந்து சென்றான் அரவிந்த்.