அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 24

"செமய்யா இருக்குடா பைக்!!, ஒரு ரவுண்ட் போலாமா?”னு ஜினாலி கேக்க, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, மறுக்க முடியாமல் தலையாட்ட, ஏறி உட்கார்ந்தாள். ஒரு சின்ன ரவுண்ட் தான், ஐந்து நிமிடம் கூட இருக்காது, திரும்பி வரும்பொது, மது, அக்காடமி பார்க்கிங்கில் எனக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள்

செம்மையா இருக்குடா!! ஃப்ரீயா இருக்கும் போது சொல்லு!! ஒரு லாங் ரைட் போலாம்!!”னு இறங்கியவுடன் ஜினாலி சொல்ல, நான் தலையாட்டினேன், மதுவைப் பார்க்காமல்

பை டா!! பை பானு!!”னு என்றவள், அவளது ஸ்குட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

போலாமா மது!!”னு நான் எதுவுமே நடக்காதது போல கேக்க,

என்னை முறைத்து கொண்டிருந்தவள், பைக்கில் ஏறி உக்காரந்தாள். வழக்கத்தை விட அதிக அழுத்தம் என் முதுகில், இத முறை கொஞ்சம் வலிக்கும் அளவுக்கு, அவள் கை மூட்டியால்!!

----------------------------

இரவு, நான், மது, நேத்ரா, மூவரும் நைட் ஷோ படத்துக்கு போனோம்.

ஹே, நீங்க லவ் பர்ட்ஸ் படம் பாக்குறதுக்கு, என் தூக்கத்த எதுக்கு டீ கெடுக்கிறீங்க"னு புலம்பிக் கொண்டேதான் வந்திருந்தாள்.

சீட் நம்பர் தேடிப்பிடித்து, கடைசி சீட்டில் உக்கார, மது, நேத்ரவை, என் அருகில் உக்கார சொல்ல, குழப்பத்தோடு பார்த்தவளை, கண்டுகொள்ளாமல், எனக்கு அடுத்து ஒரு இடம் விட்டு, அடுத்த சீட்டில் அமர்ந்து கொண்டாள். வேறு வழி இல்லாமல் எங்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்த நேத்ரா

என்னடா!! ஏதாவது சண்டையா?”னு கேக்க, நான் ஈவினிங் நடந்ததை சொன்னேன், சரித்தவள் 

நீ அடங்கவே மாட்டியா?, அவளுக்குதான் அந்த மைதாமாவ சுத்தமா பிடிக்காதுணு உனக்கு தெரியும்ல!!”னு அவள் என்னை கடிந்து கொள்ள

இல்ல நேத்ரா, நான் வேணும்னு எல்லாம் பண்ணல!!, மதுவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்பொது தான் அவ வந்தா!!, ரெம்ப கெஞ்சி கேட்ட, என்னால ரெஃப்யூஸ் பண்ண முடியல!!, கொஞ்சநாள் முன்னாடி வரைக்கு அவ கிட்ட நல்ல பேசிக்கிட்டு இருந்துட்டு, திடீர்னு எப்படி முஞ்ச தூக்கி வச்சுக்க முடியும்!!”னு நான் சீரியஸ்ஸா சொல்ல 

நீ உருப்பட மாட்ட!! இவ கிட்ட அடி வாங்கித்தான் சாகப்போறே!!”னு அவள் சபிக்க 

என் இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி இருக்கீங்க!!, நான் சும்மா ஃப்ரெண்ட்லியாத்தான் அவ கூட பழகுறேன்!!” பச்ச புள்ள போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, நறுக் என்று கிள்ளியவள்,

ஃப்ரெண்ட்டு??, நம்பிட்டோம்!!”னு நாக்கலாக சொல்லவும், படம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில்

சாரி, பாப்பா!!”னு மதுவுக்கு ஒரு மெசேஜ் தட்ட, மொபைல் எடுத்து என் மெசேஜ் படித்தவள், அடுத்த நொடி, எட்டி என் ஃபோனை பிடிங்கிக்கொண்டு, என்னை முறைத்தாள். நடுவில் இருந்த நேத்ரா என்னைப் பார்த்து சிரிக்க, நான் திரும்ப அவளை முறைத்தேன்

