28-07-2020, 02:18 AM
இங்கே -
மலர்க்கு, அவளது திருமணமான தோழி ஒருத்தி சொன்னது நினைவுக்கு வந்தது. மாமியார்கிட்ட முதல்லயே தலைகுனிஞ்சி பேச பழகிட்டீன்னா உன்ன கொட்டிக்கிட்டே இருப்பாங்கடி. கொஞ்சம் கெத்தாவே நடந்துக்க. ஆட்டோமேட்டிக்காக வழிக்கு வருவாங்க.
அவளது மிதப்பை இது இன்னும் அதிகப்படுத்தியது.
பத்மாவை மதிக்காமல் உதாசீனப்படுத்தினாள். எப்போது argument வந்தாலும் மாமியார் பத்மாவிடம்தான் தப்பு இருப்பதுபோல் அவர்களை நினைக்க வைத்தாள். ஏற்கனவே சட் சட்டென்று பேசும் பத்மா இதில் சுலபமாக விழுந்துவிட்டாள். விளைவு - மோகன் முன்னாலேயே மலர் பத்மாவிடம் எரிந்து விழுந்தாள்.
விஷயம் ராஜ் காதுக்குப் போனது. கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிப் போ மலர். அவங்க இருக்கப்போறதே இன்னும் கொஞ்ச காலம்.
அவன் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் பேசினான்.
அவள் மூளை வேறுவிதமாக யோசித்தது. இப்பவே பணிஞ்சி போயிட்டா காலத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். இப்போ நான் எடுக்கற முடிவைப் பார்த்துட்டு, இவ கோவக்காரி, பிடிவாதக்காரி, அவ சேஞ்ச் ஆகமாட்டா நாமதான் விட்டுக்கொடுக்கணும்னு இவங்க எல்லாரும் ஒரு முடிவுக்கு வரணும்!
அவள் தன் வீட்டுக்கு கிளம்பினாள். தடுத்தபோது, உனக்கு உன் அம்மாவை விட நான்தான் முக்கியம்னு எப்போ சொல்றியோ அப்போதான் வருவேன் என்று எரிக்கும் விழிகளால் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
ராஜ் அவளை சமாதானப்படுத்துவதற்காக போன் பண்ண, அது இன்னும் பெரிய சண்டையாக முடிந்தது.
அவளது வீட்டில் அவளுக்கு புத்திமதி சொல்ல, அவள் அதையெல்லாம் கேட்கும் நிலைமையில் இல்லை. ராஜ்க்கு உண்மையிலேயே என்மேல பாசம் இருந்தா என்கிட்டே வந்து கெஞ்சட்டுமே... என்று நினைத்தாள். மானம் ரோஷம் கெட்டு என்னால அங்க குப்பை கொட்டமுடியாது... என்றுவிட்டு, அக்கா வீணாவின் வீட்டுக்குப் போய்விட்டாள். இங்கே கொஞ்ச நாட்கள் இருந்தால் சமாதானமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில்... உன் வீடு மாதிரி நினைச்சுக்கோடி என்று சொல்லி, வீணா அவளை தங்கவைத்துக்கொண்டாள்.
ஆனந்த் தன் கொழுந்தியாளை நன்றாகப் பார்த்துக்கொண்டார். நீ எத்தனை நாள் வேணுமானாலும் இங்கே இருக்கலாம். உனக்கு என்ன வேணும்னாலும் ஒரு வார்த்தை மட்டும் சொல்லு. உடனே வாங்கிட்டு வந்திடுறேன்.
தேங்க்ஸ் மச்சான்.. என்றாள். வீணாவும் அவரும் சண்டை போடாமல் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரசித்தாள். ராஜ் ஏன் ஆனந்த் போல் நடந்துகொள்ள மாட்டேங்குறான் என்று வருத்தப்பட்டாள்.
ஒருவாரம் ஆகியும் வீணாவால் மலரை சமாதானப்படுத்த முடியவில்லை.
அவன் வந்து நான்தான் முக்கியம்னு சொல்லி கூப்பிட்டாத்தான் போவேன். இனிமேல் என்னை அவங்க முன்னாடி திட்டமாட்டேன்னு அவன் சொன்னாத்தான் போவேன்
மோகனும் பத்மாவும், நிஷாவும், ராஜ்ஜிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள்.
என் மேல தப்பிருந்தாத்தானே நான் இறங்கிப் போகணும்? பொட்டச்சிக்கு இவ்ளோ திமிரா? என்றான்.
நிஷாவுக்கு, தன்னிடம் எப்போதும் தன்மையாக நடந்துகொள்ளும் கண்ணனின் ஞாபகம் வந்தது. தனிமையில் அழுதாள். அவரிடம் இவள்தான் அடிக்கடி கோபப்பட்டிருக்கிறாள். எரிந்து விழுந்திருக்கிறாள். அவரோ, ராஜ் மாதிரி.... எப்பொழுதும் எடுத்தெறிந்து பேசியது கிடையாது.