05-08-2020, 01:37 AM
சீனு - அகல்யா இருவருமே, வெயில், தூசி என்று பாராமல் அலைந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.
நவீனின் மாமா வீட்டு அட்ரஸ் தெரியாமல், வேறு எந்த விவரமும் இல்லாமல் தேடிக்கொண்டிருந்தார்கள். ஷாப்பிங்க் மால், பீச் என்று எங்கேயாவது அவனோ அவனோடு நெருங்கியவர்களோ கண்ணில் பட்டுவிட மாட்டார்களா என்று நின்று நின்று பார்த்தார்கள்.
அவனது வாட்ஸப், பேஸ்புக் என்று எதிலும் அப்டேட் இல்லை. அகல்யா பயந்து போனாள்.
அகல்யா மிகவும் களைப்பாக இருந்தாள். சீனுவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சென்னையில் பார்க்கும்போது லட்டு மாதிரி இருந்தவள், இப்போது முகம் வாடி, கருத்திருந்தாள். கூந்தல் கண்டபடி அலைந்து கிடந்தது. கண்களில் சோகம்.
என்னதான், இப்போது விட்டால், காதலனுக்கு கட்டாய கல்யாணம் நடந்துவிடும் என்ற இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும், ஒரு பெண்ணாக, அவள் இப்படி அவனைத் தேடி வரத் துணிந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேநேரம் வீட்டில் இவளை நினைத்து கஷ்டப்படுவார்களே என்கிற எண்ணம் இல்லாமல் அவள் இங்கே வந்து இப்படித் திரிவதை நினைத்து வருத்தமாக இருந்தது.
இதுவரை நவீன் பேசியிருந்ததை வைத்து, அகல்யா, குத்துமதிப்பாக ஒரு பகுதியைச் சொல்ல, அந்த ஏரியாவில் அதிகமாய் சுற்றினார்கள்.
அகல்யா நிற்க முடியாமல், ஒரு கடை முன் சென்று உட்கார, சீனு, பரத்திடம் பேசினான். பின் அகல்யாவிடம் போய் சொன்னான். நீங்க கிளம்புங்க அகல்யா. பரத்துக்கு இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல அட்ரஸ் கிடைச்சிடுமாம். நான் பார்த்து கன்வின்ஸ் பண்ணி அவனைக் கூட்டிட்டு வர்றேன்.
இல்ல சீனு. நாளைக்கு வரைக்கும்தானே... நான் இங்கயே இருந்து அவனைப் பார்க்கிறேன். நீங்க வேணும்னா சென்னைக்கு கிளம்புங்க சீனு. பாவம் என்னால நீங்க கஷ்டப்படுறீங்க
சீனு அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அவளுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அவள் கூப்பிட்ட திசையில் எல்லாம் அலைந்தான். கடைசியில், தங்குவதற்கு, ஹோட்டலில் ரூம் எடுத்தார்கள். தனித்தனி ரூம். அப்பாடா என்று பெட்டில் விழுந்தான்.
தூங்கும் முன், நிஷாவின் கண்ணீர் வடிந்த முகம் ஞாபகத்துக்கு வந்தது. போனை எடுத்தான். டயல் பண்ண மனது வரவில்லை. அழுவாள். கத்துவாள். நான் திருந்திவிட்டேன் என்று சொன்னால் நம்பமாட்டாள்.
ஒருமுறை கால் பண்ணினான். பதில் இல்லை. சில நாட்கள் போகட்டும். கோபம் தனியட்டும். காயத்ரி மற்றும் வீணாவை வைத்து அவளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம். இனிமேல் மனதை அலைபாயவிடக்கூடாது. கண்ட்ரோலாக இருக்கவேண்டும்.
அகல்யாவுக்கு, சீனுவை நினைத்து கஷ்டமாக இருந்தது. அவன் தன்மேல் காட்டும் அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது.
துணிகள் கூட எடுக்காமல் அவள் வந்திருந்தாள். அலசி, காற்றில் காயப்போட்டுவிட்டு கவலையோடு படுத்தாள். நவீன்... நீ எங்கடா இருக்க.... என்ன இப்படித் தவிக்கவிட்டுட்டு நீ என்னடா செய்ற?
ச்சே... அவன் அப்பா அம்மா தவிர, அவன் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு நாள் லவ் பண்ணியிருக்கிறேன்
அலைந்து திரிந்ததில் கால்கள் வலித்தன. அடித்துப் போட்டதுபோல் தூங்கினாள்.