30-07-2020, 10:31 PM
மலர், கலங்கிய கண்களோடு காரில் உட்கார்ந்திருந்தாள்.
ராஜ் மட்டும் வராவிட்டால் என்ன ஆகியிருக்கும்?? - அவளுக்கு நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது. எவ்வளவு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்? என்னை சர்வ சாதாரணமாக அந்த வெறி பிடித்த மிருகம் நாசம் பண்ணியிருப்பான். அப்புறம்.... அதான் என்கூட படுத்துட்டல்ல... இனிமே நான் எப்போ கூப்பிட்டாலும் வரணும். இல்லைன்னா நீ என்கூட படுத்துக் கிடந்ததை உன் புருஷனுக்கு சொல்வேன் என்பான். அந்த ஒரு அரை மணி நேரத்தில் என் வாழ்க்கையே நாசமாய் போயிருக்கும்.
ராஜ்.. ஐ லவ் யூ டா.... என்று தன் கணவனைக் காதலுடன் பார்த்தாள். வேலு தன்னைக் கசக்கியதை அவள் ராஜ்ஜிடம் சொல்லவில்லை. ஆனால் அதை நினைக்க நினைக்க அவளுக்கு மனம் குமுறியது. அழுதாள். வேணும். எனக்கு வேணும். ஒன்றும் இல்லாத விஷயத்துக்காக வீம்பு பண்ணிக்கொண்டு புருஷனை உதறித்தள்ளிவிட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். ராஜ்... இனிமே இப்படி பண்ணமாட்டேண்டா.... நீ சொல்றபடி கேட்டு நடப்பேன் என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.
ராஜ்க்கு, நிஷா தெய்வமாகத் தெரிந்தாள். நிஷா சொன்னதை நான் உதாசீனப்படுத்தியிருந்தால் என்னவாயிருக்கும்?? - அவனால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியவில்லை. மலரை இழந்திருப்பேன். எனது திமிரால்... வீம்பால்.... அலட்சியத்தால்... என் அழகு மனைவியை இழந்திருப்பேன். நிஷா... நீ great நிஷா. நீ சொன்னதை நான் நேற்றே காது கொடுத்துக் கேட்டிருந்தால் இந்தளவுக்கு கூட நடந்திருக்காது. அவன் கை மலர்மேல் படுவதற்கு முன்பே அவளை காப்பாற்றியிருப்பேன். வீணாவின் மேல் உள்ள மயக்கத்தால்... அறிவிழந்து மலரை தொலைக்கப் பார்த்தேனே....
கார் வீட்டுக்குள் நுழையும்போது அங்கே மோகன், பத்மா, தீபா, நிஷா என்று அனைவரும் சந்தோஷமாக இவர்களை எதிர்நோக்கி நின்றுகொண்டிருக்க, மலரின் மனம் நெகிழ்ந்தது. ஒரு சின்ன விஷயத்துக்காக இவர்களை உதறிவிட்டு.. எவ்வளவு சீப்பாக நடந்துகொண்டேன்!
நெகிழ்ச்சியோடு காரிலிருந்து இறங்கிய மலர், திடீரென்று, வாவ்...!!! என்று கண்கள் விரிய சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டே அத்தனை பேர் முன்னாடியும் ராஜ்ஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டு ஐ லவ் யூ ராஜ்... ஐ லவ் யூ என்க..... அவன் அப்போதுதான் கவனித்தான்.
அங்கே மாலை போடப்பட்டு... புத்தம் புது என்பீல்டு பைக் ஒன்று பள பள என்று நின்றுகொண்டிருந்தது.
ராஜ் சட்டென்று நிஷாவை நிமிர்ந்து பார்க்க.... அவள், அண்ணியோட ரொமான்ஸ் சூப்பர்... என்று சைகையால் அவனிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டே பைக் சாவியை அவனிடம் தூக்கிப் போட்டாள்.
ராஜ்க்கு மனம் குளிர்ந்தது. எப்போதோ நிஷாவிடம் சொல்லியிருந்தான். மலர் இப்படி ஒரு பைக்கில் தன்னோடு ஊர் சுற்ற ஆசைப்படுகிறாள் என்று. அவளை... மறுபடியும் நன்றியோடு பார்த்தான்.
கொஞ்ச நேரம் கழித்து, சோபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நிஷாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். தன் தலையால் அவள் தலையில் இடித்துச் சொன்னான்.
தேங்க்ஸ் நிஷா... தேங்க் யூ சோ மச்
ம்... அதெல்லாம் இருக்கட்டும். என்னையும் நீ பைக்ல வச்சிக் கூட்டிட்டுப் போகணும்
அது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான். நீங்கள்லாம் அதுல தப்பித்தவறி கூட உட்கார்ந்துடாதீங்க. தொலைச்சுப்புடுவேன்
நாங்க.. உட்காரக்கூடாதா..... உன்ன.... என்று நிஷா அவன் தோளில் பட் பட்டென்று அடிக்க..... அவன் திருப்பி அவளை அடித்தான். அவள் தலையில் தட்டினான். ஏய்.. ஏய்... என்று இவள் சிணுங்கினாள்.
ஏண்டீ அவன்கிட்ட வம்பு இழுக்குற? என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பத்மா.
இவரோட பைக்ல நம்மளையெல்லாம் கூட்டிட்டுப் போகமாட்டாராம். மலரை மட்டும்தான் கூட்டிட்டுப் போவாராம். ஸாருக்கு திடீர்னு பொண்டாட்டி மேல பாசம்
அவள் ஒழுங்கு காட்டினாள்.
பத்மாவுக்கு நிம்மதியாயிருந்தது. இப்போதுதான் குடும்பத்தில் எல்லார் முகத்திலும் சிரிப்பு வந்திருக்கிறது. கடவுளே நிஷாவுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்.
பைக் வாங்கிக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா... என்றான் ராஜ்.
நான்தான் வாங்கினேன்னு அண்ணிகிட்ட சொல்லிட்டு இருக்காத. அவங்களைப் பொறுத்தவரைக்கும் இது நீ வாங்கி present பண்ணினது. சரியா?
ம்...
அவன் சந்தோஷமாகத் தலையாட்டினான். எவ்வளவு பணம் தன்னிடம் இருந்தாலும், இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களை இவளால்தான் கொடுக்கமுடிகிறது என்று அவளை பாசத்தோடு பார்த்தான்.
சில நாட்களில்... மலர், தான் ராஜ்ஜோடு சந்தோஷமாக இருக்க நிஷா காட்டும் அக்கறையைப் பார்த்து மனதுக்குள் நெகிழ்ந்தாள். அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். நிஷா... என்ன மன்னிச்சுடு நிஷா. நான் இனிமே உன்ன எந்த விஷயத்திலும் காயப்படுத்த மாட்டேன். உன்னை மட்டுமில்ல. நம்ம வீட்டுல யாரையுமே கஷ்டப்படுத்த மாட்டேன்.
நிஷாவுக்கு மனம் குளிர்ந்தது. சந்தோஷமாகச் சிரித்தாள்.