Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஐசிசி டெஸ்ட்: கோலியின் முதலிடத்துக்கு ஆபத்து: நெருங்கிவிட்ட வில்லியம்ஸன்

[Image: koli1and-williamjpg]கான் வில்லியம்ஸன், விராட் கோலி : கோப்புப்படம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டெஸ்ட் அணிகளுக்கு இன்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் தன் வாழ்நாளில் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில்  இருந்தாலும், 915 புள்ளிகள் பெற்று அவரை நெருங்கி இருக்கிறார் வில்லியம்ஸ.
 அதேபோல நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லேதம், நீல் வாக்னர் ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன் வில்லியம்ஸன் இரட்டை சதம் அடித்தால், லேதம் சதம் அடித்தார். இதனால், இருவரும் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் பேட்ஸ்மேன் தரவரிசையில் 897 புள்ளிகளுடன் கேன் வில்லியம்ஸன் இருந்தார். ஆனால், இரட்டை சதம் அடித்தபின், தரவரிசையில் முன்னேற்றம் கண்டு 915 புள்ளிகள் பெற்றார். ஆனாலும், தொடர்ந்து 2-வது இடத்திலேயே நீடிக்கிறார்.
வங்கதேசத்துடன் இன்னும் டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில், விராட் கோலியின் முதலிடத்தைப் பிடிக்க வில்லியம்ஸனுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
இதற்கு முன் நியூசிலாந்து தரப்பில் முன்னாள் வேகப்பந்துவீ்ச்சாளர் ரிச்சார்ட் ஹேட்லி 909 புள்ளிகள் பெற்றிருந்ததே உயர்வானதாகும். அதையும் இப்போது வில்லியம்ஸன் முறியடித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர் டாம் லேதம், ஜீத் ராவல் ஆகியோரும் சதம் அடித்தனர். இதனால், லேதம் தரவரிசையில் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ராவல் 5 இடங்கள் உயர்ந்து 33-வது இடத்துக்கு வந்துள்ளர்.

 நியூஸி. வேகப்பந்துவீச்சாளர் வாக்னர் : படம் உதவி கெட்டி இமேஜஸ்

 
பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடங்கள் முறையே விராட் கோலி, வில்லியம்ஸன், புஜாரா, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், வார்னர், நிகோலஸ், மார்க்ரம், டீ காக், டூபிளசிஸ் ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட்  போல்ட் 2 இடங்கள் சரிந்து, 769 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு பின்னடைந்துள்ளார், டிம் சவுதி 766 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். அதேசமயம், நீல் வாக்னர் 3 இடங்கள் முன்னேறி, 745 புள்ளிகளுடன் 11-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
வங்கதேசம் அணியில் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 11 இடங்கள் உயர்ந்து, 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மகமதுல்லா 12 இடங்கள் முன்னேறி 40-வது இடத்திலும் சவுமியா சர்க்கார் 67-வது இடத்துக்கும் உயர்ந்தனர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 05-03-2019, 09:23 AM



Users browsing this thread: 100 Guest(s)