"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#36
அம்மாதான் பாசக்காரி,.... அழுதுகிட்டு இருப்பா. அப்பன் எங்கே தேடப் போறான்? தொலைஞ்சது சனியன்’னு இருப்பார். என் தங்கச்சி வந்து தேடுனாதான் உண்டு.அவ என்னை தேடி வர்றதுக்குள்ளே, நாம கிளம்பிடணும். அவள பாத்துட்டா பாசத்துல என் வைராக்கியம் சுக்கு நூறா உடைஞ்சிடும்”

பேசிக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சரவணன் ஓட்ட,..... நான் பின்னால் தலைக்கு முக்காடிட்டு உட்கார,.... கால் மணி நேர பயணத்தில் இருவரும் கல்லணையை அடந்தோம்.

கல்லணைப் பூங்காவில் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு மா மர நிழலில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் உட்கார்ந்து, ஸ்வீட் பெட்டியைத் திறந்து, ஒரு ஸ்வீட் எடுத்து அவன் வாயிலே ஊட்டிவிடப் போக, என் கையைத் தடுத்தவன்,....

”என்ன விஷயம் சொல்லு மீனா?”

“இன்னைக்கு என்ன நாள்?’

“புதன் கிழமை.”

“அதில்லை. மக்கு. நல்லா யோசிச்சுப் பாரு?”

“ம்....அம்மாவாசை.”

“’இத’ வச்சுகிட்டு நான் என்னதான் பண்றதோ? என்று நான் பொய்யாய் சலித்துக் கொள்ள,....

“எனக்கு ஒன்னும் தெரியலைடி மீனா. எனக்கு என்னோட பிரச்சினை. சஸ்பென்ஸ் வைக்காம நீதான் சொல்லேன்”

“இன்னைக்கு உன் லவ்வரோட ரிசல்ட் வந்த நாள்!”

நினைவு வந்தவனாக, சந்தோஷத்தை கண்களில் காட்டி,“ஆமான்டி மீனா, மறந்தே போய்ட்டேன். மாலை மலர் பேப்பர் வந்திருக்கும். நீ பாஸாயிட்டதானே?” 

‘ஆமாம்’ என்று தலையாட்டிய நான், அவன் வாயிலே ஸ்வீட்டை ஊட்டி விட்டு,”உன் காதலி பரீட்சையிலே பாஸாகி இருக்கா. அதை அவ கூட செலிப்ரேட் பண்ண, நீ என்ன கிஃப்ட் வாங்கி வச்சிருக்கே?”

“ நான் என் இதயத்தையே உனக்கு கொடுத்திருக்கேன். அதை விட பெரிய கிஃப்ட எதிர்பாக்கிறியா?”

“ ச்சீய் போடா,....நான் ஸீரியசா கேக்கிறேன். நீ காமெடி பண்ணிகிட்டு,....”.

என் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு நிமிடம் யோசித்தவன்,” சாரிடி,....உனக்கு இன்னைக்கு ‘ரிசல்ட் வர்ற நாள்’ன்னு எனக்கு நெனைப்பே இல்ல மீனா. அதுவும் இல்லாம எங்க வீட்டுல எல்லோரும் சேர்ந்து அடிச்சு, அசிங்க அசிங்கமா திட்டினதைக் கேட்டு நான் ரொம்ப மூட் அவுட்ல இருக்கேன். நாளைக்கு உனக்கு என்னோட கிஃப்ட் நீச்சயம் உண்டு”

“என்ன கிஃப்ட் சொல்லேன். சஸ்பென்ஸ் வைக்காத, என்னால காத்திருக்க முடியாது” என்று சொல்லி சிணுங்க,....

“நாளைக்குதான் அதை உன் கிட்டே நேர்ல காமிப்பேன். ஆனா, இப்ப,.... என்று என் முகத்தை சில வினாடிகல் ஆசையாகப் பார்த்தவன், நான் எதிர்பார்க்காத நேரத்தில் என் முகத்தை அவன் கைகளில் ஏந்தி, என் உதடுகளை உள்ளிழுத்து சப்பி, உறிஞ்சி முத்தம் கொடுக்க,....

எனக்கு கிறு கிறு என்று தலை சுத்தியது, யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று பயம் வர, வீட்டுக்கு போகலாம் வாடா,..... நான் பாஸான விசயத்தை என் வீட்ல கூட சொல்லலை. முதல்ல உன் கிட்டே சொல்லனும்னு தோனிச்சு, அதான் வந்தேன். ஃப்ரன்ட் வீட்ல ரிசல்ட் பாத்துட்டு வந்திட்றேன்னு வீட்ல சொல்லிட்டு, நான் வந்து ரொம்ப நேரமாச்சு. என் வீட்ல என்னைத் தேடப் போறாங்க.வா போகலாம் இருட்டிடப் போகுது” என்று சொல்லி அவன் கை பிடித்து இழுக்க,...

பெஞ்சை விட்டு எழுந்து, என் கை கோர்த்து என்னுடன் சேர்ந்து இருவரும் நடந்தபடியே“ நாளைக்கு நான் என்ன தர்றேன்னு தெரிஞ்சிக்க உனக்கு ஆசை இல்லையா?”

“அப்போ இருந்துச்சு!. இப்போ இல்லை!!” என்று சொல்லி தலை குனிந்தேன்.

“புரியலையேடி.”

“நீங்க ஸ்வீட் சாப்பிட்ட வாயால, அதைவிட ஸ்வீட்டா ஒரு முத்தம் கொடுத்தீங்களே,... அது மறக்க முடியாத பெரிய கிஃப்ட்.”

“நீ ஊட்டி விட்ட இனிப்பின் சுவையா? இல்ல நான் ரசிச்சு ருசிச்ச உன் உதட்டோட சுவையா, எதுன்னு தெரியலை,..... இன்னும் என் உதட்டிலேயே இருக்குடி. போனஸா இன்னொரு கிஃப்ட் தரவா?!”

“ம்....அஸ்கு...புஸ்கு. அதுக்கு வேற ஆளப் பாருங்க.!”

“ஏய்....வேற ஆளப் பாத்துடுவேண்டி. அப்புறம் உனக்குதான் அஸ்கு....புஸ்கு.”

“விட்டா இப்படிதான் பேசிகிட்டே இருப்பீங்க,.... உங்களை!!!!!”.....என்று இழுத்து சொல்லி, ஆசை உந்த, வெக்கம் தடுக்க, சரவணனின் முகத்தைப் பிடித்து, அவன் கழுத்தில் கைகளைக் கோர்த்து, அவனோடு ஒட்டி நின்று உதடுகளைக் கவ்விக் கடிக்க,....

“ஆவ்....இஸ்...கடிக்காதடி”



“இன்னொரு ஆள பாத்துடுவீங்களா? அந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா?”

“ஏய்....விடுடுடி.... ரொம்ப வலிக்குது.....இந்த ஜென்மத்துல வேறொருத்தியை மனசுல கூட நினைக்க மாட்டேன்..”

“அப்ப,....அடுத்த ஜென்மத்துல நினைப்பீங்களா?”

“தப்பா சொல்லிட்டேன்.என்னை மன்னிச்சிடு தாயே. உனக்கு புண்ணியமா போகும். எல்லா ஜென்மத்துலயும் நீதான்”

“அப்படி வாங்க வழிக்கு” என்று சொல்லி இருவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து ஸ்கூட்டியை நோக்கி நடந்தோம்.
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 05-03-2019, 09:49 AM



Users browsing this thread: 5 Guest(s)