28-07-2020, 02:17 AM
கண்ணன் வீட்டில் -
போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்திடலாம் என்றார் கண்ணன். அகல்யா லெட்டர் எழுதிவிட்டு ஓடிப்போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. காவ்யா அவளை எல்லா இடங்களிலும் தேடி நொந்துபோயிருந்தாள்.
உன் கழுத்துல உடனே தாலி கட்டணும்னு நெனச்சேன். அதுக்குள்ளே அகல்யா இப்படி பண்ணிட்டாளே...
காவ்யாவுக்கு அகல்யாவின் லெட்டர் கண் முன்னே வந்து போனது.
நீங்கள் என் காதலைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நான் என் காதலனைத் தேடிப் போகிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நானே தொடர்பு கொள்ளுகிறேன். என்னைத் தேடவேண்டாம்.
போலீஸ் ஸ்டேஷனில் அகல்யாவைப் பற்றிய தகவல்களை கொடுத்துவிட்டு மனதில் பாரத்தோடு திரும்பி வந்தார்கள். ஐயோ அகல்யா எப்படியெல்லாம் கஷ்டப்படப் போறாளோ... இப்படி பண்ணிட்டாளே படுபாவி.... அகல்யா திரும்ப வந்துடுடி ப்ளீஸ்...... - காவ்யா மனமுடைந்தாள். எனக்கு சந்தோஷமா இருக்க அதிர்ஷ்டமே இல்லையா...
கண்ணன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் ராஜ்ஜும் நிஷாவும் வந்து கெஞ்சிவிட்டுப் போனார்கள். இப்போது நிஷாவின் அழுகை வேறு அவளை வாட்டி எடுத்தது.
நீ இந்த நேரத்துல அழக்கூடாது. கோபப்படக்கூடாது. போலீஸ் அகல்யாவை நல்லபடியா நம்மகிட்ட ஒப்படைச்சிடுவாங்க. அவ நம்ம சொல் பேச்சு கேட்கலைன்னா நாம என்ன பண்ண முடியும்? அவ நல்லபடியா திரும்ப வருவா. திரும்ப வந்ததும் முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. என்றார்.