காவியாவின் அடுத்த பயணம்(completed)
#34
விஷால் காவியா டின்னெர் முடித்து வீடு வர பன்னிரெண்டை தாண்டியது காவியா இறங்கி வேகமாக வீட்டிற்கு சென்று விட்டாள். அடுத்த நாள் திங்கட்கிழமை வேலை ஞாபகம் வர காவியாவின் நிமிட நேர சந்தோஷங்கள் மறந்தன. காலை வங்கி சென்று அவள் ஜெய்தீப் அவர் ஆடிட்டர் இருவருடன் நடத்திய பேச்சுவார்த்தை அதன் முடிவுகள் ஆகியவற்றை ஒரு ஒழுங்கு படுத்தி அதை அவள் வங்கியின் வடிவத்திலே நிரப்பி ஒரு மாதிரியாக ஜெய்தீப் குழுமத்தின் ப்ரோபோசலை தயாராக்கினாள். AGM வந்ததும் அவரிடம் அளவளாவி அவரின் சம்மத்ததையும் பெற்று அதை நிறை செய்தாள். அடுத்து சீப் மேனேஜர் ரிடம் சென்று அவள் மும்பை பயணத்திற்கான அனுமதி பெற்று அவரிடமே அதற்கான ப்ளேன் டிக்கெட் மற்றும் அவளுக்கு அதிகார உத்தரவு ஆகிவையுடன் அவள் இருக்கைக்கு வந்தாள் AGM இண்டர்காமில் அழைத்து அவளிடம் ஒரு வேளை மும்பை கூட்டத்தில் ஏதாவது சந்தேகங்கள் விவியார்கள் கேட்டால் அதை உடனே கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். அவரின் முன் யோசனை அவளுக்கு பிடித்திருந்தது. அவர் அறிவுறித்தின விதமே அவள் நூர்ஜஹானை அழைத்து அதை தெரிவிக்க அவள் அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்வதாக சொல்லி மேலும் ஜெய்தீப் இது சம்பந்தமா அவளிடம் பேச விருப்பபடுவதாக சொல்லி ஜெய்தீப் போனுக்கு தொடர்பு தந்தாள். காவியா ஜெய்தீப் ஹலோ சொன்னதும் அவள் அவருக்கு விஷ் பண்ணி அவர் என்ன பேசணும் என்று கேட்க ஜெய்தீப் அவள் கேட்ட விவரங்கள் முழுமையாக இருந்ததா என்றும் வேறு ஏதாவது தகவல் தேவைப்படுமா என்றும் கேட்டு இன்று நடக்க போகும் நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் இது சம்பந்தமான முடிவுகள் எடுக்க போவதாக சொல்லி இந்த விஷயத்தில் அவர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதை உறுதி செய்தார். காவியா ஜெய்தீப் இந்த அளவு ஈடுபாடு காட்டினதை வரவேற்று அவள் நூர்ஜஹானிடம் சொன்னதை அவரிடமும் சொன்னாள். ஜெய்தீப் அதற்கு நன்றி தெரிவித்து தேவையான ஏற்பாடுகளை அவரே நேரிடையாக கவனிப்பதாக உறுதி அளித்தார்.
