நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#21
சாப்பிட்டு முடித்த பிறகு சமையல் அறையை ஒதுங்க வைக்க அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். அப்போது விதவிதமான கருவிகள் இருந்தன.

“அத்தை. இதை எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க?”
“நான் எங்கேம்மா வாங்கினேன்? எல்லாம் இவன் வேலைதான். எங்கே எதைப் பார்த்தாலும் என் ஞாபகம் வந்து வாங்கிட்டு வந்துடுவான். வாங்கிட்டு வர்றது மட்டுமல்ல. அதைப் பயன்படுத்தி காயும் வெட்டித்தருவான்.”
“நான் ஒன்னும் சும்மா வாங்கலை. அம்மா காய் வெட்டுறதுக்கு சிரமப்படறதைப் பார்த்த பிறகுதான் வாங்கிட்டு வந்தேன்.”
பேச்சு சுற்றி சுற்றி எப்படியோ மகேந்திரனைப் பற்றி வந்தது.
அவர் சொல்ல ஆரம்பித்தார்.
னிதாமணிக்கும் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் ஆகி ஓராண்டுக்குள் மகேந்திரன் பிறந்துவிட்டான்.
தாயை விட்டுப் பிரிய மாட்டான். எப்போதும் தாயின் முந்தானையைப் பிடித்தவாறேதான் இருப்பான். வெளியில் எங்காவது சென்றால் அவனது தாய்தான் அவனைத் தூக்கிக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் இரண்டாவது குழந்தை உருவானது. சரியான இடைவெளியில் தான் அடுத்த குழந்தை உருவானது.
முதல் குழந்தை என்பதால் மகேந்திரன் வயிற்றில் இருக்கும்போது என்ன குழந்தை என்று எதிர்பார்க்கவில்லை. குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும் என்று இருவருமே எண்ணிவிட்டனர்.
ஆனால் அடுத்த குழந்தை என்றதும் வனிதாமணிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை அதிகாமாக இருந்தது.
ரவிச்சந்திரன் எந்த ஆர்வமும் காட்டவில்லை. சொல்லப்போனால் அவருக்கு அடுத்த குழந்தையே வேண்டாம் என்ற எண்ணம். இருவர் வீட்டிலுமே ஒற்றைக்குழந்தைகளாகப் போய்விட்டதில் வனிதாமணிக்கு மிகவும் வருத்தமே. அவருக்கு நிறைய சொந்தங்கள் புடை சூழ வாழ வேண்டும் என்ற ஆசை.
தங்களுக்குதான் கூடப்பிறந்தவர்கள் இல்லை. தாங்களும் ஒற்றைப்பிள்ளையாய் வளர்க்கக்கூடாது என்று அடுத்த குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதனால் இரண்டாவது குழந்தை உருவான உடன் மிகவும் சந்தோசப்பட்டார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தக் குழந்தை குறைப்பிரசவத்தில் இறந்துவிட்டது. அதுவும் அவர் ஆசைப்பட்ட மாதிரியே பெண் குழந்தை.

குழந்தையைக் கண்ட உடன் கதறி மயங்கிவிழுந்துவிட்டார் வனிதாமணி. அதன் பிறகு அவரது மனமும், உடல்நிலையும் தேற நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.   

அதுவரை மகேந்திரனை அவரது மாமியார்தான் பார்த்துக்கொண்டார்.

ஒருநாள் நாற்காலியில் சோர்வாக அமர்ந்திருந்தார். அப்போது மகேந்திரன் எட்டிப்பார்த்தான். அப்போதுதான் அவருக்கு சுரீரென்று உரைத்தது. நீண்ட நாட்களாக மகேந்திரன் அவரிடம் நெருங்கவேயில்லை.

மகனை நோக்கி கையை நீட்டியவர் அவனை தன்னருகே அழைத்தார். அவனும் தயக்கத்துடன் வந்தான். அம்மா அம்மா என்று தன் பின்னேயே அலைந்துகொண்டிருந்த அவனது தயக்கம் அவருக்கு குற்ற உணர்வைத் தந்தது. இறந்த குழந்தையை நினைத்துக்கொண்டு அவனைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சி அவரைக் குன்ற வைத்தது.

மகனும் தன்னைவிட்டு விலகிப்போய்விட்டானே என்ற வருத்தம் அவரைச் சூழ்ந்தது.

தாயின் அருகே வந்த மகேந்திரன் “அம்மா. உனக்கு புண்ணு ஆறிடுச்சா?” கேட்டவாறே தன் பிஞ்சுக்கையினால் அவரது கன்னத்தில் தடவினான். அதிலேயே அவரது அனைத்து துன்பமும் போய்விட்டது. மகன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டான். என்று நினைத்திருக்கையில்  அவன் தனக்காகதான் பிரிந்திருக்கிறான். என்று புரிந்ததும் நிம்மதி பிறந்தது. ஆனால் அந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அவன் மீண்டும் எதற்காகவும் அன்னையை நாடவில்லை. அப்படியே அவனது தந்தை மாதிரியே அமைதியாய் இருந்துவிட்டான். அவனுக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்க மாட்டான். அவனைப் பார்த்துப் பார்த்து அவனுக்குப் பிடிப்பதை அவரே தெரிந்துகொண்டார்.



மறு குழந்தை வேண்டும் என்று அவர் அடம் பிடித்ததற்கு ரவிச்சந்திரன் அத்தனை எளிதில் சம்மதிக்கவில்லை.
ஆனால் கடைசியில் அவரது பிடிவாதம் வென்றது. யுகேந்திரன் பிறந்தான். ஆனால் சோதனையாக அவருக்கு தாய்ப்பாலே சுரக்கவில்லை.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 05-03-2019, 10:37 AM



Users browsing this thread: 19 Guest(s)