ஃபோன புடுங்குன அவள முறைக்காமல்!! என்ன எதுக்கு டார்லிங் முறைக்குற!!னு, நேத்ரா, என் கன்னத்தை கிள்ளி, மேலும் கடுப்படிக்க, நான் சிலுப்பிக் கொண்டு, படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவரும் அவ்வப்போது என்னை பார்த்து பேசி சரித்துக் கொண்டிருக்க, அதை கண்டு கொள்ளாதது போல நான் படம் பார்த்தேன்

--------------------------------------

"என்னடா எங்களுக்கு மட்டும் ஐஸ்கிரீம், உனக்கு ஐஸ்ஃப்ரூட்?”னு, இண்டர்வெலின் போது, நான் குடுத்த ஐஸ்கிரீம்மை வாங்கிக் கொண்டு, நேத்ரா கேக்க

எனக்கு ஐஸ்ஃப்ரூட் புடிக்கும்!! நீங்க ரெண்டு பெரும் ஐஸ்கிரீம் தான கேட்டீங்க!!”னு, நான் என் இருக்கையில் அமர்ந்து கொண்டு சொல்ல, நேத்ரா, மதுவிடம் ஏதோ சொல்ல, இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள், அதுவும் நேத்ரா எண்ணப் பார்த்து நாக்கலாக சிரிக்க, நான் கடுப்பனேன் 

இப்படி என்னைய வெறுப்பேத்தணும்னு பிளான் பண்ணி வந்தீங்களா?”னு நான் முறைத்துக் கொண்டு கேக்க,

இல்லடா, உனக்கு ஐஸ்ஃப்ரூட்தான் புடிக்கும்னு இவகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், நீயும் ஐஸ்ஃப்ரூட்டோடா வந்து நிக்கிற!! அது தான்!!”

என்றவளை, மது லேசாக அடிக்க, மீண்டும் இருவரும் சிரித்தனர். நான் இவர்களின் கலாய்ப்பில் கடுப்பாகி எப்போட பயம் போடுவான் என்று திரையை பார்த்துக் கொண்டிருந்தேன். படம் போட்ட, ஐந்து நிமிடத்தில், நேத்ராவும், மதுவும் ஏதோ பேசிக்கொள்ள, பின்பு சீட் மாறி, என் அருகே அமர்ந்தாள், மது. அடுத்த நொடி என் கோபம் காணாமல் போக, சிறுது நேரம் கழித்து, ரெம்ப தயங்கி தயங்கியே, மதுவின் கையைப் பிடித்ததேன். பிடித்த அடுத்த நொடி, அவள் என்னைப் பார்த்து முறைக்க, கையை எடுத்துக் கொண்டேன், மீண்டும் திரையை பார்த்தேன். பத்து நொடிகள் கூட இருக்காது, நான் சற்று முன் விட்ட கையால், அவள் என் கை விரல்களை கோர்த்துப் பிடிக்க, இந்த முறை நான் உருவிக்கொண்டேன்.

அவள் என்னை முறைத்துக் கொண்டிருப்பாள் என்று தெரிந்தே, நான் அவளைப் பார்க்காமல், படத்தையே பார்த்துக் கொண்டிருக்க, "நறுக்" என்று என் இடுப்பில் கிள்ள, “" என்ற நான், அமைதியாக இருக்க, நடுவில் இருந்த ஹேண்ட்ரெஸ்ட்டை, பின்னால் இழுத்து விட்டு, என் கையை இருகைகளால் இழுத்து, மார்போடு வைத்து அனைத்துக் கொண்டு, என் மீது சாய்ந்து கொண்டாள். குஷியான நான், சாய்ந்து கொண்டவளின் நெற்றியில் முத்தமிட்டு, பின் யாராவது பார்க்கிறார்களானு சுற்றிப்பார்க்க, அனைவரும் படம் பார்த்துக் கொண்டிருக்க, நேத்ரா மட்டும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ம்ம்!! நடத்து!!” என்பது போல செய்கை செய்து என்னைப் பார்த்து கண்ணடிக்க, மதுவும் திரும்பி நேத்ரவைப் பாக்க, அவள், எங்கள் இருவரையும் பார்த்து சிரித்தாள்.

