05-03-2019, 09:48 AM
1990-ல் நடந்த கதையை சொன்னாதான், இப்ப எங்களைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும்.
திருச்சியிலே, மரக்கடை ஏரியாவிலே எங்க வீடு. அப்பா தாலுகா ஆஃபீஸ்லே கிளர்க். அம்மா ஹவுஸ் வைஃப் என் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன். மற்றும் ஒரு தங்கை.
அண்ணன் கம்யூட்டர் சயின்ஸ் முதல் வருஷம் படிக்க, தங்கை மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் என் அண்ணனுக்கும் மூன்று வயது வித்தியாசம். தங்கைக்கும் எனக்கும் 7 வருட வித்தியாசம்.
என் கனவர் சரவணனோட அப்பா மெயின் கார்டு கேட்டுகிட்டே ஸ்டுடியோ கடை வச்சிருந்தார். சரவணனின் அம்மாவும் ஹவுஸ் வைஃப் தான். சரவணனுக்கு ஒரே ஒரு தங்கை மட்டுமே. ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள்.
1990-லே பத்தாவது வகுப்பு ரிசல்ட் வந்தன்னைக்கு, பேப்பர்ல ‘நான் பாஸ்’ன்னு பாத்துட்டு, அதை உடனே எங்க வீட்ல கூட சொல்லாம, ஆர்வத்துல. தில்லை நகர்ல இருந்த சரவணனோட வீட்டுக்குப் பின் பக்க ரோட்டில் இருந்த கொன்றை மரத்தின் அடியில் நின்று, அங்கிருந்து ஸ்கூட்டி ஹார்ன் அடிச்சு சிக்னல் கொடுத்து அவனை வரச் சொன்னேன்.
அவன் வீட்டு பின் பக்க ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, ஐந்து நிமிட்த்தில், அடிக்கடி அவன் வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தபடியே வந்தான். அருகில் வந்த அவன் முகத்தைப் பார்த்தேன். கண்கள் கலங்கி சிவந்திருக்க, முகம் அழுது வடிந்திருக்க, முகம் இறுகிப் போய் இருந்தது. பொங்கி வந்த அழுகையையும் அடக்கி,கண்களைத் துடைத்துக் கொண்டே,....
” என்ன மீனா இந்த நேரத்துல வந்திருக்கே?”
“ஏன்,.... நான் வரக் கூடாதா?”
“இல்ல,.... நாம ரெண்டு பேரும், நீ காலைல ஸ்கூல் போறப்பதான் சந்திச்சுக்குவோம். ஆனா இன்னைக்கு சாயந்திரம் மணி 4 ஆகப் போகுது, இப்ப போய் என்னைப் பாக்க,..... அதுவும் என் வீடு இருக்கிற தெருவுக்கே வந்திருக்கியே என்ன விஷயம்?”
“நான் சொல்ற விசயம் இருக்கட்டும். நீ ஏன் டல்லா இருக்கே? உன் வீட்டுல ஏதாவது பிரச்சினையா?”
அழுகை பொங்கி வெடிக்க,“ஆமாம் மீனா. நான் அடங்காப் பிடாறியாம், பொருக்கியாம், ஊர் சுத்தியாம், உதவாக் கரையாம், பொருக்கியாம், பொரம்போக்காம், தர்த்திரம் புடிச்சவனாம், விளங்காதவனாம்.”
கண்ணீர் தழும்பி நின்ற அவன் கண்களை என் கைகுட்டையால் துடைத்துவிட்ட நான், “அழாம சொல்லுடா. என்ன நடந்தது?”
“பணம் கட்ட பேங்குக்கு போய் இருந்த நான்,..... பைக்கை பேங்க் முன்னாடி பூட்டு போட்டு நிறுத்தி இருந்தேன்.பேங்க் முன்னாடி பூட்டி நிருத்தி இருந்த பைக் திருடு போய்டுச்சு. அதுக்காக ‘இப்படி பொருப்பில்லாத தெரு நாயா இருக்கியே. தண்டச் சோறு,....படிப்புதான் வரலை.வீட்டுக்கு அடங்குன புள்ளையா பொருப்பாவாவது இருப்பன்னு பாத்தா,..... தறுதலை இப்படி பண்ணிட்டு வந்து நிக்குதேன்னு திட்டி ஆத்திரத்துல, அப்பா பெல்டால அடிச்சு விளாசி.... இனி ஒரு நிமிஷம் இந்த சனியன் புடிச்ச நாய் இந்த வீட்டுல இருக்க்க் கூடாது அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லு’ன்னு அம்மா கிட்டே என் காதில் கேக்கும்படியா சொல்ல,....... நானும் ஆத்திரம் வந்து, ‘இனி இந்த வீட்ல இருக்க நானும் தயார் இல்ல’ன்னு ஆத்திரமா சொல்லி,....என்ன பண்றதுன்னு தெரியாம அழுதுகிட்டு நின்னுகிட்டு இருந்தப்பதான் நீ வந்த.
“சரி...சரி.... பின்ன,..... கொஞ்சமா நஞ்சமா,.... முப்பதாயிரம் ரூபா பைக்க, ஒரு நொடியில தோலைச்சிட்டு வந்து நின்னா, வீட்டுல சும்மா இருப்பாங்களா. எங்க வீட்ல அடிச்சு தோலையெ உரிச்சிருப்பாங்க. ஆனா, உங்க வீட்ல திட்றது கொஞ்சம் ஓவர்தான். எனக்கே நாக்க புடுங்கிட்டு சாகலாமுன்னு அவமானமா இருக்கு. ஆம்புளப் புள்ள நீ உனக்கு ரோஷம் இருக்காதா? சரி...என் ஸ்கூட்டியை எடு. கல்லணை பூங்காவுக்கு போய் மத்ததை பேசிக்கலாம்.”
“பைக் மட்டும் தொலைல மீனா!”
“அப்புறம்,....”
“பைக்கோட சேர்ந்து, பைக் பின்னாடி பெட்டியில வச்சிருந்த, ஒரு லட்ச ரூபாயும் போச்சு.”
“அடப் பாவி....இப்படி தொலைச்சுப் புட்டு ஏமாந்து நிக்கிறியே. போலீஸ் ஸ்டேசன்ல கம்ளைன்ட் பண்ணலாம் வா.”
“விடு மீனா, போலீஸ் தேடி தொலைஞ்சு போன பைக்கையும், பணத்தையும் கண்டு பிடிச்சுட்டா, என்னை என் அப்பன் அடிச்ச அடியும், திட்டின திட்டும் இல்லைன்னா ஆயிடப் போகுதா? என் அப்பனுக்கு இப்படிதான் வேணும். சரியான கஞ்சன். இத்தனை வருஷத்துல எனக்கு நல்லதா ஒரு ஃபேன்ட், சர்ட் எடுத்துக் கொடுத்த்தில்லே தெரியுமா? அவரோட பத்தும் பத்தாதம இத்துப் போன பழைய ட்ரெஸ்சத்தான் நான் இப்பவும் போட்டுட்டு இருக்கேன்.”
“சரி.... திட்டின திட்டுக்கும், அடிச்ச அடிக்கும், பையன் கோவிச்சுகிட்டு எங்காவது போய்டப் போறான்னு உங்க வீட்ல தேட மாட்டாங்களா?”