நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#22
இரண்டாவது குழந்தை இறந்தபோது அவருக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்தது. அப்போது அதை நிறுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையினால் அவருக்கு இப்போது தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை இருந்தது. அவரும் என்னென்னவோ செய்துபார்த்தார்.

குழந்தை தாய்ப்பாலுக்கா அழும்போது அவரது இதயம் துடிக்கும். என்ன செய்வது?
புட்டிப்பால் குடித்து வளர்ந்ததால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருந்தது. அதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால் அவரது முழுக்கவனமும் இரண்டாவது குழந்தை மீதே இருந்தது. இந்தக் கால கட்டத்தில் மகேந்திரன் அவரைத்தேடும் சிறிது நேரத்தைக்கூட விட்டுவிட்டான். சமர்த்தாய் தானே குளித்துக் கிளம்பி பள்ளிசீருடையை அணிந்துகொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் என்ன சாப்பாடு இருக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டுத் தன் தந்தையுடன் பள்ளிக்குச் சென்றுவிடுவான்.
அவனுக்குப் பிடித்த சாப்பாடாக இருந்தால் நன்றாக சாப்பிட்டிருப்பான். இல்லை என்றால் சிறிதளவே உணவு உள்ளே இறங்கியிருக்கும்.

வனிதாமணியும் மூத்த மகனைக் கவனித்துக்கொள்ள எத்தனையோ முயற்சி செய்தார். ஆனால் அந்த நேரத்தில் இளையவனின் அழுகுரல் அவரை இழுத்துக்கொள்ளும்.

எப்போதாவது தாய்க்கு அருகில் வந்து தம்பியைத் தடவிப்பார்ப்பான்.

தம்பி மேல் அவனுக்கு எங்கே பொறாமை வந்து விடுமோ என்ற கவலையானார். இந்த மாதிரி சூழ்நிலைகள்தானே ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிடுகின்றன.

அதனால் அவனிடம் தம்பியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்தார்.

அவனும் பள்ளி நேரம் போக வீட்டில் இருக்கும் நேரத்தில் தம்பியோடு விளையாடுவான்.

சிறியவன் உரிமையோடு தாயின் மடியில் விளையாட மகேந்திரன் ஒதுங்கியிருந்தான்.

பெருமூச்சுடன் சொல்லி முடித்தார்.

பெரிய மகன் தன்னைவிட்டு விலகி விட்டான் என்ற வருத்தம் இன்று வரை அவருக்குள் இருக்கிறது.

“ஆரம்பத்தில் அம்மா என் மேல்தான் பாசமா இருக்காங்கன்னு நினைச்சேன். ஆனால் பாசம் எங்கேன்னு பின்னாடிதான் புரிஞ்சது.”

யுகேந்திரன் சொன்னதும் அவர் முகம் வாடிப்போனது.
“போடா. எந்த நேரத்தில் விளையாடறதுன்னு இல்லையா?”
அவனைக் கடிந்துகொண்ட கிருஷ்ணவேணி வனிதாமணியை ஆறுதலாக அணைத்துக்கொண்டாள்.

மகேந்திரன் தன்னைச் சுற்றி வேண்டுமென்றே ஒரு வேலியைப் போட்டுக்கொண்டு ஒதுங்கியிருக்கிறான்.

காலையில் கூட தன் அறையை விட்டு வெளியில் வரும்போது அவள் கீழ்க்கண்ணால் அவனைக் கவனித்தாள். அவன் தன்னைக் காணத்தான் காத்திருக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை முதல்நாள் தன்னைக் கண்டதும் திட்டியது போல் இப்போதும் திட்டத்தான் காத்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவனைக்கவனிக்காத மாதிரி வந்துவிட்டாள்.

இப்போதுதான் அவன் தன்னிடம் வேண்டுமென்றேதான் அப்படி நடந்துகொண்டானோ என்று தோன்றியது.

அதன் பிறகுதான் அவளுக்கு நிம்மதியே பிறந்தது.

“அத்தை. உங்க பிள்ளை உங்களை விட்டு எங்கேயும் போகவில்லை. அதை நீங்க கூடிய சீக்கிரமே வரும்.”

அவள் சொல்ல அவர் முகம் பிரகாசமானது.
அது நடக்குமா?
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 05-03-2019, 10:39 AM



Users browsing this thread: 3 Guest(s)