காவியா ஸ்டெல்லாவை அழைத்து விஷ் பண்ண அவள்காவியாவிடம் ஏதாவது முக்கிய வேலை இருக்கிறதா என்று கேட்க காவியா அவள்ப்ரீயாக இருந்தால் அவளின் மும்பை பெபெர்களை கொஞ்சம் ஒழுங்கு படுத்தி அதைதேவையான நகல்களை அச்சிட்டு தருமாறு கேட்டாள். ஸ்டெல்லா அவள் ஒரு சிறியலெட்டர் டைப் பண்ணுவதாகவும் அது முடித்ததும் அவள் வேலையை செய்வதாக சொன்னாள்ஸ்டெல்லாவிடம் அந்த வேலையை ஒப்படைத்த நிம்மதியில் அவள் அர்ஜுனுக்கு அவளின்மும்பை பயணம் பற்றி சொல்லுவதற்கு அர்ஜுன் ஹான்டு போன் நம்பரை போட்டாள்.அர்ஜுன் காவியாவின் குரலை கேட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அவளிடம் சிறிதுநேரம் பெர்சனலாக பேசினான். பிறகு காவியா அழைத்ததற்கான காரணத்தை கேட்ககாவியா அவளின் மும்பை பயணம் பற்றியும் அதன் முக்கிய காரணம் ஆகியவற்றை சொல்லஅர்ஜுன் காவியா நீ ஜெய்தீப் நிறுவனத்தின் MD யுடன் பேசினாயா அவர் பிஸ்னெஸ்சர்க்கிளில் எவ்வளவு மதிப்புடனும் அவரின் நடப்பை எத்தனை பெரிய தொழில்அதிபர்கள் ஒரு பேராக மதிக்கறார்கள் என்றாலும் ஜெய்தீப் பற்றி ஒரு புகழாரம்பாடினான். காவியா அவர் வீட்டிற்கு வந்ததை சொன்னவுடன் அதை அவன் முதலில்நம்பாமல் அவள் அவனை கிண்டல் பண்ணுவதாக சொல்ல காவியா அவனிடம் அவள் சொல்லவதுசத்தியம் சென்று சொன்ன பிறகு அவன் நிஜமாகவே பெருமை பட்டான்.

அவள் அவனுடன் மேலும் சில நிமிடங்கள் அவன் சிங்கப்பூர் அனுபவங்கள் பற்றிபேசி அவனிடம் மும்பை சென்று வந்த பிறகு பேசுவதாக சொல்லி வைத்தாள். அதற்குள்ஸ்டெல்லா வந்து அவள் எதிரே நின்று கொண்டிருந்தாள். காவியா அதை பார்த்துஅவளிடம் ஸ்டெல்லா இனி மேல் நீ என் எதிரே நிற்பதை நான் பார்க்க கூடாது.உட்காருவதற்கு தான் இருக்கைகள் இருக்கின்றன என்று கொஞ்சம் கோவமாகவே சொல்லிஅவளிடம் மும்பை சம்பந்தமான எல்லா ஏடுகளையும் குடுத்தாள் ஸ்டெல்லா அவள்என்று மும்பை கிளம்புகிறாள் என்று கேட்க காவியா அவள் டிராயரில் இருந்துப்ளேன் டிக்கெட் எடுத்து பார்த்து அடுத்த நாள் காலை ஏழு மணி ப்ளைட் என்றுசொன்னாள்.ஸ்டெல்லா அவள் இருக்கைக்கு செல்ல காவியா மற்ற சில்லறை வேலைகளைமுடித்துஅவள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு என்று உறுதி செய்துகொண்டாள்.அடுத்து நெட் ஆன் செய்து அவளுக்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தஹோட்டல் இருக்கும் இடத்தை கூகிள் மாப்பில் பார்த்து தெரிந்து கொண்டு அந்தஹோட்டல் பற்றிய ஏனைய விவரங்களை சேகரித்தாள்.அவள் மொபைல் சிணுங்க அவள்எடுத்து ஹலோ சொன்னாள் அந்த பக்கம் ஜெய்தீப் பேசுவதாக சொல்லி அவர்நூர்ஜஹானிடம் விவாதித்து காவியா எந்த நேரத்தில் எந்த விவரம் கேட்டாலும் அதைஉடனடியாக தருவதற்கு உத்தரவுகள் பிறப்பித்திருப்பதாக கூறினார். பிறகு அவள்என்று மும்பை போகிறாள் என்று கேட்டு அவளுக்கு வீட்டில் இருந்து ஏர்போர்ட்செல்ல வண்டி அனுப்புவதாக கூறினார். காவியா அதை மறுத்தாலும் அவர்அனுப்புவதில் உறுதியாக இருக்க காவியா வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டாள்.அடுத்து அவள் மும்பையில் எங்கு தங்க போவதாக விசாரிக்க அவள் ஹோட்டல் பேரைசொன்னாள். ஜெய்தீப்ற்கு அந்த ஹோட்டல் பற்றி தெரியவில்லை இருந்தும் அவள்கூறிய விலாசத்தை குறித்து கொண்டார். லைன் வைக்க பட காவியாவிற்கு கொஞ்சம்ரிலாக்ஸ் பண்ணனும் மாதிரி இருக்க அவள் வெளியே சென்று அருகே இருந்த காப்பிடே சென்று கொஞ்ச நேரம் அமர்ந்து காப்பி அருந்தி மீண்டும் பேங்க் சென்றாள்.


