28-07-2020, 02:15 AM
சீனு -
அன்று, வீட்டிலிருந்து வெளியேறி, பெங்களூர் போய்விடலாம் என்று ஓடியவனுக்கு, நண்பன் பரத்திடம் இருந்து போன் வந்தது.
மச்சி எங்க இருக்க
பஸ் ஸ்டாண்டு போயிட்டிருக்கேண்டா. பெங்களூர் போகப்போறேன்
டேய்... போயிடாத. நீ உடனே என் வீட்டுக்கு வா
எதுக்கு?
முக்கியமான விஷயம். வீட்டுக்கு வா சொல்றேன்.
பரத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கே அவனது மனைவி சாந்தியின் பக்கத்தில், ஒரு அழகான பெண்... அழுதுகொண்டிருந்தாள். இவ நவீனோட லவ்வராச்சே! அவன் காட்டுன போட்டோல...நல்லா க்யூட்டா சிரிச்சிக்கிட்டு இருந்தா. இப்போ அழுறாளே
என்னாச்சுடா?.. என்றான்.
நவீன் அவனோட தாய்மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பாண்டிச்சேரி போனான். என்ன நடந்ததோ தெரியல. என்கேஜ்மென்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்களாம்.
மை காட்!
அவங்களை மீறி அவனுக்கு எதுவும் பண்ண முடியல போல. அகல்யாவுக்கு போன் பண்ணி ஸாரி சொல்லியிருக்கான்.
அகல்யா குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள்.
பாவம் அகல்யா, அவனை சின்சியரா லவ் பண்ணியிருக்கா... என்றாள் சாந்தி
சீனு வேகம் வேகமாக தன் போனை எடுத்தான். நவீன் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
எப்போ போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆப்னுதான் வருது. அகல்யா அவனை பார்த்தே ஆகணும்னு சொல்றா. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா - சாந்தி வருத்தமுடன் சொன்னாள்.
மச்சி.... நான் சாந்தியை பார்த்துக்க வேண்டியிருக்கு. நீதான் அகல்யாவை பாண்டிச்சேரி கூட்டிட்டுப் போகணும்.
டேய்.. அதுக்கெதுக்கு அகல்யா. நான் மட்டும் போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன். அவனை எப்படியாவது கூட்டிட்டு வரேன்
இல்லங்க. அவன் ஏதோ இக்கட்டான சூழ்நிலைல இருக்கிறான். அவங்க அவனுக்கு போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண ஏற்பாடு பன்றாங்க. நான் போய் நின்னாத்தான் அவங்க வீட்டுல எங்க காதலை புரிஞ்சுப்பாங்க. என்னைப் பார்த்ததும் அவனும் ஸ்ட்ராங்கா ஒரு முடிவு எடுப்பான்.
வேணாங்க.. நீங்க ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும். அதோட... உங்க வீட்டுல உங்களை தேடுவாங்க.
நான் நவீனை பார்க்கணும்..... ப்ளீஸ் - அவள் அழுதாள்.
ச்சே.. இந்தப் பொண்ணு அவன்மேல உயிரையே வச்சிருக்கா.
பாண்டிச்சேரில எந்த இடம்?.. என்றான் பரத்திடம்.
தெரியாது. அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டேன்.
நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். தனியாவே போறதா முடிவு பண்ணிட்டா. வீட்டுல லெட்டர் எழுதி வச்சிட்டு வந்துட்டாளாம்..
சீனுவுக்கு, அவளுடைய காதலையும், மன உறுதியையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.
எந்த வழியிலும் அவனை ரீச் பண்ண முடியல சீனு... என்றான் பரத்.
சரி மச்சி... நான் போய் என்னன்னு பார்க்குறேன். நான் அங்கதான் போயிருக்கேன்னு யாருக்கும் சொல்லாதீங்க
சரிடா என்றான் பரத்.
அகல்யா.. கண்ணீரை துடைத்துக்கொண்டு, வேகம் வேகமாக ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.