இங்க என்னடி பாக்குற, படம் ஸ்கிரீன்ல ஓடுது!!”னு மது, நேத்ராவை பார்த்து சன்னமாக சொல்ல

எனக்கு, அந்த படத்த விட, நீங்க ஓட்டுற செம்மையா இருக்கு!!”னு

நேத்ரா நாக்கலாக சொல்ல, என் கையை விட்டவள், நேத்ராவை கிள்ளினால். பின் இருவரும் எதோ பேசிக் கொள்ள, நேத்ரா திரையை நோக்கி திரும்பினாள், சிரித்துக்கொண்டு. மீண்டும் மது என்னை ஒட்டிக்கொண்டு அமர, நான் அவள் தோள்களில் கை போட்டு அனைத்துக் கொள்ள, படம் பார்த்தோம்(?). 

-------------------------------------

நெக்ஸ்ட் டைம், படத்துக்கு போன, நீ தான் நடுவுல உக்காரனும்!!, உங்களுக்கு என்னால விளக்கு பிடிக்க முடியாது!! என்ன டார்லிங்?”னு, வண்டியில் இருந்து இறங்கிய, நேத்ரா என் பக்கம் வந்து , என்னைப் பார்த்து கேக்க 

வேண்டாம் டார்லிங்!! நெக்ஸ்ட் டைம் நம்ம ரெண்டு பேர் மட்டும் போலாம், தேவை இல்லாத டிஸ்டர்ப்பன்ஸ் எதுக்குனு?!!”னு சிரித்துக் கொண்டே சொல்லி, நான் அவளைப் பார்த்து கண்ணடிக்க, கார் புளிதியை பரப்பிக்கொண்டு சீறியது. என் தொடையில் கிள்ளிய மது

நான் உனக்கு டிஸ்டர்ப்பன்ஸ்ஸா?”னு கேக்க 

ஆமா, நீ கிட்ட இருந்தா படமே பக்க முடியல!! செகண்ட் ஹாஃப் என்ன நடந்துச்சுனு கூட தெரியல!! நான் ஏதோ மயக்கத்துல தான் இருந்தேன்!!”னு வழிந்து கொண்டு சொல்ல, என் கையில், எனக்கு வலிக்காமல் அடித்தவள்,

ஆமா அப்படியே, எங்கிட்ட மயங்கிததான் கிடக்குற!! நம்பிட்டோம்!!”னு அவள் சலித்துக்கொள்ள, அவள் எங்கு வருகிறாள் என்று புரிந்து கொண்டு அமைதியாக இருக்க

என்னடா சத்தத்தையே காணும்!!”னு அவள் கொக்கி போட

சும்மா என்னையே குத்தம் சொல்லாத, எல்லாம் உண்ணாலதான்!!”னு அவள் விரித்த வலையில், நானாக போய் சிக்கிக் கொண்டேன்.

பண்றதெல்லாம் பண்ணிட்டு!! என் மேல பழி போடுறாய்யா?”னு அவள் எகிற 

நீ லேட் பண்ணதாலதான் இன்னைக்கு அவகிட்ட மாட்டிக்கிட்டேன், நீ மட்டும் சீக்கிரம் வந்திருந்த அவள பாத்திருக்க கூட மாட்டேன்!!”னு நானும் பதட்டத்தில் கொஞ்சம் எகிற 

அப்போ நான் லேட்டா வந்தா எவ கூப்பிட்டாலும் போயிருவியா"னு கேட்டவாறே, காரை ஓரம் கட்டி நிறுத்தியவள், என்னை பார்த்து திரும்பி அமர்ந்து கொண்டு முறைக்க, இப்பொழுது உன்மையிலேயே எனக்கு கொஞ்சம் கிலியானது

என்ன பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!”னு, வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து, கெஞ்ச

பாப்பா! கிப்பான!! பல்ல உடச்சுறுவேன்!!, அவ கேட்டா முடியாதுனு சொல்ல வேண்டியதுதான!!”னு கோவமாமா கேக்க, நான் அமைதியாக, அவளை பாவமாக பாக்க