காவியா ஸ்டெல்லாவிற்கு விஷால் என்ற நபர் இருப்பது தெரிய வேண்டிய அவசியம்இல்லை என்று அவளிடம் அவை ஏதோ விளம்பர SMS என்று முடித்தாள்.அடுத்து அவள்மேனேஜர் மும்பையில் தாங்கும் வசதி இன்னும் உறுதி செய்ய படவில்லை என்றுசொன்னதை சொல்லி என்ன செய்வது என்று குழம்புவதாக கூறினாள். ஸ்டெல்லா காவியாநீங்க மும்பை செல்வது ஜெய்தீப் குழுமத்தின் கணக்குகள் மாற்றுவதை பற்றிஎடுத்து சொல்லி அதற்கான அனுமதி பெறுவதற்காக நீங்கள் ஏன் அவர்கள்குழுமத்தின் ஹோடேலில் ஒரு அறையை தங்குவதற்கு எடுத்துக்கலாமே என்று எடுத்துகொடுக்க காவியாவிற்கு அதை ரெண்டு விதமாக பார்த்தாள். முதலில் வங்கிநெறிமுறை படி எந்த ஒரு வங்கி ஊழியரும் வங்கி வாடிக்கையாளர்களிடம் எந்தவிதமான ஆதாயத்தையும் கேட்பதோ பெறுவதோ தவறு ஆகவே காவியா அதை செய்வது முறைஇல்லை. அதே மூச்சில் அவள் மும்பை செல்வது முதல் முறை அங்கே சென்று புதியஇடத்தில முழிப்பதை விட தெரிந்த ஒரு ஹோட்டலில் பணம் குடுத்து தான் தங்கபோகிறோம் அதில் தவறேதும் இல்லை என்று நினைத்தாள். ஆனால் ஸ்டெல்லாவிடம்வெறுமனே பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி வைத்தாள்.

வங்கி சென்றதும் இதை பற்றி நூர்ஜஹானிடம் பேசுவதா அல்லது நேரிடையாகஜெய்தீப்டம் பேசுவதா என்று யோசித்து ஜெய்தீப் ஐயே கேட்பது என்று ஜெய்தீப்கால் பண்ணினாள். அவன் தற்போது லஞ்சில் இருப்பதாகவும் அவனே இன்னும் கொஞ்சநேரத்தில் கூப்பிடுவான் என்றும் எந்திர குரல் கூறியது.


