05-08-2020, 01:38 AM
மறுநாள் -
இருவரும் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார்கள். சீனு அவளை பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டான். அவள், இவன் கைபிடித்துக்கொண்டு ரோடு க்ராஸ் பண்ணினாள். இவன், அவள் கைபிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு நடந்தான்
இன்று, அகல்யாவை ஆங்காங்கு நிழலில் உட்காரவைத்துவிட்டு, அவன் மட்டும் வெயிலில் அலைந்தான். மீறி அவள் அலைந்தால், தடுத்தான். ப்ளீஸ் அகல்யா ரொம்ப வ்ருத்திக்காதீங்க. உங்களை இப்படிப் பார்க்கவே கஷ்டமா இருக்கு
அன்றும் அவர்களுக்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லை.
அவள் வார்த்தைக்கு வார்த்த நவீன் நவீன் என்றாள். இப்படி லவ் பண்ற பொண்ணை தவிக்க விட்டுட்டு.... எந்தப் பிரச்சனையா இருந்தா என்ன... வந்து நிற்க வேண்டாமா? என்ன ஆம்பளை இவன்? என்று இவன் மனதுக்குள் அவனைத் திட்டினான்.
ஈவினிங்க் - ஹோட்டல் போகும்முன், அவளை ஷாப்பிங்க் மாலுக்குள் கூட்டிக்கொண்டு போனான். உங்களுக்கு ட்ரெஸ் எடுத்துக்கோங்க அகல்யா என்றான்.
இல்ல... வேணாம் சீனு
நேத்துலேர்ந்து ஒரே ட்ரெஸ் போட்டுருக்கீங்க. எடுத்துக்கோங்க. - அவள் கைபிடித்து அவளைக் கூட்டிக்கொண்டு போனான்.
என்கிட்டே பணம் இருக்கு. நீங்க உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க... என்றான். அவள் ட்ரெஸ் பார்க்கும்போது அவளது ஹேண்ட் பேக் அவளுக்கு இடைஞ்சலாக இருக்க, அதை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
நான் வச்சிக்கறேன். நீங்க ப்ரீயா பாருங்க.. என்றான்.
நல்ல ரெஸ்டாரண்ட் ஆக போய் சாப்பிட்டார்கள். அகல்யாவுக்கு என்னலாம் பிடிக்கும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். அதையே ஆர்டர் பண்ணினான்.
கை கழுவிட்டு, அவள் துப்பட்டாவில் துடைக்கப்போக, வேகமாக டிஸ்யூ எடுத்துக்கொடுத்தான். வெயிலில்.. வியர்க்கும்போது கர்ச்சீப் கொடுத்தான். அவளுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு செய்தான்.
ஒருமுறை, குப்பையைக் கிளப்பிக்கொண்டு ஒரு லாரி இவர்களைக் கடந்துசெல்ல, அகல்யாவின் கண்ணுக்குள் தூசி விழுந்துவிட்டது. மிகுந்த சிரமப்பட்டாள். உடனே ரோட்டுக்கடையில் sunglass வாங்கிக்கொடுத்தான்.
எதுக்கு சீனு இதெல்லாம்....
இது சாதாரண க்ளாஸ்தான். 500 ரூபாதான். இந்த 500 ரூபாயைவிட கண்ணு ரொம்ப முக்கியம். என்றான்.
எல்லா ஆண்களும் செய்வதைத்தான் அவனும் செய்தான். அகல்யா - தான் ஒரு comfort zone - க்குள் இருப்பதாக உணர்ந்தாள்.
அந்த இரவு - Agalya was feeling better. வழக்கம்போல, நவீனை நாளைக்கு பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் தூங்கினாள்.