04-03-2019, 12:27 PM
இங்கபாரு.. தாமிராவை கொன்னுருவேன்னு நான் மிரட்டுனது உண்மைதான்.. எப்படியாவது அந்த ஆராய்ச்சி கட்டுரை வெளில வராம தடுக்கணும்னு நான் நெனச்சதும் உண்மைதான்..!! குறிஞ்சிக்கு நியாயம் கெடைக்கிறதுலாம் எனக்கு முக்கியம் இல்ல.. குடும்பமானம்தான் எனக்கு முக்கியம்.. அதுக்காக என்னவேனாலும் செய்வேன்..!! அந்த ஆராய்ச்சி விவகாரம் இப்போ அமுங்கி போயிருக்குறதுல எனக்கு சந்தோஷம்தான்.. தாமிரா போனப்புறம் அந்த பழைய டைரியை தீ வச்சு கொளுத்தினதும் நான்தான்..!! ஆனா.. தாமிரா காணாமப் போனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! இதுக்கு மேலயும் உனக்கு நம்பிக்கை இல்லன்னா.. போலீஸ்ல கம்ளயின்ட் பண்ணு.. கேஸ் போடு.. நான் பாத்துக்குறேன்.. சரியா..?? இப்போ எடத்தை காலி பண்ணு..!!" என்று வெறுப்பாக சொன்னான்.
அதற்குமேலும் வாக்குவாதத்தை வளர்க்க விரும்பாதவளாய் ஆதிரா அங்கிருந்து கிளம்பினாள்.. அவளுடன் கதிரும்..!! உற்பத்திக் கூடத்திற்குள் நுழைந்து.. தொழிற்சாலையின் வாயிற்கதவை நோக்கி நடந்தனர்..!!
"நான்தான் சொன்னேன்ல.. இவங்கட்ட பேசிலாம் எந்த பிரயோஜனமும் இல்லங்க ஆதிரா..!! நம்ம கைல ஸ்ட்ராங் பாயின்ட் இல்லாதவரை.. எல்லாமே வேஸ்ட்..!!" கதிர் முணுமுணுப்பாக சொன்னதை,
"ம்ம்..!!" ஆதிரா அமைதியாக ஆமோதித்தாள்.
தொழிற்சாலையை விட்டு வெளியேறி.. இருவரும் மீண்டும் ஜீப்பில் பயணித்தார்கள்..!! கதிர் கவனமாக காரோட்ட.. ஆதிரா ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.. முகிலன் மற்றும் மாந்திரிகவாதியின் பேச்சில் அவள் சற்றே ஆடிப் போயிருந்தாலும்.. முழு சமாதானம் ஆகவில்லை.. முகிலன் மீது அவளுக்கிருந்த சந்தேகத்தை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள முடியவில்லை..!!
திடீரெனத்தான் அவளுக்கு அந்த மெமரி சிப் பற்றிய ஞாபகம் வந்தது.. அதை அவ்வளவு பத்திரமாக தாமிரா பதுக்கியிருக்கிறாள் என்றால்.. அவளுடைய ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் நிச்சயம் அந்த மெமரி சிப்புக்குள் அடங்கியிருக்கவேண்டும் என்று தோன்றியது..!! உடனே.. அந்த மெமரி சிப் பற்றி கதிரிடம் தெரிவித்தாள்.. எந்த மாதிரி சூழ்நிலையில் அது தனது கைக்கு கிட்டியது என்று விளக்கினாள்.. அதைக்கேட்டு அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிக்கையிலேயே..
"அது என்ன பாஸ்வேர்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா கதிர்..??" என்று கேட்டாள்.
"இ..இல்லைங்க.. எனக்கு தெரியாது.. ஏன் கேக்குறீங்க..??"
"தாமிரா ஒருவேளை உங்கட்ட சொல்லிருக்கலாமோன்னு நெனைச்சேன்..!!"
"இ..இல்ல.. சொன்னது இல்ல..!!"
"ஹ்ம்ம்.. எனக்கு என்னவோ.. தாமிரா காணாமப் போனதுக்கும், அந்த மெமரி சிப்புக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி தோணுது கதிர்..!! அந்த பாஸ்வேர்ட் என்னன்னு தெரிஞ்சா ஈஸியா இருக்கும்.. அட்லீஸ்ட்.. அவளோட ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி எதாவது கெடைச்சா கூட நல்லது..!!"
"ம்ம்ம்ம்ம்ம்... எனக்கு ஒரு ஐடியா தோணுது.. சொல்லவா..??"
"சொல்லுங்க..!!"