சரி, அத விட்டுருவோம்!!, அவள கூட்டிட்டு ரைடு போகும் போது, அக்கடமில இருந்து வெளிய போன உடனே, லெஃப்ட்ல போனியா? ரைட்ல போனியா?” கேக்க 

லெஃப்ட்"னு, இத எதுக்கு கேக்குறானு புரியாமல் சொல்ல

என் ரைட் போல?”னு அவள் திரும்பவும் கேக்க, மீண்டும் புரியாமல், குழப்பத்தோடு அவளைப் பார்க்க

இதுக்கு மட்டும் வாய மூடிக்கோ!! எனக்கு தெரியும்!! ஏன்னா லெஃப்ட்ல போன மூணு ஸ்பீட் பிரேக்கர் இருக்கு, ரைட்ல ஒண்ணுமே இல்ல!!”னு அவள் பொறிந்து தள்ள, உண்மையில் மிரண்டு விட்டேன் நான், மதுவின் இந்த முகத்தை இதுக்கு முன்ன பார்த்தது இல்லை நான்,

என்ன பாப்பா!! என்ன நம்பளையா?”னு பாவமா, கெஞ்சும் தொனியில் அவள் கையை பிடிக்க, உதறியவள்

உன்ன!! நம்பனுமா?, அவள மடக்குறதுக்கு என்கிட்டையே ஐடியா கேட்டவன் தான நீ?”னு அவள் கேக்க, கொஞ்சம் கலங்கிப் போனேன்.

அதுவேற!! இப்போ வேற!!”னு கொஞ்சம் உடைந்த குரலில், நான் ஏதோ உளற 

அப்படி என்ன மாறிருச்சு?”, அவள் விடுவதாக இல்லை

அப்போ நீ!!”னு சொல்லி நிறுத்தியவன், ஏன் என்று தெரியவில்லை, நியமாக கோபப்பட வேண்டிய நான், கலங்கியவாறு 

இப்போ நீ என் பொண்டாட்டி, பாப்பா!!”னு தலையை குனிந்து குரல் விம்மி, சொல்ல, அவளிடம் இருந்து, எந்த ரியாக்சனும் வராததை உணர்ந்து, நிமிர்ந்து பார்க்க, அவள் என் மேல் பாய்ந்தாள். பாய்ந்தவள் என் உதடுகளை கவ்வி முத்தமிட, சில நொடிகளில் அவள் மொத்த எடையையும் என் மடியில் உணர்ந்தேன். எப்படி வந்தாள் என்று தெரியவில்லை, இப்பொழுது என் மடியில் அமர்ந்திருந்தாள்.

சாரி பாப்பா!!”னு என் உதட்டை விடுவித்து, என் முகத்தை கையில் ஏந்தி, கெஞ்சலாக சொல்ல

நான் தான் பாப்பா!! சாரி கேக்கணும்!!, உன்கிட்டையே அவளப் பத்தி எண்ணலாம் பேசிருக்கேன், சாரி பாப்பா!!"னு

இவளை எப்படி எல்லாம் காயபடுத்தியிருக்கிறேன், என்று நினைத்து வருந்த, மீண்டும் என் உதடுகளை கவ்வினாள். பத்து நிமிடம் கழித்து, சீட் மொத்தமாக சரிந்திருக்க, இருவரும் நெருக்கிக் கொண்டு படுத்திருந்தோம் அந்த சீட்டில், எதைப்பற்றியும் கவலைப்படாமல். என் கழுத்தில் அவள் விரலால் கோலமிட்ட படி

நான் உன் பொண்டாட்டியா? பாப்பா!!”னு அவள் கொஞ்ச, அவளை இன்னும் நெருக்கிக்கொண்டேன்.

ஆனா நீ எனக்கு எப்பவுமே, என் பாப்பாதான்!!” என்று அவள் சொல்ல, அவள் இதழ்களை கவ்வினேன் காதலோடு.

-----------------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 03-08-2020, 12:44 AM



Users browsing this thread: 30 Guest(s)