காவியா மற்ற வேலைகளை கவனிக்க முற்பட்டாள். AGM இண்டர்காமில் அவர் கிளம்புவதாகவும் அவரிடம் அவள் தயாரித்த ஒரு ப்ரோபோசல் நகலை தருமாறு கேட்க காவியா ஒரு போல்டரை எடுத்து போய் அவரிடம் குடுத்தாள். AGM டெல்லி சென்று மும்பைக்கு நாளை மறு நாள் வருவதாக சொனார் காவியாவும் சரி என்று சொல்லி திரும்பினாள். ஜெய்தீப் போன் செய்து சொல்லுங்கள் காவியா நீங்கள் அழைத்தீர்களா என்று கேட்டார் காவியா ஆமாம் என்று சொல்லி அவள் மும்பையில் தங்கும் பிரெச்சனை பற்றி சொல்லி அவர்கள் ஹோட்டலில் வசதி கிடைக்குமா என்றாள். ஜெய்தீப் சிரித்து கொண்டே இது ஒரு விஷயமே இல்லை எங்க ஹோட்டல் மும்பையில் மூடரு இடத்தில் இருக்கின்றன ஒன்று உங்கள் கார்ப்பரேட் அலுவலகம் அருகே இருகின்றது அதில் தான் வங்கியின் பல மேல் அதிகாரிகள் வழக்கமாக தங்குவார்கள் என்றும் மற்ற இரண்டில் ஒன்று தாதரில் இருப்பதாகவும் அடுத்தது சபர்ப் மும்பையில் இருகின்றது என்றார். உங்களுக்கு தாதர் ஹோட்டலில் நான் ரூம் ஏற்பாடு செய்கிறேன் அப்படி நீங்கள் எங்கள் ஹோட்டலில் தங்குவது முறை அல்ல என்று நினைக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தங்குவதாக சொல்லி விடுங்கள் உங்கள் பயணத்திற்கான வசதியும் எங்கள் ஹோட்டலே கவனித்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சொல்லி நீங்கள் எங்கள் நிறுவனத்திற்காக தான் மும்பை செல்வதால் இதை செய்து தருவது எங்கள் கடமை என்று முடித்தார். காவியஆம் வேறு வழி இல்லாமல் அதை ஏற்று கொண்டாள். ஜெய்தீப் வேறு ஏதாவது தேவை என்றால் நூர்ஜஹானிடம் பேசுமாறு சொல்லி அவர் நிறுவத்தின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு சென்று விட்டால் பேச முடியாது என்று கூறினார். காவியா வருக்கு நன்றி தெரிவித்து வைத்தார். சீப் மேனேஜர் காபின் சென்று அவள் தங்குவதற்கு அவள் உறவினர் வீட்டில் ஏற்ப்பாடு செய்து கொண்டதாகவும் அவர்களே அவள் மும்பையில் இருக்கும் வரை அவளின் தேவைகளை கவனித்து கொள்வார்கள் என்று கூறி இருப்பதாகவும் சொல்லி மேனேஜர் மும்பை அழைத்து சொல்லிவிடவும் கேட்டு கொண்டாள். அவரும் அதுவும் நல்லதுதான் என்று சொல்லி ஆவன செய்வதாக கூறினார். காவியா ஸ்டெல்லாவிடமும் இதையே சொல்லி வைத்தாள்.
வங்கியில் இருந்து சீக்கிரமாகவே கிளம்பி வீட்டிற்கு வந்து டிரைவரிடம் வண்டியை சர்விஸ் பண்ண குடுக்குமாறு சொல்லி அவள் மும்பை செல்வதால் அவன் இன்னும் மூன்று நாட்கள் வேளைக்கு வர வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தாள். அவள் மும்பைக்கு எடுத்து செல்ல வேண்டிய உடைமைகளை ஒரு பெட்டியில் அடுக்கினாள். அடுத்து அவளின் கை பையில் முக்கிய பொருட்களை வைத்தாள். ஒன்பது மணிக்கு அவள் மொபைல் அடிக்க அது ஜெய்தீப் கால் அவள் ஹெல்லோ சொல்ல ஜெய்தீப் காவியா எங்க போர்டு மீட்டில் எனக்கு முழு அதிகாரம் குடுத்து தீர்மானம் போடப்பட்டுள்ளது மேலும் நானும் மும்பையில் இருந்து தேவையான வழிமுறைகளை செய்வதாக சொல்லி இருக்கேன் ஆக நானும் நாளை மும்பை வருகிறேன் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் உங்களை ஏர்போர்ட் செல்ல பிக் அப் பண்ணிக்கலாமா என்று கேட்க காவியா சரி என்றாள். ஜெய்தீப் அவள் டிக்கெட் விவரங்களை கேட்க காவியா கூறினாள். அவர் அடுத்த நாள் சரியா நான்கு முப்பது மணிக்கு அவள் வீட்டில் அவளை பிக் அப் பண்ணுவதாக கூறி வைத்தார்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 05-03-2019, 10:05 AM



Users browsing this thread: 3 Guest(s)