"தாமிராவும் அவ ஃப்ரண்ட் இன்னொரு பொண்ணு.. பேர் என்னவோ.. கயல்விழியோ மலர்விழியோ.."
"அகல்விழி..??"
"யெஸ்ஸ்.. அகல்விழி..!! அவங்க ரெண்டு பேருந்தான் அந்த ஆராய்ச்சியை சேர்ந்து செஞ்சாங்க..!!"
"ஓ.. அப்படியா..??" ஆதிரா ஆச்சர்யமாக கேட்டாள்.
"ஆமாம்..!! அந்த பொண்ணை பார்த்து பேசினா.."
"குட்.. நல்ல ஐடியாதான்..!!"
"பட்.. அந்தப் பொண்ணோட காண்டாக்ட் டீடயில்ஸ் எதுவும் எனக்கு தெரியாது..!!"
"ஹஹ.. பரவால.. எனக்கு தெரியும்..!! தாமிராவோட சேர்ந்து ஒன்னு ரெண்டு தடவை அவ வீட்டுக்கு போயிருக்கேன்..!!"
"ஓ.. ஓகே ஓகே..!!"
"ஹ்ம்ம்ம்ம்.. நாம ஏன் இப்போவே அந்த அகல்விழியை பார்த்து பேசிட்டு.. அப்புறமா வீட்டுக்கு போகக்கூடாது..??"
"போலாமே..!! எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!"
"அப்போ.. அந்த ஜங்க்ஷன்ல லெஃப்ட் எடுத்துக்கங்க..!!"
ஆதிரா சொன்ன அந்த சந்திப்பில் இடதுபுறம் திரும்பி.. அடுத்த ஊருக்கு செல்கிற வழியில் தனித்திருந்த அகல்விழியின் வீட்டை அடைவதற்கு.. அதன்மேலும் பதினைந்து நிமிடங்கள் ஆயின..!! சின்னஞ்சிறிய மூங்கில் குடிசைதான்.. இவர்கள் சென்ற நேரத்தில், அந்த பத்து வயது சிறுமிதான் வீட்டில் தனியாக இருந்தாள்.. அகல்விழியின் தங்கை..!! வாசலை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தவள்.. இவர்கள் ஜீப்பில் சென்று வீட்டு வாசலில் இறங்கியதும்.. ஆதிராவை அடையாளம் கண்டுகொண்டு புன்னகைத்தாள்..!!
"அக்காஆஆ.. நல்லாருக்கிங்களா..??"
"ஹேய் பாப்பா.. ஞாபகம் வச்சிருக்கியா என்னை..?? வேல்விழிதான உன் பேரு..??"
"ஆமாக்கா.. நீங்களும் என்பேரை கரக்டா ஞாபகம் வச்சிருக்கிங்க..?? வாங்கக்கா.. வீட்டுக்குள்ள வாங்க..!!"
ஆதிராவையும் கதிரையும் அன்பாக உபசரித்து.. வீட்டுக்குள் அழைத்து சென்றாள் அந்த வேல்விழி.. பாயெடுத்து விரித்து போட்டவள்..
"உக்காருங்கக்கா.. அம்மா இப்போ வந்திருவாங்க..!! டீ சாப்பிடுறீங்களா..??" என்று கேட்டாள்.
"இல்லம்மா.. அதுலாம் வேணாம்.. வா.. நீ வந்து உக்காரு..!!" அவளை அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்ட ஆதிரா,
"வீட்ல யாரும் இல்லையா.. நீ மட்டும் தனியா இருக்க.. எல்லாரும் எங்க போயிருக்காங்க..??" என்று கேட்டாள்.
"அம்மா கடைக்கு போயிருக்காங்க.. அப்பா டாஸ்மாக் போயிருக்காரு.. அண்ணணுக ரெண்டு பேரும் டீ எஸ்டேட்க்கு வேலைக்கு போயிருக்காங்க..!!" கடகடவென புன்னகையுடன் ஒப்பித்தாள் வேல்விழி.
"அகல்விழி..??"
ஆதிரா அவ்வாறு இயல்பாக கேட்க.. அத்தனை நேரம் வேல்விழியின் உதட்டில் இருந்த அந்த சிரிப்பு இப்போது பட்டென காணாமல் போனது.. அந்த குட்டிப் பெண்ணின் முகத்தில் குப்பென ஒரு இருள் வந்து அப்பிக்கொண்டது..!! கண்களை அகலமாய் விரித்து மிரட்சியாக ஆதிராவை பார்த்தவள்.. பிசிறடிக்கிற குரலில் தட்டு தடுமாறி சொன்னாள்..!!
"அ..அக்காவை.. அக்காவை குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டா..!!"