05-08-2020, 10:07 PM
வீட்டுக்கு வந்த கதிர், சாப்பிட்டுவிட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போனான். ஈவினிங்க் களைப்போடு திரும்ப வந்தபோது அம்மா கோபமாக இருந்தாள்.
ஏண்டா போனையே எடுக்கல. நிஷா பாவம் வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்துட்டு, போன் பண்ணியும் நீ எடுக்கலைன்னு நடந்தே வந்திருக்கா... என்றாள் லக்ஷ்மி. ஊர்ல அவளுக்கு எல்லா இடமும் தெரியுறவரைக்கும் நீ கொஞ்சம் பார்த்துக்கக்கூடாதா... ஐயோ அண்ணன் கேட்டா நான் என்ன சொல்லுவேன்
ஏம்மா நான்தான் வேலையா இருக்கும்போது போனை வண்டியிலேயே வச்சிருப்பேன்னு உனக்கு தெரியாதா
முகம் கழுவிவிட்டு வந்த நிஷாவுக்கு, கதிரின் அலட்சியம் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. கண்டவன் கூட படுத்தவதானே என்கிற எண்ணம் இருக்கும். அவன் இந்தளவுக்கு மரியாதையோடு நடந்துக்கறதே பெரிய விஷயம்.
நிஷா எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விட்டாள்.
லக்ஷ்மிக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. கோபத்தோடு மகனைப் பார்த்தாள்.
ஈவினிங்க் அவளை கூப்பிட வரமாட்டேன் என்பதை முதலிலேயே சொல்லியிருக்கவேண்டும். அலட்சியமாக இருந்தது தவறுதான் என்று கதிருக்கும் வருத்தமாக இருந்தது. தூங்குவதற்கு முன், அவளிடம் ஸாரி கேட்பதற்காக மேலே அவள் ரூமுக்குச் சென்றான். அதிர்ந்தான்.
அங்கே நிஷா தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு படுத்திருந்தாள்.
கதிர் பதறிக்கொண்டு ஓடினான். நிஷா... என்னாச்சு? ஏன் அழறீங்க? நிஷா ப்ளீஸ்.....ஐயோ நான் பண்ணது தப்புதான். இப்படி அழறீங்களே முதல்ல அழுறதை நிறுத்துங்க....
அவளோ நிறுத்தாமல் அழ, கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு, அம்மா... அம்மா... என்று கீழே ஓடினான்.
லக்ஷ்மி மேலே ஓடி வந்தாள். நிஷாவை வாரி இழுத்து அணைத்துக்கொண்டாள். இந்த சின்ன விஷயத்துக்கு ஏம்மா அழுற? என்று தடவிக்கொடுத்தாள். பின்னால் வந்து நின்ற கதிருக்கு வேதனையாக இருந்தது.
அழுகையை நிறுத்த முடியாமல்... லட்சுமியிடம் ஏதோ சொல்ல வந்த நிஷா, அதை நிறுத்திவிட்டு, நிமிர்ந்து கதிரைப் பார்க்க, லக்ஷ்மி கதிரிடம் சொன்னாள்.
டேய்... கீழ போ
கதிர் மெதுவாக கீழே இறங்கிப் போனதும், லக்ஷ்மி நிஷாவிடம் சொன்னாள். அழாதடா செல்லம். இதுக்கெல்லாமா அழுவாங்க? நாளைலேர்ந்து அவனை உன்ன ஒழுங்கா கொண்டுபோய் விட்டுட்டு, ஒழுங்கா கொண்டுவந்து விடச்சொல்றேன்.
நான் அதுக்காக அழலை அத்தை. கதிர் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல
அப்புறம் என்னடா பிரச்சனை?
என்னால வீட்டுல எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்? நான் தப்பு பண்ணிட்டேனே அத்தை. எப்படி மூளை மழுங்கி இப்படியெல்லாம் பண்ணேன்னு எனக்கே தெரியல. ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டு, இப்போ இன்னொரு மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காரு அப்பா. எல்லாம் என்னாலதான? இத நெனச்சாலே எனக்கு அழுகை வந்துடுது
லக்ஷ்மி அவளை அணைத்துக்கொண்டாள். சமாதானம் சொல்லி தூங்க வைத்தாள். அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னாள்.
அவ இங்கயும் அவ ரூம்ல அழுத்துட்டுதான் கிடந்தா. அந்த ஊர் சூழ்நிலை அவளுக்கு இதமா இருக்கும்னு நெனச்சேனே... அங்க வந்தும் அழுறாளா... என்றார். பெருமூச்சு விட்டார். ஆம்பளை பசங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடுறாங்க. பொண்ணுங்க வாழ்க்கை இப்படி கிடந்தது சீரழியுதே
அந்தக் காலை - சோகமாக விடிந்தது.
லக்ஷ்மி கதிரிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தாள். அவன் பைக்கை நன்றாக கழுவி துடைத்து, சீட் கவர் மாற்றி வைத்திருந்தான். கீழே இறங்கி வந்த நிஷா நேராக பைக்குக்கு சென்றாள்.
எதுவும் சாப்பிடாம போறியேம்மா?
பசிக்கலை அத்தை. உங்களை கஷ்டப்படுத்துறேனா?
என்னம்மா இப்படி கேட்டுட்ட? கதிரு... நிஷாவை கொன்டுபோய் விடு. போனை உன் சட்டலையே வச்சுக்க
சரிம்மா....
ஸ்கூலில் - அவள் இறங்கியதும் சொன்னான். ஸாரி நிஷா
நான் அதுக்காக அழலை. தப்பா எடுத்துக்காதீங்க கதிர்
சொல்லிவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். கதிர், இதற்குமுன் தான் பார்த்து ரசித்த நிஷாவை எங்கே? என்று தேடிக்கொண்டிருந்தான். அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.